sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, செப்டம்பர் 06, 2025 ,ஆவணி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

வாராவாரம்

/

சித்ரா... மித்ரா ( கோவை)

/

குற்றங்களை மறைக்கும் போலீசால் புலம்புது சிட்டி

/

குற்றங்களை மறைக்கும் போலீசால் புலம்புது சிட்டி

குற்றங்களை மறைக்கும் போலீசால் புலம்புது சிட்டி

குற்றங்களை மறைக்கும் போலீசால் புலம்புது சிட்டி


ADDED : ஜூன் 23, 2025 11:52 PM

Google News

ADDED : ஜூன் 23, 2025 11:52 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

'கொ டிசியா' மைதானத்தில் நடந்து வரும் கடல் கன்னிகள், மீன்கள் கண்காட்சிக்கு சித்ராவும், மித்ராவும் சென்றிருந்தனர். கடலுக்கு அடியில் அமைத்துள்ள சுரங்கத்துக்குள் நடந்து செல்வது போல் இருந்தது.

அதற்குள் நடந்து செல்ல ஆரம்பித்த சித்ரா, ''குடும்பத்தோடு வந்து பார்க்கற மாதிரி சிறப்பா அமைச்சிருக்காங்களே,'' என பாராட்டியதோடு, ''ஏழடி போர்வெல் விவகாரம் என்னாச்சு,'' என, கிளறினாள்.

''அதுவா... ஹிந்து சமய அறநிலையத்துக்குச் சொந்தமான இடத்துல மரக்கன்று நட ஆரம்பிச்சிருக்காங்க. அதுக்கு தண்ணீ விடுறதுக்கு போர்வெல் அமைச்சாங்க. இ.பி., கனெக்சன் வாங்குறதுக்காக, போலியா போர்வெல் அமைச்சு, குறுக்கு வழியை கையாண்டு மாட்டிக்கிட்டாங்க. கவர்மென்ட் டிபார்ட்மென்ட் ஆபீசர்களே திருட்டுத்தனம் செய்யலாமான்னு கேள்வி எழுந்துருக்கு. இதுல என்ன பிரச்னைன்னா, இதுமாதிரி இன்னும் எத்தனை எடத்துல இ.பி.,காரங்க இல்லீகல் கனெக்சன் கொடுத்திருக்காங்கன்னு பிரச்னையை கிளப்பி இருக்காங்க...''

''அதெல்லாம் இருக்கட்டும்... பணமும் விளையாடியிருக்குன்னு கேள்விப்பட்டேனே...''

''அதுவா... செட்டிபாளையம் டவுன் பஞ்சாயத்தைச் சேர்ந்த மக்கள் பிரதிநிதி ஒருத்தர், மூனு 'ல'கரம் வாங்கியிருக்கறதா குற்றச்சாட்டு சொல்றாங்க. இதுவரைக்கும், 50 லட்சம் ரூபாய் வரைக்கும் குறுக்கு வழியில சம்பாதிச்சிட்டாராம். அவரது கூட்டாளிகளே ரத்தத்தின் ரத்தங்கள் தானாம். அதனால, உடன்பிறப்புகள் கொந்தளிப்புல இருக்காங்க,''

'சுக்குநுாறான' பகுதி கழகம்


''எதிர்பார்த்த மாதிரி, ஆளுங்கட்சியில பகுதி கழகங்களை துண்டு துண்டா பிரிச்சிட்டாங்களாமே...''

''அதான்... இப்போ... உடன்பிறப்புகளுக்குள்ள புகைச்சலை உருவாக்கியிருக்கு. பகுதி கழக செயலாளர்களின் செயல்பாடுகள் திருப்தியில்லைன்னு தலைமை கழகத்துக்கு தொண்டர்கள் கடுதாசி அனுப்பிட்டு இருந்தாங்க. போத்தனுார்ல நடந்த நிர்வாகிகள் சந்திப்பு கூட்டத்துல, 'செயல்பாடு திருப்தியா இல்லாதவங்களை துாக்கி எறிஞ்சிருவோம்'னு சி.எம்., ஸ்டாலின் சொல்லி இருந்தாராம்,''

''அதே மாதிரி, இன்னொரு கூட்டத்துல சின்னவரும் சொல்லி இருந்தாராம். இப்போ, ஏகப்பட்ட பகுதி கழகங்கள்ல பழையவர்களுக்கே மீண்டும் வாய்ப்பு கொடுத்திருக்காங்க. புதியவர்களுக்கு வாய்ப்பு தராததால, அதிருப்தியில இருக்காங்க. சில பகுதி கழகங்களை ரெண்டா பிரிச்சிருக்காங்க. இது, பகுதி கழக செயலாளர்களை ஆதங்கப்பட வச்சிருக்கு,''

''இது போதாதுன்னு, சில வார்டுகளை மூன்றாகவும், நான்காகவும் துண்டு துண்டாக்கியிருக்காங்க. இதை கேள்விப்பட்டு, வார்டு செயலாளர்கள் வெதும்பி போயிருக்காங்க. இதெல்லாம், மூன்றெழுத்து ஊர்க்காரர் செய்ற வேலைன்னு புலம்பிட்டு இருக்காங்க. அவரு, இந்த ஊருக்குள்ள நுழைஞ்சதுல இருந்து கட்சியே அவுங்க கண்ட்ரோலுக்குள்ள போயிடுச்சுன்னு ஆதங்கப்படுறாங்க...''

காய் நகர்த்தும் புள்ளிகள்


''அசெம்ப்ளி எலக்சனுக்கு இன்னும் 10 மாசம் இருந்தாலும், தொகுதியை கைப்பத்த அரசியல்வாதிகள் இப்பவே 'மூவ்' பண்ண ஆரம்பிச்சிட்டாங்களாமே...''

''ஆமாக்கா... உண்மை தான்! எல்லா கட்சியிலுமே முக்கியப் புள்ளிகள் அந்தந்த கட்சி தலைமையிடம் முட்டி மோதுறாங்க. ஆளுங்கட்சியில செந்தில்பாலாஜியை ஒரு குரூப் சுத்தி வருது. இன்னொரு குரூப் உதயநிதியையும், கனிமொழியையும் சந்திச்சு, அழுத்தம் கொடுத்துட்டு வர்றாங்க. தங்களுக்கு நெருக்கமான மினிஸ்டர்ஸ் மூலமாவும் சிலர், எம்.எல்.ஏ., சீட் கேட்டு போராடிட்டு இருக்காங்க...''

''சூலுார் தொகுதியை கைப்பத்துறதுக்கு திராவிட கட்சியிலும், தேசிய கட்சியிலும் போட்டி பலமா இருக்குது. செல்வாக்கை காட்டுறதுக்காகவே சூலுார் ஏரியாவுல ஏகத்துக்கும் அரசியல் நிகழ்ச்சிகளை நடத்திட்டு வர்றாங்க. கதர் கட்சியில மாவட்ட தலைவரும், ஆளுங்கட்சியில மாவட்ட செயலாளரும், ஒன்றிய செயலாளர்களும் 'மூவ்' பண்ணிட்டு இருக்காங்க. இலைக்கட்சியில முன்னாள் மேயரும், ஒன்றிய செயலாளர்களும் ரேசில் இருக்காங்க,''

''எப்படியாவது 'சீட்' வாங்குறதுக்கு முன்னாள் மேயர் முயற்சி பண்றாரு. இவ்ளோ நாளா ஒதுங்கியிருந்த அவரை, கட்சி விழாக்கள்ல அடிக்கடி பார்க்க முடியுது. கட்சி மேடைகள்ல குனியமுத்துார்காரர் அன்பொழுக பேசி, பாசம் காட்டுனாலும், சூலுாருக்கு வாய்ப்பு கொடுப்பாரா அல்லது பல்லடத்துக்கு தள்ளி விடுவாரான்னு ரத்தத்தின் ரத்தங்கள் பேசிட்டு இருக்காங்க...''

எகிறியது கமிஷன்


கடலில் மிதந்து வரும் கடல் கன்னிகள் தரும் பறக்கும் முத்தத்தை பிடிப்பதுபோல், இளைஞர்கள் பலரும் 'செல்பி' எடுத்துக் கொண்டிருந்தனர்.

அதைப்பார்த்துக் கொண்டே கடந்த சித்ரா, ''கார்ப்பரேஷன்ல செயல்படுற தணிக்கைத்துறையில 'கமிஷன் ரேட்'டை ஒசத்திட்டாங்களாமே... அதிகாரிகளும், கான்ட்ராக்டர்களும் புலம்பிட்டு இருக்கறதா... சேதி வந்துச்சே...'' என, 'ரூட்' மாறினாள்.

''ஆமாக்கா... வழக்கமா... லட்சத்துக்கு, 100 ரூபாய்ன்னு கமிஷன் வாங்குவாங்க. அந்த டிபார்ட்மென்ட்டுல இருக்கற உயரதிகாரிக்கே இந்த விஷயம் தெரியாதாம். தணிக்கைத்துறை ஆய்வாளருன்னு ஒரு போஸ்டிங் இருக்கு. அவுங்க தான், இஷ்டத்துக்கு அள்ளுறாங்கன்னு சொல்றாங்க. இப்போ, லட்சத்துக்கு, 200 ரூபாய்ன்னு கமிஷன் ரேட்டை ஒசத்திட்டாங்க,''

''கமிஷன் கொடுத்தாலும் அவ்ளோ ஈஸியா கையெழுத்து போடுறதில்லையாம். அந்த பேப்பர் இல்லை; இந்த பேப்பர் இல்லைன்னு, 'சுழி' போட்டு, கோப்புகளை திருப்பி அனுப்புறாங்களாம். கார்ப்பரேஷன் இன்ஜினியர்களும், கான்ட்ராக்டர்களும் கொதிப்புல இருக்காங்க. சில பேரு, கமிஷனர் காதுக்கு விஷயத்தை கொண்டு போயிருக்காங்க,''

''ஆளுங்கட்சி செல்வாக்கோடு இருக்கற சில கான்ட்ராக்டர்ஸ், லட்சத்துக்கு 300 ரூபாய் கமிஷன் கொடுத்து, பைல்ல கையெழுத்து வாங்கிடுறாங்களாம். இது தான்... இப்போ... கார்ப்பரேஷன் ஆபீஸ் வட்டாரத்துல 'ஹாட் டாபிக்'கா ஓடிட்டு இருக்கு... துணிச்சலா, பகிரங்கமா லட்சக்கணக்குல கமிஷன் வாங்குறாங்க... கான்ட்ராக்டர்களிடம் 'என்கொயரி' செஞ்சா உண்மை தெரிஞ்சிடும். நம்மூர் லஞ்ச ஒழிப்புத்துறை என்ன செய்யுதுன்னே தெரியலைன்னு இன்ஜினியர்ஸ் புலம்பிட்டு இருக்காங்க...''

பேசிக்கொண்டே கண்காட்சி அரங்கில் இருந்து இருவரும் வெளியே வந்தனர். ஸ்கூட்டரை நிறுத்தியிருந்த இடத்தில் போட்டிருந்த தள்ளுவண்டி கடையில் காளான் ஆர்டர் கொடுத்தாள் சித்ரா.

''லஞ்ச ஒழிப்பு துறைன்னு பேசினதும் எனக்கொரு விஷயம் ஞாபகத்துக்கு வருது. தொண்டாமுத்துார்ல கஞ்சா வச்சிருந்த மூனு பேரிடம் போலீஸ்காரங்க லஞ்சம் வாங்கிட்டு விட்டுட்டாங்களாமே...''

''அதுவா... ரோந்து பணியில இருந்த போலீஸ்காரங்க, சந்தேகப்படும் படியா இருந்த மூனு பேரை பிடிச்சு 'என்கொயரி' செஞ்சாங்க. அவுங்களிடம் கஞ்சா இருந்துருக்கு; ஸ்டேஷனுக்கு கூட்டிட்டு போயிட்டாங்க. ஸ்டேஷன் போலீஸ்காரங்க, அவுங்களிடம் விபரங்களையும், மொபைல் போன்களையும் வாங்கி வச்சிட்டு, அனுப்பி வச்சிருக்காங்க. மறுநாள் காலையில ஸ்டேஷனுக்கு வந்த மூனு பேரிடம், அஞ்சாயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கிட்டு, கேஸ் பைல் பண்ணாம, வழியனுப்பி வச்சிருக்காங்க...''

'என்கொயரி' இல்லாமல் 'க்ளோஸ்'


''ஆமாக்கா... இதே மாதிரி சிட்டி லிமிட்டிலும் வழக்குகளை விசாரிக்காமலேயே, 'கம்ப்ளைன்ட் க்ளோஸ்டு'ன்னு எழுதி, மூடிடுறாங்களாம்...''

''அப்படியா... நம்மூர் போலீஸ் கமிஷனர் ரொம்ப ஸ்டிரிக்ட்டுன்னு சொன்னாங்களே...'' என, வாயை பிளந்தாள் சித்ரா.

''அப்படித்தான் சொல்றாங்க... இருந்தாலும் ஸ்டேஷன்ல நடக்குற உள்விவகாரங்கள் அவரோட கவனத்துக்கு போறதில்லை போலிருக்கு. உதாரணத்துக்கு ஒரு கேஸ் பத்தி சொல்றேன். சரவணம்பட்டி ஏரியாவுல, பூட்டியிருந்த வீட்டுல லேப்-டாப், மொபைல் போன் உள்ளிட்ட சில பொருட்கள் திருடு போயிருக்கு. பாதிக்கப்பட்ட அருண் என்பவர், சரவணம்பட்டி போலீஸ் ஸ்டேஷன்ல நேரடியா கம்ப்ளைன்ட் கொடுத்திருக்காரு,''

''சி.எஸ்.ஆர்., பைல் பண்ணிட்டு, 'என்கொயரி'க்கு போலீஸ்காரங்க வருவாங்கன்னு சொல்லியிருக்காங்க. 'பார்மாலிட்டி'க்காக, எஸ்.ஐ., ஒருத்தரு வந்திருக்காரு; அதுக்கப்புறம் எந்த தகவலும் இல்லையாம். வழக்குப்பதிவும் செய்யலையாம். ரெண்டு வாரம் கழிச்சு கம்ப்ளைன்ட் கொடுத்தவரின் மொபைல் போனுக்கு ஒரு எஸ்.எம்.எஸ்., வந்திருக்கு. அதைப்பார்த்து அவர் அதிர்ச்சியாயிட்டாரு. ஏன்னா... அதுல, 'தங்களின் புகார் மனு மீதான விசாரணை முடிக்கப்பட்டுவிட்டது. 'ஆக்சன் டிராப்டு'ன்னு எழுதியிருந்துச்சு. இப்படியே புகார்தாரர்கள் பலருக்கும் பல ஸ்டேஷன்ல இருந்து 'எஸ்எம்எஸ்'கள் போயிருக்கிறதா குற்றச்சாட்டு கிளம்பிருக்கு...''

''பாதிக்கப்பட்டவங்க புகார் கொடுத்தா நேர்மையா விசாரிச்சு குற்றவாளிகளை கண்டுபிடிச்சு பாதிக்கப்பட்டவருக்கு நியாயம் கிடைக்க செய்ய வேண்டும். ஆனா நம்ம போலீசோ, கிரிமினல்களுக்கு துணைபோவது போல, புகார்களை விசாரிக்காமலே குளோஸ் பண்ணிடுறாங்க. குற்றங்களை தடுக்க முடியாத போலீசு, குற்றச்சம்பவங்களை மறைச்சு உயரதிகாரிகளை நல்லாவே ஏமாத்துறாங்க...

''பாதிக்கப்பட்டவங்க கேள்வி கேட்டா தவறுதலா 'எஸ்எம்எஸ்' வந்திருக்கும்னு... பொறுப்பில்லாம அசால்ட்டா அடிச்சு விடுறாங்க... கமிஷனர் ஸ்ட்ரிக்ட்டா ஆக்சன் எடுக்கலைன்னா சிட்டி போலீஸ் மீது மக்கள் கடும் அதிருப்தி ஏற்படுவது நிச்சயம்னு உளவுத்துறைக்காரங்க பேசிக்கிறாங்க...'' என்ற படி, காளான் சாப்பிட ஆரம்பித்தாள் சித்ரா.

மொபைல் போனுக்கு வந்திருந்த 'வாட்ஸ் அப்' தகவல்களுக்கு பதில் அனுப்பிக் கொண்டிருந்தாள் மித்ரா.






      Dinamalar
      Follow us