செல்லப்பிராணி 'சோட்டூ'க்காக போட்டுக்கொள்ளுங்க ஒரு 'டாட்டூ!' முத்தான வாய்ப்பு 10ம் தேதி வரை...
செல்லப்பிராணி 'சோட்டூ'க்காக போட்டுக்கொள்ளுங்க ஒரு 'டாட்டூ!' முத்தான வாய்ப்பு 10ம் தேதி வரை...
ADDED : பிப் 07, 2025 10:36 PM

''செல்லப்பிராணிக்கும், அதை வளர்ப்பவர்களுக்கும் இடையே இருக்கும் உறவை, உணர்வை, டாட்டூ வாயிலாகவும், வெளிப்படுத்த முடியும். இதைபலரும் விரும்புவதால், வரும் 10ம் தேதி வரை, டாட்டூ இயக்கம் நடத்தி, அதில் கிடைக்கும் தொகையை, ஆதரவற்ற செல்லப்பிராணிகளை பராமரிக்கும் தன்னார்வ அமைப்புகளுக்கு வழங்க முடிவெடுத்துள்ளோம்,'' என்கிறார், டாட்டூ ஆர்டிஸ்ட் விக்கிஜே.
சென்னை, சைதாப்பேட்டையில் உள்ள, 'இங்க் ஸ்கிரிப்ட் டாட்டூஸ்' உரிமையாளர் விக்கிஜே, செல்லப்பிராணிகளுக்கான டாட்டூ பற்றி, நம்மிடம் பகிர்ந்தவை:
நம் உடலில் உள்ள தோலில் மூன்று அடுக்குகள் இருக்கும். இதில் இரண்டாவது அடுக்கில், ஊசி கொண்டு வரையும்போது, இங்க் தங்கிவிடும். முதல் அடுக்கான மேல் தோல் உரிந்து, புதிய தோல் உருவாகும்போது, டாட்டூ அப்படியே நிரந்தரமாக பதிந்துவிடும். டாட்டூ கலை, இளைஞர்கள் மத்தியில் டிரெண்டாக காரணம், விரும்பிய உருவங்கள், பெயர்களை நிரந்தரமாக, தோலில் பதித்து கொள்ளும் நுட்பமே.
சமீபகாலமாக, செல்லப்பிராணிகளின் உருவங்களை டாட்டூவாக போட்டுக்கொள்ள பலரும் விரும்புகின்றனர். தன்னை விட்டு பிரிந்தவை, தற்போது உடனிருக்கும் செல்லப்பிராணிகளின் முகம், கால்தடம், காது, அதன் பெயர்களை டாட்டூவாக போட்டு கொள்கின்றனர்.
இதற்கான டிசைன் உருவாக்கும் முன்பே, செல்லப்பிராணியுடன் நடந்த மறக்க முடியாத சம்பவங்கள், நிகழ்வுகளை கஸ்டமர் கூறுவர். அதன் சாயல் இருக்குமாறு வரைவது, என் தனித்துவ ஸ்டைல்.
பாதுகாப்பு முக்கியம்
எனக்கும் செல்லப்பிராணிகளை பிடிக்கும் என்பதால், உரிமையாளர்களின் உணர்வுகளை புரிந்து கொள்ள முடியும். சிலர், செல்லப்பிராணியின் முடியை எடுத்து வந்து, டாட்டூ இங்கில் கலந்து வரையுறுமாறு கூறுவர். அப்படி செய்ய முடியாது என்பதோடு, தோல் பாதுகாப்புக்கு ஒவ்வாத காரியங்களை செய்யவே மாட்டேன் என கூறிவிடுவேன். ஏனெனில், என்னை நம்பி டாட்டூ போட்டு கொள்ள வருவோரின், தோல் பாதுகாப்பு மிக முக்கியமான ஒன்று. இதற்காக, ஆர்கானிக் இங்க் மட்டுமே பயன்படுத்துகிறேன்.
செல்லப்பிராணிகள் மீது பலரும், அதீத அன்பு வைத்திருப்பதால், பிப்., 10 வரை, டாட்டூ இயக்கம் நடத்தி, 100 பேருக்கு பெட்ஸ் டாட்டூ போட முடிவு செய்துள்ளோம். இதில் வசூலாகும் தொகையை, ஆதரவற்ற செல்லப்பிராணிகளை பராமரிக்கும் அமைப்புகளுக்கு வழங்கப்படும். இதில், 18 வயதுக்கு மேற்பட்டோர் பங்கேற்கலாம். என்னுடன், டாட்டூ ஆர்டிஸ்ட் கிஷோத்குமாரும் இணைகிறார்.
தொடர்புக்கு: inkscri pttattoos14@gmail.com