sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

வாராவாரம்

/

சித்ரா... மித்ரா ( கோவை)

/

ஆளுங்கட்சி 'மாவட்டங்கள்' பதவிக்கு வேட்டு புகார் பண்ணியதும் வீடு தேடி வருகிறது துட்டு!

/

ஆளுங்கட்சி 'மாவட்டங்கள்' பதவிக்கு வேட்டு புகார் பண்ணியதும் வீடு தேடி வருகிறது துட்டு!

ஆளுங்கட்சி 'மாவட்டங்கள்' பதவிக்கு வேட்டு புகார் பண்ணியதும் வீடு தேடி வருகிறது துட்டு!

ஆளுங்கட்சி 'மாவட்டங்கள்' பதவிக்கு வேட்டு புகார் பண்ணியதும் வீடு தேடி வருகிறது துட்டு!


ADDED : செப் 10, 2024 01:59 AM

Google News

ADDED : செப் 10, 2024 01:59 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சோபாவில் அமர்ந்து மொபைல் போனை, நோண்டிக் கொண்டிருந்தாள் சித்ரா.

மார்க்கெட்டுக்குச் சென்று திரும்பிய மித்ரா, ''என்னக்கா... கோட் படம் எப்படி இருக்குதாம்... விசாரிச்சீங்களா...'' என கேட்டாள்.

''பெண்களுக்கும், குழந்தைகளுக்கும் பிடிச்சிருக்குதாம். கவர்மென்ட் நிர்ணயிச்ச கட்டணத்தை விட, தியேட்டர்கள்ல அதிகமா வசூலிச்சிருக்காங்க. கிராமப்புற தியேட்டர்கள்ல கூட, ஒரு டிக்கெட் 200 ரூபாய்க்கு வித்திருக்காங்க. ரெவின்யூ டிபார்ட்மென்ட்டை சேர்ந்தவங்களுக்கு கம்ப்ளைன்ட் சொல்லியும், அவுங்க கண்டுக்காம நகர்ந்திட்டாங்களாம்...''

போலீஸ் தேடுற புள்ளி


''போலீஸ்காரங்க தேடக்கூடிய லிஸ்ட்டுல இருக்கற, நம்மூரை சேர்ந்த ஒருத்தரு, ஊர் முழுக்க நிலம் வாங்கிக் குவிக்கிறாராமே...''

''ஆமாப்பா... உண்மைதான்! அன்னுார் ஏரியாவுல தொழில் பூங்கா துவங்கப் போறதா அறிவிக்கப்பட்ட குப்பனுார், அக்கரை செங்கப்பள்ளி ஊராட்சியில, கோவையை சேர்ந்த லாட்டரி அதிபர் முதன்மை பங்குதாரரா இருக்கற மும்பை நிறுவனம், ஒரு வாரமா நிலத்தை வாங்கிக் குவிக்குதாம்.

நாலு நாள்ல, 700 ஏக்கர் கிரையம் செஞ்சிருக்காங்களாம். போலீசால் தேடப்படும் பட்டியல்ல இருக்கற அந்த அதிபர், மாசம் ஒரு தடவை ஆபீசுக்கு வந்துட்டுப் போவாராம். ஸ்டேட் லெவல்ல நிலம் வாங்கிக் குவிக்கிறதுல நம்பர் ஒன் இடத்துல அவருதான் இருக்காராம். பின்னணியில ஆளுங்கட்சி இருக்கறதாவும் சொல்றாங்க,''

புது மாவட்டம் எப்போ


''அதெல்லாம் இருக்கட்டும். ஆளுங்கட்சியில களையெடுக்கப் போறதா சொல்லிட்டே இருக்காங்க. மூனு வருஷம் ஓடிப் போயிருச்சு; ஒருத்தர் மேல கூட ஆக்சன் எடுக்கலையே...''

''மித்து, இந்த தடவை அசால்ட்டா விட மாட்டாங்கன்னு சொல்றாங்க. 2026 எலக்சனை குறி வச்சு, இப்பவே கட்சியை தயார் செய்ய ஆரம்பிக்கிறாங்க. லோக்சபா எலக்சன்ல இலைக்கட்சிக்கு ஆதரவா செயல்பட்டவங்க; அண்ணாமலைக்காக 'உள்ளடி' வேலை செஞ்சவங்கன்னு 'லிஸ்ட்' போட்டு ரெடியா வச்சிருக்காங்களாம். அமெரிக்காவுல இருந்து சி.எம்., திரும்பியதும் அதிரடியை எதிர்பார்க்கலாம்னு, உடன்பிறப்புகள் சொல்றாங்க,''

''மாவட்டங்களை மாத்துவாங்கன்னு சொல்றாங்களே; நடக்குமா...''

''ரெண்டு சட்டசபை தொகுதிக்கு, ஒரு மாவட்டம்னு நியமிக்கப் போறாங்களாம். இப்போ மூனு மாவட்டம் இருக்காங்க. கூடுதலா ரெண்டு மாவட்ட பதவி வரப்போகுது; அந்த போஸ்ட்டிங்கை கைப்பத்துறதுக்கு, நிர்வாகிகள் பலரும் 'மூவ்' பண்ணிட்டு இருக்காங்க.

உளவுத்துறை மூலமா, ஒவ்வொரு மாவட்டத்தின் செயல்பாடுகளை விசாரிச்சு, 'ரிப்போர்ட்' வாங்கியிருக்காங்களாம்; சிலரோட பதவி பறிபோகலாம்னு பேசிக்கிறாங்க. பதவியை தக்க வைக்கிறதுக்கு, தலைமைக்கு நெருக்கமானவங்க மூலமா 'மூவ்' பண்றாங்களாம்,''

ஆதரவாளருக்கே வாய்ப்பு


''செந்தில்பாலாஜி ஆதரவாளர் ஒருத்தரு, மாவட்ட செயலாளர் பதவியை கைப்பத்துறதுக்கு, முயற்சி செய்றதா கேள்விப்பட்டேனே...''

''ஆமாப்பா... அதுவும் உண்மைதான்! ஜெயில்ல இருந்துக்கிட்டே நம்மூர்ல நடக்குற கட்சி நடவடிக்கையை கூர்ந்து கவனிச்சிட்டு வர்றாராம். இங்கருந்து அவருக்கு தகவல் போயிட்டே இருக்கு. அவரு பரிந்துரைச்ச வேட்பாளரையே, லோக்சபா எலக்சன்ல நிற்க வச்சு ஜெயிக்க வச்சது மாதிரி, மாவட்ட பொறுப்பும், அவரு சொல்ற நிர்வாகிக்கே கெடைக்கும்; 'செல்வச்செழிப்புள்ள' இலைக்கட்சியில இருந்து வந்த ஒருத்தருக்கு, பதவி கொடுக்கப் போறதா சொல்றாங்க,''

''ஏன்னா... மூனு மாவட்டத்துல ஒரு மாவட்டம், ஏடா கூடமா நடக்குறாராம். ஆளுங்கட்சி சார்புல சிட்டிக்குள்ள ஒட்டுற போஸ்டர்ல செந்தில் பாலாஜி போட்டோவும், எம்.பி., ராஜ்குமார் போட்டோவும் பிரசுரம் செய்றதில்லையாம்; திட்டமிட்டே தவிர்க்கறதா உடன்பிறப்புகள் பேசிக்கிறாங்க.

யாராச்சும் போஸ்டர் அச்சடிச்சா... அவுங்க போட்டோ எதுக்குன்னு கேக்குறாங்களாம்... இதெல்லாம் சிறையில இருக்கறவருக்கு போயிடுச்சாம். அதனால, மத்த ரெண்டு மாவட்டங்களுக்கு பதவி தப்புனாலும், ஒருத்தரு பதவி நிச்சயம் பறிக்கப்படும்னு பேசிக்கிறாங்க. அவருக்கு பதிலா அதே ஏரியாவைச் சேர்ந்த ஒருத்தரை, நியமிக்க வாய்ப்பிருக்குன்னு சொல்றாங்க,''

தலைமையின் அதிரடி


''இளைஞரணியை சேர்ந்த ஒருத்தரு, கட்சிக்காரங்கள்ட்ட வசூலிச்ச தொகையை, வீடு வீடா போயி திருப்பிக் கொடுக்குறாராமே...''

''அதுவா... ஆளுங்கட்சியில கோவை வடக்கு மாவட்ட இளைஞரணியில இருக்கற முக்கிய பிரமுகர் ஒருத்தரு, இளைஞரணியில பதவிக்கு வர ஆசைப்படுறவங்கள்ட்ட பேரம் பேசி, கலெக்சனை அள்ளியிருக்காரு.

இது, உடன்பிறப்புகள் மத்தியில சலசலப்பை ஏற்படுத்துச்சு. காரமடை நகராட்சியை சேர்ந்த கவுன்சிலர் ஒருத்தரு, தி.மு.க., வாட்ஸ்ஆப் குழுவுல பகிரங்கமா, எதிர்ப்பு குரல் பதிவு செஞ்சிருக்காரு.

இது, கட்சி தலைமை காதுக்கு எட்டுனதும், 'என்கொயரி' நடந்திருக்கு. அந்த பிரமுகர், இதுவரை வசூலிச்ச தொகையை, ஒவ்வொருத்தரின் வீடு வீடா போயி, திருப்பிக் கொடுத்துட்டு வர்றாராம்,''

24 மணி நேர 'சரக்கு'


''மசாஜ் சென்டர்கள்ல, போலீஸ்காரங்க வசூல் பண்ற விவகாரத்துல திருப்பம் வந்துருக்காமே...''

''ஆமா, மித்து! போலீஸ் கமிஷனரே நேரடியா தலையிட்டு, 'என்கொயரி' செஞ்சிருக்காங்க. சேனல் நிருபர்கள் ரெண்டு பேர், மாசந்தவறாம மாமூல் வாங்கிட்டு இருந்தது தெரியவந்துருக்கு; இன்னும் சிலபேரோட பேரு அடிபடுதாம்; போலீஸ்காரங்க 'என்கொயரி'யை தீவிரப்படுத்தி, இல்லீகல் ஆக்டிவிட்டி இருந்தா, 'அரெஸ்ட்' வரைக்கும் போறாங்க...''

''கார்ப்பரேஷன்ல இருந்து, 24 மணி நேரமும் குடிநீர் சப்ளை செய்றாங்களோ... இல்லையோ... டாஸ்மாக் கடைகள்ல, 24 மணி நேரமும் 'சரக்கு' சேல்ஸ் ஆகுதாமே...''

''அதுவா... ஆர்.எஸ்.புரம் லிமிட்டுல லாலி ரோட்டுல, அடுத்தடுத்து ரெண்டு டாஸ்மாக் கடை இருக்கு. 24 மணி நேரமும் ஜோரா சரக்கு சேல்ஸ் பண்றாங்களாம். நைட் ரோந்துக்கு வர்ற போலீஸ்காரங்களும், ஜீப்பை நிறுத்திட்டு வந்து, பாட்டில் வாங்கிட்டு போறாங்களாம். கடைக்கு வண்டியில வர்றவங்க வசதிக்காக, மையத்தடுப்பு கற்களை எடுத்து, 'யூ டேர்ன்' வசதி செஞ்சு கொடுத்திருக்காங்களாம்,''

ஒரு அதிகாரிக்கு ரெண்டு பதவி


''கார்ப்பரேஷன்ல ஒரு அதிகாரி, ரெண்டு பதவியில இருக்காராமே...''

''இது, ரொம்ப நாளா நடந்துட்டு இருக்குப்பா. கார்ப்பரேஷன்ல மட்டும் ஒரு டெபுடி கமிஷனர், ரெண்டு அசிஸ்டென்ட் கமிஷனர் போஸ்டிங் காலியா இருக்குது. இந்த மூனு பதவியையும், மூனு ஆபீசர்ஸ் கூடுதலா கவனிச்சிட்டு வர்றாங்க.

இதுல, இன்ஜினியரிங் செக்சனை சேர்ந்த ஒரு ஆபீசர், அசிஸ்டென்ட் கமிஷனர் பதவியை கூடுதலா 'பார்த்துட்டு' வர்றாரு. அவரு தயாரிக்கிற கோப்புகளை, அவரே 'ஓகே' பண்ணலாமான்னு சர்ச்சை ஓடிட்டு இருக்கு...''

''ஏன்... அப்படி என்ன நடந்துருக்கு...''

''வெள்ளலுார் குப்பை கிடங்குல தீப்பிடிச்சு எரிஞ்சப்போ, சாப்பாட்டு செலவு லட்சக்கணக்குல எழுதுனாங்கள்ல. அது சம்பந்தமான பில்களை, தகவல் அறியும் உரிமை சட்டத்துல, சமூக ஆர்வலர் ஒருத்தரு கேட்டிருக்காரு.

மெயின் ஆபீசுல இருந்து, சவுத் ஜோன் ஆபீசுல பைல் டீல் பண்ணுனாங்கன்னு சொல்லியிருக்காங்க. இப்போ, சவுத் ஜோன்ல இருந்து ரிப்ளை வந்துருக்காம். அதுல, குப்பை கிடங்கு சாப்பாடு விவகாரம் சம்பந்தமா, மெயின் ஆபீசுல ஆய்வு செய்றாங்க; பில்கள் எல்லாம் ஆய்வு கமிட்டியில இருக்குது. ஆய்வு முடிஞ்சதுக்கப்புறம் காட்டுறோம்னு சொல்லியிருக்காங்க,''

''இந்த விவகாரத்துல சிட்டி இன்ஜினியர் தலைமையில, ஒரு கமிட்டி போடுறதுக்கு பைல் ரெடியா இருக்குதாம்; கமிஷனர் இன்னமும் கையெழுத்து போடாம இருக்காராம்.

பைல்களை நேர்மையா ஆய்வு செஞ்சா, ஏகப்பட்ட வில்லங்கம் வரும்னு சொல்றாங்க,'' என்றபடி, சமையலறைக்குள் சென்றாள் சித்ரா.






      Dinamalar
      Follow us