ADDED : மார் 09, 2024 08:43 AM

பொறந்து மூணு வயசு தான் ஆகுது. ஆனா குறும்புக்கு பஞ்சமில்லை. இவனோட குட்டி ரியாக்ஷன்களை போட்டோக்களால் நிரப்பி இருக்கேன் என்கிறார் சென்னையைச் சேர்ந்த ஸ்ருதி சத்யா.
'' கோரைப்பல் தான் கூப்பரோட அழகு. வீட்டுல சண்டை வந்தா பஞ்சாயத்து பண்றது, சோகமா இருந்தா சேட்டையால என்னோட மூட மாத்துறதுன்னு, கூப்பரோட குறும்புகளை அடுக்கிக்கிட்டே போகலாம். என்னோட டிரஸ் கலர்ல அவனுக்கும் டிரஸ் வாங்குறது வழக்கம். வெளியிடங்களுக்கு போனா, டிரஸ் இல்லாம கிளம்ப மாட்டான். அவனுக்கு, 'ப்ரீஸ்', 'புரோஸ்', 'ஸ்டே', 'ஹக்'ங்கற வோர்ட்ஸ், சொல்லி கொடுத்துருக்கேன் . போட்டோ எடுக்கும் போது, 'கூப்பர்... போஸ்!, ஸ்டே!'ன்னு சொன்னா, அப்படியே இருப்பான். க்யூட்டா போஸ் கொடுப்பான். சமீபத்தில், பீச்ல அவனோட போட்டோ ஷூட் நடத்துனேன். ரொம்ப கூலா போஸ் கொடுத்தான். தண்ணிய கண்டா குதிச்சி ஆட்டம் போடுவான். போட்டோ ஷூட் முடிஞ்சதும், நானும், கூப்பரும் அலையோட உருண்டு, மணல்ல புரண்டு விளையாடினோம்,'' என்றார், பெருமிதமாக...கூப்பரு, நீ ரொம்பவே கொடுத்து வச்சுருக்க போல...