ADDED : ஜூன் 15, 2024 08:18 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோவை மான்செஸ்டர் கென்னல் கிளப் சார்புல, வர்ற 23ம் தேதி, கோவை, நவ இண்டியா, இந்துஸ்தான் கலை அறிவியல் கல்லுாரியில, சேம்பியன்ஷிப் டாக் ஷோ நடத்துறாங்க.
உங்க பப்பியோட அழகு, அறிவு, தனித்திறமையை காட்டுறதுக்கான நேரம் வந்தாச்சு. கிட்டத்தட்ட 11 டைட்டில்ல, போட்டி நடத்துறாங்க. எல்லா ஒரிஜினல் ப்ரீட்சும் கலந்துக்கலாம். கன்னி, கோம்பை, சிப்பிப்பாறைன்னு, நாட்டு நாய்கள் வளக்குறவங்களுக்கு, பிரத்யேகமா போட்டி இருக்குது.
இதுல, டைட்டில் வின் பண்ற டாக்ஸ் மட்டுமில்லாம, பெஸ்ட் பப்பி, இண்டியன் ப்ரீட், பெஸ்ட் ஹேண்டுலர், பெஸ்ட் ஜூனியர் ஹேண்டுலருக்கும், மெடல், சர்டிபிக்கேட் காத்திருக்கு. அதனால, உங்க செல்லக்குட்டியோட, கோயமுத்துார் வந்துடுங்க. போட்டி பத்தி தெரிஞ்சிக்கிறதுக்கு, 98430 79767/ 95852 66566 எண்களுக்கு டயல் செய்யலாம்.