ஒட்டிக்கோ... கட்டிக்கோ!:டிரெண்டாகும் பெட்ஸ் காஸ்ட்யூம்
ஒட்டிக்கோ... கட்டிக்கோ!:டிரெண்டாகும் பெட்ஸ் காஸ்ட்யூம்
ADDED : மார் 16, 2024 07:56 AM

ஸ்டைலா, மாஸா என்ட்ரீ கொடுத்து, பங்ஷன்களில் ஆடியன்ஸ்களின் ஹார்ட்டீன் எமோஜிக்களை குவிக்க, மாடர்ன் டிரஸில் பெட்ஸ்களை அலங்கரிப்பது டிரெண்டாகி வருகிறது.நம்ம வீட்டு விசேஷத்துலேயும், ஹல்தி, மெஹந்தி, ப்ரீ வெட்டிங் போட்டோ ஷூட், ப்ரீ வெட்டிங் பார்ட்டின்னு, வெஸ்டர்ன் கல்ச்சர் வந்துடுச்சு. மணமக்களோட டிரஸ் கலர், டிசைன்லயே அவங்க வீட்டு பெட்டுக்கும், டிரஸ் டிசைன் பண்றது தான், இப்போ டிரெண்டாகும் பேஷன். பெட் பேரன்ட் விரும்பும் டிரஸ்கள் பற்றி, கோவையில் உள்ள 'லே ஷீரோ' பெட்ஸ் பேஷன் பொட்டிக் நிறுவனர் ஷ்ராவனிரெட்டி நம்மோடு பகிர்ந்து கொண்டார்.
''சமீபத்துல தான், பெட்ஸ்களுக்கு டிரஸ் காஸ்ட்யூம் பண்ண ஆரம்பிச்சேன். நண்பர்கள், உறவினர்கள் தாண்டி, 100க்கும் மேல ஹேப்பி கஸ்டமர்ஸ் இருக்காங்க. பொண்ணா இருந்தா, லெஹங்கா, பிராக், ஸ்கர்ட் டாப், சோலியும், பையனா இருந்தா, ஷர்ட், டி-சர்ட், பேண்ட், வெஸ்ட் கோர்ட்டுன்னு வித்தியாசமான காஸ்ட்யூம்கள் தைக்கிறோம். வெறும் மூணு அளவுகள்ள இந்த டிரஸ் டிசைன் பண்றோம்.
ஒட்டிக்கோ கட்டிக்கோ மாடல்ல வெல்குரோ இணைச்சு தைக்கிறோம். சம்மர், வின்டர்னு சீசன் டிரஸ் கிடைக்கும். பங்ஷன்களுக்கு, பேஷன் ஹேர் கிளிப், ஸ்டோன் நெக்லஸ், டை, கூலர்னு வித்தியாசமான அலங்கார பொருட்கள் கிடைக்குது. பெட்ஸ்களுக்கு டிரஸ் போட்டு விடுறது, பேஷன் தான்டி, அதோட தோல், முடிக்கும், செக்யூரிட்டியா இருக்கும். பெட்ஸ் அலங்கரிச்சு, போட்டோ கிளிக்கினால், உங்க வீட்டு பங்ஷன பத்தி தான் ஊரே பேசும்,'' என்றார்.

