தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/செல்லமே/கோவையில் நாளை கண்காட்சி 

கோவையில் நாளை கண்காட்சி 

கோவையில் நாளை கண்காட்சி 


ADDED : ஜூன் 22, 2025 11:20 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 22, 2025 11:20 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பப்பிக்குள் இருக்கும் தனித்திறனுக்கு மேடை அமைத்து தரும் வகையில், கோவை மான்செஸ்டர் கென்னல் கிளப் சார்பில், கோவை, அவிநாசி ரோடு, நவஇந்தியாவில் உள்ள, இந்துஸ்தான் கலை அறிவியல் கல்லுாரி மைதானத்தில், நாளை அனைத்து இன பப்பிகளுக்கான கண்காட்சி நடக்கிறது.

மொத்தம் 11 பிரிவுகளில், இன வாரியாக, பப்பிகளுக்கான கண்காட்சி நடக்கிறது. நாட்டு இன நாய்களுக்கும், பிரத்யேக போட்டி உண்டு. இதில் பங்கேற்று வெற்றி பெறும் பப்பிகளுக்கு, சாம்பியன்ஷிப் போட்டி நடத்தி, அதில் தேர்வாகும் முதல் எட்டு பப்பிகளுக்கு, கோப்பை, சான்றிதழ் வழங்கப்படுகிறது. போட்டியில் பங்கேற்க வரும் வித்தியாசமான பப்பிகளை காண, பார்வையாளராகவும் கலந்து கொள்ளலாம். கண்காட்சியில் பங்கேற்கும் பப்பியின் வித்தியாசமான முகபாவனையை, சேட்டையை ரசிக்கலாம்.

இதுசார்ந்த கூடுதல் தகவல்களுக்கு, 95852 66566/ 98422 30865 என்ற எண்ணிற்கு தொடர்பு கொள்ளலாம் என, கண்காட்சி ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us