sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், நவம்பர் 04, 2025 ,ஐப்பசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

வாராவாரம்

/

சித்ரா... மித்ரா ( கோவை)

/

கோவையில் 'அண்ணா', விஜய் கட்சியை 'மரண கலாய்!'

/

கோவையில் 'அண்ணா', விஜய் கட்சியை 'மரண கலாய்!'

கோவையில் 'அண்ணா', விஜய் கட்சியை 'மரண கலாய்!'

கோவையில் 'அண்ணா', விஜய் கட்சியை 'மரண கலாய்!'

1


ADDED : டிச 03, 2024 06:51 AM

Google News

ADDED : டிச 03, 2024 06:51 AM

1


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ரெயின்கோட் அணிந்துகொண்டு, நகர்வலம் புறப்பட்டாள் சித்ரா.

ஸ்கூட்டரின் பின் இருக்கையில் அமர்ந்த மித்ரா, ''என்னக்கா... லண்டன்ல இருந்து அண்ணாமலை வந்துட்டாரே... இனி மேல் அரசியல் களம் சூடாகும் போலிருக்கே...'' என, பேச்சை ஆரம்பித்தாள்.

''ஆமா, மித்து! தமிழகத்துக்கு வந்திறங்கியதும் முதல் பயணமா நம்மூருக்கு வந்தாரு. கொடிசியா வளாகத்துல நடந்த, 'ஏ3' மாநாட்டுல கலந்துக்கிட்டாரு; அவருக்கு செங்கோல் கொடுத்து கவுரவிச்சாங்க... ஏர்போர்ட்டுல கட்சிக்காரங்க தடபுடலா வரவேற்பு கொடுத்தாங்க''

அண்ணாமலை கிண்டல்


''விஜய், கட்சி ஆரம்பிச்சதை பத்தி ஏதாச்சும் சொன்னாரா...''

''விஜய் வருகையை வரவேற்று பேசியிருக்காரு. சினிமா வேறு; அரசியல் களம் வேறு. வரட்டும்; களமாடட்டும்னு சொன்ன அண்ணாமலை, மாநாட்டுல பேசுறப்போ, வேறு விதமா பேசியிருக்காரு. அங்க, ''இப்போ, புதுவிதமான 'பாலிடிக்ஸ்' வந்துருக்கு; 'கிச்சடி பாலிடிக்ஸ்'. இந்த சித்தாந்தத்துல கொஞ்சம்; அந்த சித்தாந்தத்துல கொஞ்சம். வரிசையா... பத்து தலைவர்கள் படங்களை போட்டா.. யாரும் நம்மளை விமர்சிக்க மாட்டாங்கங்கிற அரசியல் கட்சிகளும் வந்துருக்கு,''

''அதெப்படிங்க... ரசம் சாதம், தயிர் சாதம், சாம்பார் சாதத்தை கலந்து வச்சு... இது, புது அயிட்டம்னு சொன்னா... எப்படி சாப்பிடுவாங்க... ரசம் சாதம்னு சொல்லுங்க; சாம்பார் சாதம்னு சொல்லுங்க; தயிர் சாதம்னு சொல்லுங்க... மூன்றையும் சேர்த்து மக்கள் சாப்பிட மாட்டாங்க. அந்த அரசியல்... உலகத்தில் வேறெங்கும் ஜெயிச்சது கெடையாதுன்னு பேசியிருக்காரு. இது, எத்தனை பேருக்கு புரிஞ்சதுன்னு தெரியலை,'' என்ற சித்ரா, ரேஸ்கோர்ஸ்சிலுள்ள ஓட்டல் முன், ஸ்கூட்டரை நிறுத்தினாள்.

மூவேந்தர்களின் கணக்கு


டீ, பஜ்ஜி வாங்கிக் கொண்டு, டேபிளில் அமர்ந்த மித்ரா, ''2026 தேர்தல் நம்மூர்ல மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் போலிருக்கே...'' என கேட்டாள்.

பஜ்ஜியை சாப்பிட்டுக் கொண்டே, ''ஆமா, மித்து! உண்மைதான்! வரப்போற, 2026 சட்டசபை எலக்சன்ல அண்ணாமலையா... செந்தில்பாலாஜியா... வேலுமணியா...ன்னு, மூவேந்தர்களுக்குள் மிகப்பெரிய போட்டி வரப்போகுது... 2021ல் தி.மு.க., கூட்டணி, 10 தொகுதியிலும் தோத்துச்சு. சிங்காநல்லுார் தொகுதி தி.மு.க., வசம் இருந்துச்சு; அதையும் தவற விட்டுச்சு; அதனால, 2026ல் ஜெயிச்சுக் காட்டணும்னு நெனைக்கிறாங்க...''

''அ.தி.மு.க., தரப்புல... ஜெ., இறந்ததுக்கு பின்னாடி, தொடர்ச்சியா தோல்வியையே சந்திச்சுட்டு வர்றாங்க. 2021ல் ஆட்சியை பிடிக்க தவறிட்டாங்க; உள்ளாட்சி தேர்தல்லயும் ஜெயிக்கலை; இப்போ, எம்.பி., எலக்சன்ல மூனாவது எடத்துக்க போயிட்டாங்க. இதனால, செல்வாக்கை நிரூபிச்சுக் காட்ட வேண்டிய நெருக்கடியில வேலுமணி இருக்காரு...''

''அண்ணாமலை... எம்.பி., எலக்சன்ல போட்டி போட்டதால, தாமரை கட்சிக்கு செல்வாக்கு ஜாஸ்தியாகி இருக்குதாம். சிட்டி லிமிட்டுக்குள்ள அதிகமான ஓட்டு விழுந்திருக்கு. கார்ப்பரேஷன் லிமிட்டுல மூணு தொகுதி வருது.

ஆளுங்கட்சி கவுன்சிலர்கள் செய்ற தப்புகளை, மக்கள் மன்றத்துல எடுத்துச் சொன்னாலே... மூணு தொகுதியை ஈசியா ஜெயிக்கலாம்னு கணக்குப் போடுறாங்களாம்.

அதுக்கு, தாமரைக்கட்சிக்காரங்க ஒத்துமையா இருக்கணும்; களத்துல வேலை பார்க்கறதுக்கு தொண்டர்கள் வேணும்; எந்நேரமும் தன்னார்வலர்களை வச்சு கட்சியை நடத்த முடியாதுன்னு, 'அட்வைஸ்' பண்ணியிருக்காங்க. அதனால, கூட்டணியை பலப்படுத்துற வேலையை ஆரம்பிச்சிட்டாங்களாம்,'' என்றாள் சித்ரா.

வாய்மொழி உத்தரவு


டீ அருந்திய மித்ரா, ''ஊரக உள்ளாட்சி பிரதிநிதிகள் 'அப்செட்'டுல இருக்கறதா கேள்விப்பட்டேனே...'' என, கொக்கி போட்டாள்.

''அதுவா... ஊரக உள்ளாட்சிகளின் பதவிக்காலம் இந்த மாசத்தோட முடியுது; எலக்சன் நடத்துற மாதிரியான சூழல் தெரியலை. பதவி முடியப் போற நேரத்துல, சில இடங்கள்ல கஜானாவை காலி செய்றது வழக்கமாம். நிதியை எடுத்து தாறுமாறா செலவழிச்சு, பில் மட்டும் வச்சுட்டு போயிடுவாங்களாம். அதனால, பொது நிதியில இருந்து எந்த வேலையும் செய்யக் கூடாதுன்னு பி.டி.ஓ.,க்களுக்கு மாவட்ட நிர்வாகத்துல இருந்து, வாய்மொழி உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருக்குதாம்... இதனால, ஊராட்சி நிர்வாகத்தைச் சேர்ந்தவங்க 'அப்செட்'டுல இருக்காங்களாம்,''

ஸ்டிரைக்குதான்!


''அப்படியா...'' என்ற மித்ரா, ''அன்னுார் ஏரியாவுல வருவாய்த்துறை அலுவலர்கள், வேலைபார்த்துக்கிட்டே வேலைநிறுத்தத்துல ஈடுபட்டாங்களாமே...'' என, கேட்டாள்.

''அந்தக் காமெடிய ஏன் கேக்குறே... அன்னுார் தாலுகா அலுவலகத்துல வருவாய்த்துறை அலுவலர்கள் சில பேரு, வருகை பதிவேட்டுல கையெழுத்து போடலை; ஆனா, இருக்கையில உட்கார்ந்து வேலை பார்த்திருக்காங்க. அதுசம்பந்தமா விசாரிச்சதுக்கு, 'வேலைநிறுத்தம் முடிஞ்சதும் அந்த வேலையை நாங்களே செய்யணும். அதனால, வேலை பார்த்துக்கிட்டே போராட்டத்துல கலந்துக்கிட்டோம்'னு சொல்லியிருக்காங்க. இதென்னடா... புதுமையா இருக்கேன்னு ஆபீசுக்கு வந்தவங்க சொல்லிட்டு போயிருக்காங்க,'' என்றபடி, ஸ்கூட்டரை ஸ்டார்ட் செய்தாள் சித்ரா.

போதை கலாசாரம்


ரோந்து போலீஸ் ஜீப் நிற்பதை கவனித்த மித்ரா, ''மூட்டை மூட்டையா போதை வஸ்துகள் நம்மூருக்கு வந்துட்டே இருக்குதாமே...'' என, சப்ஜெக்ட் மாறினாள்.

''ஆமாப்பா... உண்மைதான்! என்ன செய்றதுன்னே தெரியாம போலீஸ்காரங்க திணறிட்டு இருக்காங்க. காலேஜ் ஸ்டூடன்ஸ், தொழிலாளர்களை குறிவச்சு ரூரல் ஏரியாவுல சப்ளை செய்றாங்களாம். 'அரெஸ்ட்' ஆகுறவங்கள்ட்ட போலீஸ் தரப்புல சரியா 'என்கொயரி' செய்றதில்லைன்னு, ஒரு 'கம்ப்ளைன்ட்' வந்துருக்கு.

போதை வஸ்து 'ரூட்'டை கண்டுபிடிச்சிட்டா... ஈஸியா கிளீயர் பண்ணிடலாம். போதையில்லா தமிழகம்னு மேடைக்கு மேடை முழங்குறாங்க. ஆனா, அந்தளவுக்கு அதிரடி ஆக்சன் இருக்கறதில்லைன்னு, நேர்மையான போலீஸ் ஆபீசர்ஸ் புலம்பிட்டு இருக்காங்க. எஸ்.பி., சாட்டையை சுழற்றணும்னு ஆசைப்படுறாங்க,''

லாட்டரி சேல்ஸ் ஜோர்


''ரூரல் எஸ்.பி., கடுமையான நடவடிக்கை எடுக்கறதா சொன்னாங்களே...''

''மித்து, அவரு கரெக்ட்டா இருக்காரு; அவர் ஆபீசுல இருந்து உத்தரவு பறந்துட்டு இருக்கு. ஸ்டேஷன்ல இருக்கறவங்க வேலை செய்யணுமே. தடை செய்யப்பட்ட லாட்டரி சேல்ஸ் இருக்கவே இருக்கக் கூடாதுன்னு, எஸ்.பி., கறாரா உத்தரவு போட்டிருக்காரு. ஆனா, தொண்டாமுத்துார் ஏரியாவுல ஒரு நம்பர் லாட்டரி சேல்ஸ், சக்கைப்போடு போடுதாம். யாராச்சும் லாட்டரி சம்பந்தமா கம்ப்ளைன்ட் கொடுக்க வந்தா, ஆதாரம் இருக்கான்னு கேட்டு, தட்டிக் கழிக்கிறாங்களாம்...''

'மப்டி'யில் கண்காணிப்பு


''அதெல்லாம் இருக்கட்டும்... சிட்டி போலீஸ் கமிஷனர் 'மப்டி'யில ஸ்டேஷன் செயல்பாடுகளை கண்காணிக்கிறாராமே... உண்மையா...''

''சிட்டியில டூட்டியில இருக்கற போலீஸ்காரங்க செயல்பாடுகளை, 'மப்டி'யில் நின்னு கண்காணிக்குறாராம். சம்பந்தப்பட்ட போலீஸ்காரங்களை மறுநாள் கூப்பிட்டு 'என்கொயரி' செய்றாராம். யாராச்சும் தப்பு செஞ்சிருந்தா, துறை ரீதியா நடவடிக்கை எடுக்குறாராம்.

நல்லா வேலை பார்த்தவரா இருந்தா, அவரை வரவழைச்சு கிப்ட் கொடுத்து பாராட்டுறாராம். சில நாட்களுக்கு முன், சாயிபாபா காலனி போலீஸ் ஸ்டேஷனை கண்காணிச்சிருக்காரு. அதனால, சிட்டி போலீசார், 24 மணி நேரமும் 'அலர்ட்'டா இருக்காங்களாம்,'' என்றபடி, கலெக்டர் ஆபீசுக்குள் நுழைந்தாள் சித்ரா.

பணம் கேட்டு தொல்லை


''கவர்மென்ட் ஹாஸ்பிட்டல்ல, 'போஸ்ட் மார்ட்டம்' செஞ்ச பிறகு பிரேதத்தை கொடுக்கறதுக்கும் பணம் கேட்டு தொந்தரவு செய்றாங்களாமே...''

''ஆமாப்பா... தெனமும், 10க்கும் மேற்பட்ட உடல் பிரேத பரிசோதனை நடக்குது. 'மார்ச்சுவரி'யில வேலைபார்க்குறவங்க, உயிரிழந்தவங்க சொந்தகாரங்ககிட்ட பணம் கேக்குறாங்களாம்; 500ல ஆரம்பிச்சு, 2,000 வரைக்கும் வாங்குறாங்களாம். கொஞ்ச நாளைக்கு முன்னாடி, கேரளாவை சேர்ந்த நாலு வயசு குழந்தை இறந்துடுச்சு. ஈவு இரக்கமில்லாம... அந்த குழந்தையோட அப்பாகிட்ட பணம் கேட்டு வாங்குனாங்களாம். இதையெல்லாம் கண்காணிச்சு, ஆக்சன் எடுக்குறதுக்கு டீனுக்கு நேரமில்லை போலிருக்கு...''

''அக்கா... இதுமாதிரி... கவர்மென்ட் டிபார்ட்மென்ட் ஒவ்வொன்னுலயும் ஏகப்பட்ட பிரச்னை இருக்கு. மக்கள் குறைதீர்க்குறோம்னு அப்பப்போ மீட்டிங் நடத்தி, மனு வாங்குறாங்க; பிரச்னை தீர்ற மாதிரி தெரியலை...'' என்றாள் மித்ரா.

விளையாட்டு வீரர்கள் அதிருப்தி


''விளையாட்டுத்துறை துணை முதல்வர் உதயநிதி கையில இருக்கு. ஆனா, ஸ்போர்ட்ஸ் டிபார்ட்மென்ட்காரங்க அக்கறையா செயல்படுறதில்லையாமே...''

''அதுவா... பாரதியார் பல்கலைக்கு உட்பட்ட கல்லுாரிகளுக்கான கராத்தே போட்டி, திருப்பூர்ல நடந்துருக்கு; இதுசம்பந்தமா, பல கல்லுாரிகளுக்கு தகவல் 'லேட்'டா போயிருக்கு; திறமையான கராத்தே வீரர்களால போட்டிக்கு போக முடியலையாம்.

கராத்தே சங்கங்கள்ல ஒரு தரப்புக்கு ஆதரவா போட்டி நடத்தியிருக்கறதா, இன்னொரு தரப்பை சேர்ந்தவங்க பாரதியார் யுனிவர்சிட்டியில கம்ப்ளைன்ட் கொடுத்திருக்காங்க; இதுவரைக்கும் எந்த நடவடிக்கையும் எடுக்கலையாம்; தேசிய அளவுல போட்டி நடத்துறதுக்கு, யுனிவர்சிட்டியில கட்டமைப்பு வசதி இருந்தும், திருப்பூருக்கு போயி நடத்துறதுக்கு என்ன அவசியம் வந்துச்சுன்னு, பாதிக்கப்பட்ட கராத்தே வீரர்கள் கேள்வி கேக்குறாங்க...'' என்றாள் மித்ரா.

''நியாயம்தானே,'' என்றபடி ஸ்கூட்டரை மரத்தடியில் நிறுத்திய சித்ரா, அதிகாரி ஒருவரை சந்திக்க, கலெக்டர் அலுவலகத்துக்குள் நுழைந்தாள்.

'இன்ஸ்டா'வை நோண்ட ஆரம்பித்தாள் மித்ரா.






      Dinamalar
      Follow us