
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
உங்கள் பூனைக்கு சத்துள்ள ஸ்நாக்ஸ் செய்து கொடுத்து அசத்துங்க.
இதற்கு, சிக்கன், கேரட், பச்சைபட்டாணி ஆகியவற்றை தனித்தனியாக வேக வைத்து கொள்ளவும். வேகவைத்த சிக்கன் துண்டுகளை மிக்ஸியில் போட்டு அரைக்கவும். இதில், கேரட், பச்சைபட்டாணியை மசித்து சேர்க்கவும்.
சிறிது ஓட்ஸ் பவுடரை இதன்மீது துாவி, சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசைந்து கொள்ளவும். இதைநன்கு பரப்பி, சிறு சிறு துண்டுகளாக வெட்டி கொள்ள வேண்டும்.
வித்தியாசமான வடிவங்களில் கடைகளில் கிடைக்கும் சிலிக்கான் மோல்டுகளை பயன்படுத்தியும் வெட்டி கொள்ளலாம். மைக்ரோவேவ் ஓவனில், 350 டிகிரியில், 15 நிமிடம் வைத்து எடுத்தால், மொறு மொறு ஸ்நாக்ஸ் ரெடி. இதை காற்று புகாத பாட்டிலில் அடைத்து, இரு வாரங்கள் வரைகொடுக்கலாம்.

