வீடு, வீடா 'கிப்ட்' வரப்போகுது எம்.எல்.ஏ.க்களுக்கு 'லாக்' வருது
வீடு, வீடா 'கிப்ட்' வரப்போகுது எம்.எல்.ஏ.க்களுக்கு 'லாக்' வருது
ADDED : மார் 03, 2026 06:03 AM
''எ ன்னப்பா, சி.எம். வந்திருந்தாரே... பங்சன் எப்படி இருந்துச்சு...'' என, கேட்டபடி, வீட்டு திண்ணையில் அமர்ந்தாள் சித்ரா.
நாளிதழ்களை படித்துக் கொண்டிருந்த மித்ரா, ''நீலாம்பூர்ல பூத் ஏஜன்ட் மாநாட்டை பிரமாண்டமா நடத்துனாங்க. 20 நிமிஷம் சி.எம். பேசுனாரு. பஸ்களை ஏற்பாடு செஞ்சு, 39 தொகுதியில இருந்து பூத் ஏஜன்ட்டுகளை அழைச்சிட்டு வந்திருந்தாங்க. ஒவ்வொரு சேரிலும் ஸ்நாக்ஸ் பேக் வச்சிருந்தாங்க. உ.பி.கள் கிடைச்சதை அள்ளி வச்சுக்கிட்டாங்க,''
''சி.எம். வர்றப்போ, கட்சி துண்டை சுழட்டி காட்டணும்; கொடியை துாக்கிக் காட்டணும்னு மேடையில இருந்து சொல்லிக்கிட்டு இருந்தாங்க. மேடைக்கு வந்ததும் அவரை பார்த்த திருப்தியில பலரும் கிளம்பிட்டாங்க. சிக்கன் பிரியாணி பார்சல் கொடுத்தாங்க. பலரும் தள்ளாடுனதை பார்க்க முடிஞ்சது''
''சி.எம். வந்தாலே, கட்சிக்காரங்களை அழைச்சிட்டு வர்றதுக்கு பஸ்களை அனுப்பிடுறாங்க. கணக்கு காட்டுறதுக்காக ஒப்பந்த ஊர்தின்னு போர்டு வைக்கிறாங்க. வழக்கமான 'ரூட்'டுல பஸ் வராததால மக்கள் பாதிக்கப்படுறாங்க. மணிக்கணக்குல ரோட்டுல காத்திருந்து, படிக்கட்டுல தொங்கிட்டு போனாங்க. பெண்கள் பலரும் புலம்பிட்டுப் போனதை பார்க்க முடிஞ்சது. இதெல்லாம், ஆளுங்கட்சிக்கு நெகட்டிவ்வா மாறிட்டு வருது''
''ஆமா.. அன்னிக்கு அவிநாசி ரோடே டிராபிக்ல திணறுச்சு. ஸ்டாப்புல நின்ன பெண்கள், 'சி.எம்.இன்னும் கிளம்பலையா. பிளைட் எப்போ...'ன்னு பேசிக்கிட்டிருந்ததை கேட்க முடிஞ்சது. பஸ்களுக்கான பணத்தையும் கொடுக்கலை போலிருக்கு. டிரைவரும், கண்டக்டரும் டீக்கடையில் புலம்பிட்டு இருந்தாங்க,''
''மத்த கட்சிக்காரங்க என்ன பண்றாங்க...''
''தொண்டாமுத்துார்ல வேலுமணி கூடுதல் கவனம் செலுத்துறாரு. ஏற்கனவே ஒவ்வொரு வீட்டுக்கும் ஆறு பொருட்கள் கொடுத்துட்டாரு. இப்போ, தண்ணீ நிரப்பி வைக்கிறதுக்கு பிளாஸ்டிக் டிரம் கொடுக்குறாரு. தி.மு.க.வுல வேட்பாளர் யாருன்னு இன்னும் முடிவாகாததால, மக்கள் மனசுல வேலுமணி முன்னணியில இருக்காருனு சொல்றாங்க,''
''பா.ஜ.வுல வடக்கும், சிங்காநல்லுாரும் கேக்குறாங்க. சிட்டிங் எம்.எல்.ஏ.வானதி, வடக்குல ஜரூரா வேலை பார்த்துட்டு இருக்காங்க.
அவுங்க ஸ்பீடை பார்த்து, ஆளுங்கட்சிக்காரங்க மலைச்சுப் போயிருக்காங்க. அண்ணாமலை வர மாட்டாருங்கிற நம்பிக்கையில, சிங்காநல்லுார்ல அ.தி.மு.க. சிட்டிங் எம்.எல்.ஏ. ஜெயராம் வேலை பார்த்துட்டு இருக்காரு''
''ஆளுங்கட்சிக்காரங்களும் பரிசு கொடுக்கப் போறதா சொன்னீங்களே...''
''ஆமா, சி.எம். பர்த்டே கொண்டாட்டத்தை ஆரம்பிக்கப் போறாங்க. எஸ்.ஐ.ஆர். வேலை செஞ்சப்போ, ஒவ்வொரு வார்டுலயும் எத்தனை வீடு இருக்குன்னு துல்லியமா கணக்கு எடுத்து வச்சிருக்காங்க. வீட்டுக்கு வீடு கிப்ட் கொடுக்கப் போறதா சொல்றாங்க. எலக்ட்ரிக் ஸ்டவ், பால் குக்கர், வேட்டி, சேலை வரலாம்னு பேசிக்கிறாங்க.''
''தி.மு.க. கூட்டணியில காங். கம்யூ. கட்சிக்காரங்க, கமல், விஜயகாந்த் கட்சிக்காரங்க, தொகுதி ஒதுக்கீட்டுக்கு பிறகே களத்துக்கு வருவாங்க போலிருக்கு. செந்தில்பாலாஜியே நம்மூர்ல போட்டி போடுவாருன்னு கட்சிக்காரங்க எதிர்பார்க்குறாங்க,''
''அ.தி.மு.க. சிட்டிங் எம்.எல்.ஏ.க்களை முடக்கறதுக்கு பிளான் வச்சிருக்கிறதா பேசிக்கிறாங்களே...''
''பழைய கேஸ்கள ஆளுங்கட்சி வக்கீல் அணி துாசி தட்டிட்டு இருக்குதாம். 'அம்மன்' பெயர் கொண்டவரையும், ரியல் எஸ்டேட் பிசினஸ் செய்றவரையும் 'லாக்' பண்றதுக்கு ஆலோசனை ஓடிட்டு இருக்குதாம்,''
''அவசர அவசரமா நிதியை செலவழிச்சிட்டு இருக்காங்களாமே...''
''ஒவ்வொரு ஒன்றியத்துக்கும் பல கோடி ஒதுக்கி, நிர்வாக அனுமதி வழங்கியிருக்காங்க. ஊராட்சி நிதியிலும் வேலைகளை செய்யச் சொல்லி உத்தரவு போட்டிருக்காங்க. ஒன்றியத்திலும், ஊராட்சியிலும் கஜானாவை காலி செஞ்சிட்டு வர்றாங்களாம்,'' என்ற மித்ரா, ''ஜி.எச். டீன் எப்பவுமே பிஸியா இருக்கற மாதிரி காட்டிக்கிறாங்களாமே...'' என இழுத்தாள்.
''மக்கள் மட்டுமல்ல, டாக்டர்களே அவங்கள பார்க்க முடியறதில்லை. ஆன்-லைன் மீட்டிங்லயே நேரத்தை கழிக்கிறாங்க. நிர்வாகத்த கவனிக்கிறது இல்லைனு சொல்றாங்க. இதே ரீதியில போனா, மக்களுக்கு எப்படி மருத்துவ வசதி கிடைக்கும்னு நினைக்கிறாங்க,''
''வட்டார கல்வி அலுவலர் ஒருத்தரு தலைமறைவா இருக்காராமே...''
''சீனியாரிட்டியில பதவி உயர்வு கொடுக்கணும், பதவி உயர்வு கொடுக்காத காலத்துக்கான ஊதியத்தை வழங்கணும்னு கோர்ட்டுல கேஸ் போட்டிருக்காரு. அவருக்கு சாதகமா தீர்ப்பு வந்துருக்கு. கல்வித்துறை அதிகாரிக அமல்படுத்தலை. ஒடனே, அவமதிப்பு வழக்கு போட்டிருக்காரு...''
அப்புறம்..?
''கேஸ் போட்டவர் கடந்து வந்த பாதையை அலசி இருக்காங்க. கோல்மால் செஞ்சே பதவிக்கு வந்ததை கண்டுபிடிச்சிட்டாங்க. வால்பாறையில எய்டடு ஸ்கூல்ல டீச்சரா இருந்திருக்காங்க. அந்த ஸ்கூலை கவர்மென்ட் ஸ்கூலா மாத்துனப்போ, சீனியாரிட்டியில கைவரிசை காட்டி, பதவி உயர்வு வாங்குனது தெரிஞ்சிருக்கு.
மாவட்ட அதிகாரியும் ஹெல்ப் செஞ்சிருக்காரு. ஏகப்பட்ட தில்லுமுல்லு நடந்திருக்கு. இப்போ, அவருக்கே பிடிவாரன்ட் அனுப்பியிருக்காரு. அந்த ஆபீசர் எஸ்கேப். அவருக்கு பதிலா மதுக்கரை அதிகாரிக்கு கூடுதல் பொறுப்பு கொடுத்திருக்காங்களாம்...''
''திருட்டு சம்பவம் அடிக்கடி நடக்குறதுனால, அரசு அதிகாரிங்க வீட்டை காலி பண்ணிட்டு, வேறிடத்துக்கு போறாங்களாமே...'' என, சப்ஜெக்ட் மாறினாள் மித்ரா.
''ஆமாப்பா, கவுண்டம்பாளையம் ஹவுசிங் யூனிட்டுல 8 பிளாக் இருக்கு. டி.ஆர்.ஓ. அந்தஸ்து ஆபீசர், அரசு போக்குவரத்து கழக மேனேஜர் வீடுகள்ல வடமாநில திருடனுங்க கைவரிசை காட்டிட்டாங்க.
மகள் கல்யாணத்துக்கு வச்சிருந்த நகைய லவட்டிட்டு போயிட்டாங்க. மனசு ஒடிஞ்சு போன ஆபீசர், வேற ஊருக்கு டிரான்ஸ்பர் வாங்கிட்டு, கவர்மென்ட் வீடே வேணாம்னு காலி செஞ்சிட்டு கெளம்பிட்டாங்க,'' என்றபடி, நகர்வலம் புறப்பட்டாள் சித்ரா.
