sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், செப்டம்பர் 08, 2025 ,ஆவணி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

வாராவாரம்

/

செல்லமே

/

புறா சிறகு விரிக்கும் நம் மனம்

/

புறா சிறகு விரிக்கும் நம் மனம்

புறா சிறகு விரிக்கும் நம் மனம்

புறா சிறகு விரிக்கும் நம் மனம்


ADDED : ஜூன் 07, 2025 09:01 AM

Google News

ADDED : ஜூன் 07, 2025 09:01 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

''அ ந்தகாலத்து அரண்மனைகளிலும், கோட்டைகளிலும் சிறகு விரித்த புறாக்களை இன்று வீடுகளிலும் வளர்க்கலாம். இரு புறாக்கள் வீட்டில் இருந்தாலே அழகான தோற்றம் தருவதோடு, மனதிலும் ஒருவித சிலிர்ப்பை ஏற்படுத்தும்,'' என்கிறார் மதுரையை சேர்ந்த, 'ப்ரீடர்' மற்றும் பல் மருத்துவர் சேதுராமன்.

சிறு வயதில் இருந்தே புறா உள்ளிட்ட செல்லப்பிராணிகளை வளர்த்து வரும் இவர், வித்தியாசமான புறாக்கள் பற்றி நம்மிடம் பகிர்ந்தவை:

வீட்டில் செல்லப்பிராணியாக வளர்க்கும் புறாக்களில், 40 - 50 வகைகள் உள்ளன. ஒவ்வொரு வகையிலும் நிறம் உட்பட சில அடையாளங்களுக்கு ஏற்ப வெவ்வேறு பெயர்களில் அழைக்கப்படுகிறது. கருப்பு, வெள்ளை கலந்த நிறத்தில் இருந்தால் 'ஜீனி';இறக்கையில் இரு கோடுகள் இருந்தால் 'சப்ஜா';கிரே கலரில் புள்ளிகள் இருந்தால் 'குல்தர்'; வெள்ளை நிறத்தில் இருக்கும் புறா வகையை 'அல்பினோ' எனவும் அழைப்பதுண்டு.

எந்த வகை புறா வளர்த்தாலும், அதற்காக சிறிது இடம் ஒதுக்க வேண்டும். எந்நேரமும் கூண்டிற்குள் வைத்திருக்க கூடாது. சுத்தமான தண்ணீர் தருவது, அதன் இருப்பிடத்தை தினசரி சுத்தப்படுத்துவது அவசியம்.

தற்போது ஒவ்வொரு புறாவின் உடலியல் தன்மைக்கேற்ப, பிரத்யேகமாக உணவுகள் கடைகளில் கிடைக்கின்றன. நிறைய வகை புறாக்கள் இருந்தாலும், சில வெரைட்டி புறாக்கள் உரிமையாளரிடம் எளிதில் நெருங்குவதோடு, வித்தியாசமான உடலமைப்பு கொண்டிருக்கும்.

கர்ணம்


இப்புறாவின் தனிச்சிறப்பே வானத்தில் உயரே பறந்து, உடனே பல்டி அடிப்பது தான். அக்காட்சியை பார்க்கவே பிரமிப்பாக இருக்கும். நடிகர் தனுஷ் நடித்த 'மாரி' திரைப்படத்தில், கர்ணம் புறா பல்டி அடிப்பது போன்ற காட்சி இடம்பெற்றிருக்கும். இது, உரிமையாளருடன் எளிதில் நெருங்கிவிடும்.

லக்கான்


லக்கான் வகை புறா, மயில் போலவே, இறக்கையை விரிக்கும். இதில், இந்திய வகை புறா, சற்று சிறியதாகவும், அமெரிக்கா நாட்டை சேர்ந்த லக்கான் புறா, அளவில் பெரியதாகவும் இருக்கும். அதிக உயரம் பறக்காது. இது இறக்கை விரிக்கும் அழகே தனிதான். இதில், நிறைய நிறங்கள் இருக்கின்றன.

முஸ்கி


இதன் தலையில் மட்டும் வெள்ளை நிறத்தில் கோடு இருக்கும். தலையின் மேல் 'ஸ்பைக்' போன்ற கொண்டையுடன், கழுத்தை மட்டும் அசைத்து கொண்டே இருக்கும். இதை 'ஷேக்கிங் நெக்' என செல்லமாக அழைப்பர். சின்னதாக விசில் அடித்தாலே, கையில் வந்து உட்காரும்.

கட்டை மூக்கு


மதுரையில் தான் இந்த வகை புறாக்களை அதிகம் காணலாம். இதன் மூக்கு, சிறியதாக கட்டையாக இருக்கும். கண்ணை சுற்றி வளையம் போல, தசை இருக்கும். முகம் சிறியதாக, வித்தியாசமான தோற்றத்தில் காணப்படும்.

ரோமர்


கோவில் புறாக்களில் இருந்து இனப்பெருக்கம் செய்யப்பட்டது தான் இந்த, 'ரேசிங்' ரோமர் புறா. இது புத்திசாலியானது. சிறியதாக இருக்கும் போதே வளர்த்தால், வளரும் இடத்தை அடையாளம் கண்டு கொள்ளும். இதற்கு பயிற்சி அளித்தால், எவ்வளவு துாரம் பறந்து சென்றாலும், மீண்டும் வீட்டை வந்தடைந்துவிடும். இதில் நிறைய வெரைட்டி இருக்கின்றன.






      Dinamalar
      Follow us