ADDED : மார் 23, 2024 02:03 PM

உங்க வீட்டு செல்லக்குட்டியான பெட்ஸ்களுக்கு இந்த கேக் வாங்கி, வெட்டி, ஊட்டியும் விடலாம் என்கிறார், 'ஹாப்பி பப்பி கேக்ஸ்' இணை நிறுவனர் ஜீஷான்.செல்லப்பிராணிகளுக்கும் கேக் வெட்டி, பர்த் டே கொண்டாடுறது டிரெண்டாகிட்டு வருது.
இந்த கேக், உங்க பெட் சாப்பிடுற மாதிரி தயாரித்து, ஓனர்களோட தேடலை பூர்த்தி செய்திருக்கிறது, ஹாப்பி பப்பி கேக்ஸ் நிறுவனம். இந்த கான்செப்ட் பற்றி கேட்டதும், இதன் இணை நிறுவனர் ஜீஷான் ஆர்வமாய் பகிர்ந்து கொண்டார்.''பெட்ஸ் செலிபிரேஷன்களுக்கு யுனிக்கான கான்செப்ட் யோசிச்சப்ப தான், ஹாப்பி பப்பி கேக்ஸ் கிளிக்காச்சு. பொதுவா செல்லப்பிராணிகள், கேக் சாப்பிடக் கூடாது. இதனால, டாக்டர்ஸ் அட்வைஸ்படி, பப்பி சாப்பிடுற பொருட்களை வச்சு, கேக் தயாரிச்சோம்.கிளவுட் கிச்சன் முறையில, பெங்களூரு, மும்பைய தலைமையிடமா கொண்டு, இந்தியா முழுக்க, பப்பி கேக் டெலிவரி பண்றோம். ஆன்லைன்ல ஆர்டர் பண்ணதும், 4 மணி நேரத்துக்குள்ள கேக் வீடு தேடி வரும். சிக்கன், மட்டன், பீனட்பட்டர், கேரட், பனானா ஓட்ஸ், பம்கின் பிளேவர்ஸ்ல கேக் கிடைக்கும். இதுல, கிரீம், சால்ட், சுகர், மைதா எதுவும் சேர்க்கமாட்டோம். உங்க பப்பிக்கு ஸ்பெஷலா ரெடி பண்ணியிருக்கறதால, கேக் வெட்டி, ஊட்டிவிட்டு கொண்டாடலாம்,'' என்றார் ஜீஷான்.இது பப்பி கேக். நோ..... ஷேரிங்!

