sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

வாராவாரம்

/

செல்லமே

/

உங்க செல்லத்தை அப்படியே துாக்கிட்டு வந்துடுவோம்!

/

உங்க செல்லத்தை அப்படியே துாக்கிட்டு வந்துடுவோம்!

உங்க செல்லத்தை அப்படியே துாக்கிட்டு வந்துடுவோம்!

உங்க செல்லத்தை அப்படியே துாக்கிட்டு வந்துடுவோம்!


ADDED : ஜூலை 27, 2024 11:57 AM

Google News

ADDED : ஜூலை 27, 2024 11:57 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வெளியூர், வெளிநாடுகளுக்கு குடிபெயர்வோரின், மிக முக்கிய கவலையாக இருப்பதே, வீட்டில் வளர்க்கும் செல்லப்பிராணியை எப்படி உடன் கொண்டு செல்வது என்பதாக தான் இருக்கும். இனி அந்த கவலையே வேண்டாம் என்கிறார், கோவையை சேர்ந்த, 'பெட்ஸ் டிரான்ஸ்போர்டர்' ஸ்டாலின் கிறிஸ்டோபர்.

இந்தியா மட்டுமல்லாமல், வெளிநாடுகளுக்கும் செல்லப்பிராணிகளுக்கான பயண திட்டமிடலை மேற்கொள்ளும் இவர், நம்மிடம் பகிர்ந்தவை:

பிரீடர்- பிரீடர், பிரீடர்- கஸ்டமர் மட்டுமல்லாமல், வெளியூருக்கு குடியேருவோருக்கும், செல்லப்பிராணிகளை பத்திரமாக, பாதுகாப்பாக அனுப்பி வைப்பதற்கு, விலங்குகள் நல வாரியம் சில கட்டுப்பாடுகள் விதித்துள்ளது.

இந்தியாவிற்குள் செல்லப்பிராணிகளை, ரோடு, தண்டவாளம், வான் வழியாக அனுப்பி வைப்பதாக இருந்தால், அங்கீகாரம் பெற்ற கால்நடை மருத்துவரிடம், உரிய செல்லப்பிராணியின் உடல் நிலை, ஹெல்த் ரிப்போர்ட் பெறுவது அவசியம்.

வெளிநாடுகளுக்கு செல்லப்பிராணிகளை கொண்டு செல்வதாக இருந்தால், அந்தந்த நாட்டிற்கான விதிமுறைகளை பின்பற்ற வேண்டியிருக்கும்.

குறிப்பாக, அமெரிக்கா, கனடா, லண்டன், ரஷ்யா போன்ற நாடுகளுக்கு, செல்லப்பிராணிகளை கொண்டு வருவதற்கு முன்பு, 'சீரியாலஜி' ரிப்போர்ட் சமர்பிக்க வேண்டும்.

அதாவது, குறிப்பிட்ட செல்லப்பிராணியின் 'பிளட் சீரம்' எடுத்து, லண்டன் அல்லது அமெரிக்காவில் இயங்கும், செல்லப்பிராணிகளுக்கான நோய் தடுப்பு ஆய்வகத்திற்கு அனுப்பி வைக்க வேண்டும். இதை பரிசோதித்து, 45 நாட்களுக்குள், ரிப்போர்ட் அனுப்பி வைப்பர். இதில், அக்குறிப்பிட்ட செல்லப்பிராணிக்கு, எவ்வித நோய் தொற்றும் இல்லை என குறிப்பிட்டிருந்தால் மட்டுமே, 'விசா'வுக்கு விண்ணப்பிக்க முடியும்.

வெளிநாடுகளுக்கு நாய்களை அனுப்பும் போது, இரண்டு மூன்று விமானங்கள் மாறுவதாக இருந்தால், பயண நாட்களை பொறுத்து, உயர் கலோரி கொண்ட உணவுகள், ட்ரை உணவுகள், போதிய தண்ணீர் இருக்குமாறு உறுதி செய்யப்படும்.

விமானத்தில் கொண்டு செல்லும் போது, அதிக உடல் எடை இருக்கும் பட்சத்தில், அதை குறைத்த பிறகே அனுப்பி வைக்க முடியும். ஏனெனில் குறிப்பிட்ட உயரத்திற்கு மேல் பறக்கும் போது, ஒபீசிட்டியாக இருந்தால், மூச்சுத்திணறல் வரலாம்.

இதேபோல், முறையாக தடுப்பூசி போடப்பட்டிருந்தால் மட்டுமே, வெளியூர்களுக்கு கொண்டு செல்லும் போது, எவ்வித இடர்பாடுகளும் ஏற்படாது.

உங்களை பற்றி பீகில், ஜாக்ரஸ்ஸல் டெரியர், அமெரிக்கன்காக்கஸ்பேனியல் போன்ற சில வகை நாய்களை பிரீடிங் செய்துள்ளேன். இதுவரை 150க்கும் மேல் பப்பிகளை விற்பனை செய்துள்ளேன். 'அனிமல் நியூட்ரிஷியன்' குறித்த ஆன்லைன் டிப்ளமோ படிப்பு முடித்திருப்பதால், 'பெட்ஸ் டயட்' குறித்த ஆலோசனை வழங்கி வருகிறேன்.

கடந்த ஆறு ஆண்டுகளாக, பெட்ஸ் டிரான்ஸ்போர்டேஷன் செய்கிறேன். உலகின் மூலை முடுக்குகளில் குடிபெயர்ந்தாலும், செல்லப்பிராணிகளை பத்திரமாக, கொண்டு சேர்க்க வேண்டுமென்பதே எதிர்கால திட்டம்.






      Dinamalar
      Follow us