sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, செப்டம்பர் 07, 2025 ,ஆவணி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

வாராவாரம்

/

சித்ரா... மித்ரா ( கோவை)

/

மண்ணை கடத்தும் கும்பலுடன் அதிகாரிகளே கூட்டு கண்ணை மூடிக்கொண்டு கனிமவளத்துக்கு வேட்டு

/

மண்ணை கடத்தும் கும்பலுடன் அதிகாரிகளே கூட்டு கண்ணை மூடிக்கொண்டு கனிமவளத்துக்கு வேட்டு

மண்ணை கடத்தும் கும்பலுடன் அதிகாரிகளே கூட்டு கண்ணை மூடிக்கொண்டு கனிமவளத்துக்கு வேட்டு

மண்ணை கடத்தும் கும்பலுடன் அதிகாரிகளே கூட்டு கண்ணை மூடிக்கொண்டு கனிமவளத்துக்கு வேட்டு


ADDED : மே 05, 2025 11:05 PM

Google News

ADDED : மே 05, 2025 11:05 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பணி நிமித்தமாக, சித்ராவும், மித்ராவும் கலெக்டர் அலுவலகம் சென்றிருந்தனர்.

கனிம வளத்துறை ஆபீசர்கள் கடந்து செல்வதை கவனித்த சித்ரா, ''மித்து, நம்மூர்ல கனிம வள கொள்ளை மறுபடியும் ஜாஸ்தியாகிடுச்சாமே...'' என, ஆரம்பித்தாள்.

''ஆமாக்கா, உண்மைதான்! புது கலெக்டர், பதவியேத்தப்போ, கனிம வள கொள்ளையை ஒழிக்கப் போறதா வீராவேசமா சபதம் போட்டாரு. ஆனா, கனிம வள கொள்ளைக்கு மாவட்ட நிர்வாகமே உடந்தையா இருக்குன்னு சொல்றாங்க. மேற்குப்புற வழிச்சாலை திட்டத்துக்கு தேவையான மண் எடுத்துக்கச் சொல்லி, மாவட்ட நிர்வாகம் ஸ்பெஷல் பர்மிஷன் கொடுத்திருக்காம்.

அதனால, நீர் நிலைகள்ல இருந்து இஷ்டத்துக்கு லோடு லோடா கனிம வளத்தை அள்ளிட்டுப் போறாங்க... இதை மறைக்கிறதுக்கு விவசாயிகளுக்கு 'பைன்' போட்டு, மாவட்ட நிர்வாகம் கணக்கு காட்டிட்டு இருக்குதுன்னு கம்ப்ளைன்ட் கிளம்பியிருக்கு,''

''கனிம வள கடத்தலுக்கு உடந்தையா இருக்கற வி.ஏ.ஓ., - ஆர்.ஐ., - தாசில்தார், கோட்டாட்சியர்கள் மேல கலெக்டரே நடவடிக்கை எடுக்கலாம்; அவுங்க மேல துறை ரீதியா நடவடிக்கை எடுக்கச் சொல்லி, கோர்ட் அறிவுறுத்தல் வழங்கியிருக்கு. அவுங்க மேல ஆக்சன் எடுக்கறதுக்கு கலெக்டர் எந்த நடவடிக்கையும் எடுக்கலை. கேட்டா, கோர்ட்டு ஆக்சன் எடுக்கும்னு நழுவுறாங்க,''

''இப்போ, எட்டிமடை ஏரியாவுல, 11 மீட்டர் ஆழத்துக்கு கனிம வளத்தை வெட்டி எடுத்துருக்காங்க. அவ்ளோ கனிம வளம் எடுத்துட்டு போற வரைக்கும், அந்த ஏரியா வி.ஏ.ஓ., என்ன செஞ்சிட்டு இருந்தாரு; தாசில்தார் என்ன செஞ்சிட்டு இருந்தாரு. இதைப்பத்தி, கலெக்டர் ஒரு கேள்வி கூட எழுப்பலை; அவுங்க மேல துறை ரீதியா எந்த நடவடிக்கையும் எடுக்காம இருக்கறது, மாவட்ட நிர்வாகம் மேலயே சந்தேகத்தை ஏற்படுத்துது...''

ஏரி மண் கடத்தல்


''சின்ன வேடம்பட்டி ஏரியில இருந்தும் மண் அள்ளிட்டுப் போறதா சொல்றாங்களே...''

''ஆமாக்கா... நானும் கேள்விப்பட்டேன். மேற்குப்புறவழிச்சாலை பணிக்குன்னு சொல்லிட்டு, லோடு லோடா மணல் கடத்தல் வேலை நடந்துட்டு இருக்குதாம். அரசியல்வாதிகளோட அழுத்தத்தால, எந்த நடவடிக்கையும் எடுக்க முடியாம ஆபீசர்ஸ் ஒதுக்கி நிக்கிறதா சொல்றாங்க. மணல் மாபியா கும்பலுக்கு எதிரா, சின்ன வேடம்பட்டி ஏரியாவை சேர்ந்த விவசாயிகள் ஒன்னு சேர்ந்து, போராட்டம் நடத்துறதுக்கு 'பிளான்' பண்ணிட்டு இருக்காங்க,''

டெண்டருக்கு கமிஷன்


''அதெல்லாம் இருக்கட்டும்... கார்ப்பரேஷன் டெண்டர்களை இன்னமும் 'எட்டெழுத்து' கான்ட்ராக்டரே முடிவு செய்றாராமே...''

''அதுவா... கார்ப்பரேஷன் மட்டுமல்ல... நம்ம 'டிஸ்ட்ரிக்ட்'டுல நடக்குற ஒட்டுமொத்த கவர்மென்ட் டிபார்ட்மென்ட் ஒர்க் சம்பந்தமா எல்லா டெண்டர்களையும், 'பிக்ஸ்' பண்றதே அவரு தானாம். காளப்பட்டி ரோட்டுல பேக்கரிக்கு மேல இருக்கற ஆபீசுக்கு போயி, கமிஷன் தொகையை கொடுத்தா, டெண்டர் பைனல் பண்ணி, 'ஒர்க் ஆர்டர்' கொடுக்குறாங்களாம். ரோடு ஒர்க் செய்றதுக்கு, 20 'பர்சன்டேஜ்' கமிஷன் வாங்குறாங்களாம். ஒருத்தருக்கே இவ்ளோ 'பர்சன்டேஜ்' கொடுத்தா என்னாகுறது... மத்தவங்களுக்கும் கொடுத்ததுபோக, மீதியிருக்கற பணத்துல கான்ட்ராக்டர்கள் ரோடு போடுறாங்களாம்,''

பணம் போச்சா...


''ரேஷன் கடை சேல்ஸ்மேன், எடையாளர் வேலை போட்டுத்தர்றோம்னு ஆளுங்கட்சி தரப்புல லட்சக்கணக்குல பணம் வாங்குனாங்களே... என்னாச்சு...''

''ஆமாப்பா... போன வருஷம் டிசம்பர் மாசம் நேர்காணல் நடத்துனாங்க. ஆளுங்கட்சி வி.ஐ.பி., சார்புல, ஒவ்வொருத்தர்கிட்டயும் ஆறு லட்சம் ரூபா லஞ்சம் வாங்கியிருக்காங்க. பணம் கொடுத்து அஞ்சு மாசமாச்சு; இன்னும் நியமன உத்தரவு கொடுக்கலை. இப்போ, 'பொறுப்பு' வேற யாருக்கும் கை மாறுனா, கொடுத்த பணம் அவ்ளோ தானான்னு நேர்காணல்ல கலந்துக்கிட்டவங்க புலம்பிட்டு இருக்காங்க...''

சர்வே ரிப்போர்ட்


''ஆளுங்கட்சியை சேர்ந்தவங்க 'சர்வே' எடுத்தாங்களாமே... ரிசல்ட் என்னாச்சு...''

''ஆமாப்பா... நரசிம்மநாயக்கன்பாளையம், பெரியநாயக்கன்பாளையம், வீரபாண்டி ஏரியாவுல ரகசிய சர்வே எடுத்திருக்காங்க. அ.தி.மு.க., தரப்புல பூத் கமிட்டி அமைச்சு, நாலு கால் பாய்ச்சல்ல வேகமா போயிட்டு இருக்காங்க; திண்ணை பிரசாரம் களைகட்டுது. வீதி வீதியா போயி, 'பப்ளிக்'கை பார்த்து, அ.தி.மு.க., ஆட்சியில செஞ்சதையும், இந்த ஆட்சியில செய்யாததையும் எடுத்துச் சொல்றாங்க. இதெல்லாம், 'பப்ளிக்'கை யோசிக்க வைக்குது...''

''தி.மு.க.,வோ தட்டு தடுமாறுது. தி.மு.க.,வை சேர்ந்த உள்ளாட்சி தலைவர்களுக்கும், கவுன்சிலர்களுக்கும் ஏரியாக்குள்ள நல்ல பெயர் இல்லைங்கிறது, 'சர்வே ரிப்போர்ட்'டுல வந்துருக்கு. அதனால, அவுங்கள அழைச்சுக்கிட்டு, 'அசெம்ப்ளி எலக்சன்ல' எப்படி தேர்தல் பிரசாரம் செய்றதுன்னு ஆளுங்கட்சி தரப்பு கவலையில இருக்கு,''

கரன்சிக்கு போஸ்ட்டிங்


''ஆளுங்கட்சியில இளைஞரணி நிர்வாகிகள் நியமனத்துல, தலைமைக்கு ஏகப்பட்ட 'கம்ப்ளைன்ட்' போயிருக்காமே...''

''யெஸ்...கொஞ்ச நாளைக்கு முன்னாடி இளைஞரணி அமைப்பாளர், துணை அமைப்பாளர்களை அதிகாரப்பூர்வமா அறிவிச்சாங்க. வடக்கு மாவட்டத்துல, 'மாவட்டம்' பரிந்துரை செஞ்சவங்களை கழற்றி விட்டுட்டு, கரன்சி கொடுத்தவங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து, 'போஸ்ட்டிங்' கொடுத்திருக்காங்களாம். அதனால, உடன்பிறப்புகள் கொந்தளிப்புல இருக்காங்க,''

''நெறைய பேரு, துணை முதல்வர் உதவியாளரை மொபைல் போன்ல கூப்பிட்டு, புலம்பித் தள்ளிட்டாங்களாம். அனேகமா, இது சம்பந்தமா 'என்கொயரி' நடக்கும்னு சொல்றாங்க,''

வரி பணம் சுருட்டல்


''கவர்மென்ட்டுக்கு பப்ளிக் கொடுக்கற, சொத்து வரி பணத்தை கிராம ஊராட்சிகளை சேர்ந்தவங்க சுருட்டுறாங்களாமே...''

''அதுவா... ஊராட்சிகளும், ஒன்றியங்களும் தனி அலுவலர் கட்டுப்பாட்டுல இருக்கு. இதை பயன்படுத்தி, சில ஊராட்சி செயலாளர்கள், வீட்டு வரி, குடிநீர் வரி வசூலிக்கறதுல முறைகேடு செய்றதா புகார் வருது. வசூலிக்கிற வரி பணத்தை, ஆன்லைனில் பதிவேற்றம் செய்யாம சுருட்டிடுறாங்களாம்.

வரி செலுத்துற மக்களுக்கு ஆன்லைன் ரசீது தராம, இழுத்தடிக்கறாங்களாம். சிலர்கிட்ட, நீங்கள் வரியே செலுத்தலைன்னு சொல்லி, திருப்பி அனுப்புறாங்களாம். இது சம்பந்தமா மாவட்ட நிர்வாகம் 'என்கொயரி' செய்யணும்னு 'பப்ளிக்' நினைக்கிறாங்க...'' என்றபடி, கலெக்டர் அலுவலகத்தில் இருந்து வெளியே வந்த சித்ரா, அருகாமையில் உள்ள கமிஷனர் அலுவலக கேன்டீனுக்கு சென்றாள்.

ஆபீசரின் 'கெடுபிடி '


மித்ரா, ''போலீஸ் குடும்பத்தைச் சேர்ந்தவங்க நடத்துற ஆவின் பாலகங்களுக்கு ஆபீசர்ஸ் தரப்புல இருந்து, மறைமுக நெருக்கடி கொடுக்குறாங்களாமே...'' என கேட்டாள்.

''ஆமாப்பா... உண்மைதான்! போலீஸ் குடும்பங்களுக்கு பொருளாதார ரீதியா பயனளிக்கும்னு காந்திபுரம், உப்பிலிபாளையம், ஆயுதப்படை வளாகத்துல ஆவின் பாலகம், கமிஷனர் ஆபீசுக்குள்ள கேன்டீன் நடத்துறதுக்கு ஏலம் விட்டாங்க.

அப்போ, டீ, காபி, பலகாரம் விற்கலாம்னு சொல்லியிருக்காங்க. அதனால, உப்பிலிபாளையம் - 30 ஆயிரம், ஆயுதப்படை வளாகம் - 50 ஆயிரம், காந்திபுரம் பாலகம் - 70 ஆயிரம் ரூபாய்க்கு ஏலம் போயிருக்கு,''

''ஏலம் எடுத்த சில நாள்ல பாலகத்துல டீ, காபி, பலகாரம் விற்கக்கூடாதுன்னு, ஆயுதப்படை ஆபீசர் ஒருத்தரு ஆர்டர் போட்டிருக்காரு. பால், தயிர், நெய் சேல்ஸ் பண்ணி, எப்படி ஏலத்தொகையை செலுத்துறதுன்னு புலம்பியிருக்காங்க. 'முடியலைன்னா, திரும்ப ஒப்படைச்சிட்டு போங்க'ன்னு ஆபீசர் சொன்னதா, ஒரு லேடி போலீஸ் சொல்லியிருக்காங்க. தெனமும் 'டார்ச்சர்' செஞ்சு, ஒரு கடையை திரும்ப வாங்கிட்டாங்க. இப்போ, ஆயுதப்படை ஆபீசர் கண்ணசைவுல, ஒரு லேடி போலீஸ் கடையை கவனிச்சிட்டு வர்றாங்க...''

ஒரே ஊரில் ஆறு வருஷம்


''தி.மு.க., கவர்மென்ட் ஆட்சிக்கு வந்து நாலு வருஷமாச்சு. வழக்கமா, மூனு வருஷத்துக்கு ஒரு தடவை ஆபீசர்களை 'டிரான்ஸ்பர்' செய்வாங்க. நம்மூர்ல இங்கேயே இருக்காங்களாமே...''

''உணவுக்கு பாதுகாப்பு தர்றதா, சும்மா பேசிட்டு இருக்கற ஆபீசரைதானே சொல்றே. அவரு, ஆறு வருஷமா ஒரே பதவியில இருக்காராம். நம்மூர்லயே ரொம்ப வருஷம் இருக்கறதுனால, பல விஷயங்கள்ல கண்டும் காணாதது போல, கடந்து போயிடுறாராம். நடவடிக்கை எடுக்கறதில்லைன்னு 'கம்ப்ளைன்ட்' வர ஆரம்பிடுச்சு...''

ஆபீசரே இல்லை


''நம்மூருக்கு வந்த மாவட்ட வழங்கல் ஆபீசர், மெடிக்கல் லீவுல போயிட்டாராமே...''

''ஆமாப்பா... ரேஷன் கடைகளை கவனிக்கிறது ரொம்ப முக்கியமான வேலை. ரெண்டு மாசத்துக்கு முன்னாடி, மாவட்ட வழங்கல் ஆபீசர் 'ரிடையர்' ஆகிட்டாரு. புதுசா நியமிச்ச ஆபீசர், வேலைக்குச் சேர்ந்த மறுநாளே மெடிக்கல் லீவுல கெளம்பிட்டாரு. இப்போ, வேறொரு ஆபீசர் கூடுதல் பொறுப்பா கவனிக்கிறாரு. அவரு எப்பவுமே தொடர்பு எல்லைக்கு அப்பால் இருக்காராம். அதனால, ரேஷன் சம்பந்தமா பப்ளிக் முறையிட வந்தாலும், பதில் சொல்றதுக்கு யாரும் தயாரா இல்லையாம்,'' என்றபடி, போலீஸ் கேன்டீனுக்குள் நுழைந்தாள் சித்ரா.






      Dinamalar
      Follow us