ADDED : மார் 16, 2024 07:56 AM

ஆசை,ஆசையா மீன் வாங்குற பலருக்கும் எப்படி பராமரிக்கணும்னு தெரியறதில்லை என்கிறார், திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த மீன் பண்ணை உரிமையாளர் சஞ்சய்.
அவர் கூறும் டிப்ஸ்:
கலர்பிஷ், 500க்கும் அதிகமான வெரைட்டி இருக்கு. ஒரே தொட்டிக்குள்ள எந்தெந்த மீன்கள வளர்க்கலாம்கிற ஐடியாவ, கடை ஓனர்களே சொல்லுவாங்க. 10 ரூபாய்க்குகூட வளர்ப்பு மீன் வாங்கலாம். எத்தனை மீன் வளர்க்கலாம் என முடிவு பண்ணிட்டு தொட்டி வாங்கணும். சிறிய ரக மின் மோட்டர், பில்டர், ஹீட்டர், லைட்டிங் சிஸ்டம் கட்டாயம் வாங்கணும். ஏசி ஹால்ல தொட்டி இருந்தா ஹீட்டர் போட்டு விடணும்.
குளோரின் கலக்காத தண்ணீர் தான் மீனுக்கு நல்லது. 20 நாளைக்கு ஒருமுறை தொட்டியில பாதி அளவு தண்ணிய மாத்திடணும். மீன்கள் இறக்குறதுக்கு இரண்டே காரணம் தான் இருக்கு.
உணவு: சரியான அளவு போடணும். பிஷ் புட், பவுடர் மாதிரி இருக்கும். நிறைய போட்டுட்டா, அதுவே விஷமா மாறிடும்.
தண்ணீர்: சுத்தப்படுத்தி அடிக்கடி மாத்தணும். மீனோட வேஸ்ட், புட் வேஸ்ட் ரெண்டுமே தண்ணில கலந்து, பாக்டீரியா, பூஞ்சை தொற்று உருவாகும். இவை மீன்களோட செதில்களில் வெள்ளையா ஒட்டிக்கும். உண்ணி, செதில்கள் உதிரும், ஆக்டிவ்வா இல்லாம இருக்கறது, நோய் அறிகுறின்னு தெரிஞ்சிக்கணும்.
இதுக்கு, மார்கெட்டுல மருந்துகள் கிடைக்குது. வாஸ்து, அலங்காரம், ஆடம்பரத்தை தாண்டி, மீன் வளர்த்தா, நீங்க தனிமையா இருக்கற மாதிரி பீல் வராது. அது நீந்துறதை கொஞ்ச நேரம் பாத்துக்கிட்டு இருந்தா, மைண்ட்டுக்கு மட்டுமில்ல, நம்ம கண்ணுக்கும் ரொம்ப நல்லது என்கிறார், சஞ்சய்.

