sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, டிசம்பர் 14, 2025 ,கார்த்திகை 28, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

வாராவாரம்

/

செல்லமே

/

ஜாலியா ஒரு கென்னல் டூர் போலாம் வர்றீங்களா!

/

ஜாலியா ஒரு கென்னல் டூர் போலாம் வர்றீங்களா!

ஜாலியா ஒரு கென்னல் டூர் போலாம் வர்றீங்களா!

ஜாலியா ஒரு கென்னல் டூர் போலாம் வர்றீங்களா!


ADDED : ஏப் 13, 2024 09:32 AM

Google News

ADDED : ஏப் 13, 2024 09:32 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சுற்றிலும் மலை, பச்சை பசேல்னு அசையற மரங்கள், சில்லுன்னு காற்று, கொளுத்துற வெயில்லயும் குளிர்ச்சியா இருந்துச்சு கோவை, சிறுவாணி ரோடு. ஒரு டாக்ஸி, எங்களை ஓவர்டேக் பண்ணுச்சு. அதுல, தலையை வெளியே நீட்டி, 'பாலோ மீ...'ங்கற ரியாக் ஷன் குடுத்துச்சு ஒரு கோல்டன் ரெட்ரீவர்.

அந்த பெட் டாக்ஸிய பின் தொடர்ந்தோம். மத்துவராயபுரம் ஜங்ஷன் தாண்டுனதும்,ஒத்தையடி பாதையில் வண்டி வேகமெடுத்தது. தோட்டத்துக்கு மத்தியில் அந்த டாக்ஸி நின்ற இடத்தில், 'தி பார்க் ஹவுஸ்' என்ற போர்டு பளிச்சிட்டது. இதோட ஓனர் ஜெகனை சந்தித்து அறிமுகப்படுத்திக்கிட்டோம். கென்னல் டூர் கூட்டிகிட்டு போனார் ஜெகன்.

நுழைவாயிலில் ஒரு குட்டிக்குளம்; அதை எட்டிப்பார்த்ததும் குடுகுடுன்னு ஓடிவந்துச்சு டர்ட்டில்ஸ். சைடுல கிரீன், ரெட் கலர்ல ரெண்டு இக்வானா, சன்பாத் எடுத்துட்டு இருந்துச்சு. வான்கோழி, கினி கோழி, பேன்சி பிஜின்ஸ், ஓரியன்டல் பிரில்ன்னு அங்கயும் இங்கயும் ஜாலியா சுத்திட்டு இருந்துச்சு பேர்ட்ஸ்.இத்தன வெரைட்டியான்னு ஆச்சர்யத்தோடு கேட்டோம். இது வெறும் டீசர் தாங்க...ன்னு சொல்லிட்டு, கென்னல் ஆக்டிவிட்டிய சொல்ல ஆரம்பிச்சார்.

''நான் பேசிக்கா பெட்ஸ் லவ்வர். என்கிட்ட, 11 டாக்ஸ் இருக்கு. நீங்க என்ட்ரன்ஸ்ல பாத்த எல்லா பெட்ஸூம், என்னோட கலெக் ஷன்ஸ்தான். இவங்களுக்காக நேச்சர் சூழல்ல பெட்ஸ் ஜாலியா இருக்கற மாதிரி கென்னல் உருவாக்குனேன். ஈஷா பக்கத்துல இருக்கறதால புரோபஷன்னல்லா சில செட் அப் கொண்டுவந்தேன். கோவைக்கு டூர் வர்ற பெட் லவ்வர்ஸ் இங்கயும் விசிட் அடிப்பாங்க.

வெளிநாடுகளுக்கு டூர் போறவங்க,ஜாப் போறவங்க, வருஷ கணக்குல, அவங்க பெட்ஸ இங்க தங்க வைக்கிறாங்க. போர்டிங் விடுற செல்லப்பிராணிகளோட டெய்லி ஆக்டிவிட்டிஸ்ச ஓனருக்கு அப்டேட் பண்ணிடுவோம்''ன்னு சொல்லிட்டு இருக்கும் போதே, பெல்ஜியம் மெலன்வா ப்ரீடு, ஸ்விம்மிங் பூல்ல ஜம்ப் பண்ணுச்சு.

வெயில் அடிக்கறதால ஈவினிங் ஆகிட்டா, ஸ்விம் பண்ண போயிடுவாங்க என்றார்.வேற என்னலாம் பண்றீங்க? ''குரூமிங், பெட் போட்டோகிராபி, பிசியோதெரபி பண்றோம். வீட்டுல பெட் இல்லாதவங்க, இங்க வந்து, பிரென்ட்லி பெட்ஸ கொஞ்சலாம். பெட் ஓனர்களுக்கு ஒர்க் ஷாப் எடுக்குறோம்'' என்றார்.

என்னது... ஒர்க் ஷாப்பா? ன்னு புருவங்களை உயர்த்தியதும்,'' பெட் வளர்க்குற பலருக்கு, அதை எப்படி பேஸிக்கா ஹேண்டில் பண்றது, வீட்டுலயே குரூம் பண்றது, ஒன் அண்டு டூ டிரெயினிங் கொடுக்கறது தொடர்பான கிளாஸ் நடத்துறோம். இதுக்கு சிலபஸ்லாம் இருக்கு,'' என்றார்.அதுசரி... விட்டா, பரீட்சல்லாம் வைப்பாரு போல இருக்கே!






      Dinamalar
      Follow us