sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், நவம்பர் 06, 2025 ,ஐப்பசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

வாராவாரம்

/

சித்ரா... மித்ரா ( கோவை)

/

பதிவுத்துறையில் 'பறக்குது வசூலு'; ஊராட்சிகளில் செயலருக 'செம மகசூலு'

/

பதிவுத்துறையில் 'பறக்குது வசூலு'; ஊராட்சிகளில் செயலருக 'செம மகசூலு'

பதிவுத்துறையில் 'பறக்குது வசூலு'; ஊராட்சிகளில் செயலருக 'செம மகசூலு'

பதிவுத்துறையில் 'பறக்குது வசூலு'; ஊராட்சிகளில் செயலருக 'செம மகசூலு'

1


ADDED : பிப் 17, 2025 11:47 PM

Google News

ADDED : பிப் 17, 2025 11:47 PM

1


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ரேஸ்கோர்ஸ் சுற்றுவட்டச்சாலையில், சித்ராவும், மித்ராவும் 'வாக்கிங்' சென்றனர்.

கலெக்டர் முகாம் அலுவலகத்தை பார்த்த மித்ரா, ''என்னக்கா... நம்மூருக்கு புது கலெக்டர் வந்திருக்காரு. அவரைப்பத்தி விசாரிச்சீங்களா...'' என, பேச்சை ஆரம்பித்தாள்.

''இவர், பழைய கலெக்டர் கிராந்திகுமாருக்கு ஜூனியர். ஏற்கனவே திருப்பூர் கார்ப்பரேஷன்ல கமிஷனரா இருந்திருக்காரு. அதனால, நம்மூர் ஸ்டைல் நல்லா தெரிஞ்சு வச்சுருக்காரு... பழைய கலெக்டரும் இவருக்கு நிறைய 'டிப்ஸ்' கொடுத்திருக்காரு.

கனிம வள கடத்தல், ஐகோர்ட்டுல நடக்குற வழக்கு பைல், தீர்ப்பு நகலை வாங்கி முழுசா படிச்சாருன்னா... இவருக்கும் விபரீதம் புரியும். அதுக்கப்புறம்... புது கலெக்டர் எடுக்கப் போற நடவடிக்கை எப்படி இருக்குமோ... அதுதான் அவருடைய செயல்பாடா இருக்கும்னு, கவர்மென்ட் ஆபீசர்ஸ் பேசிக்கிறாங்க.

ஏன்னா... கனிம வள கொள்ளையில ஆளுங்கட்சி, கூட்டணி கட்சியை சேர்ந்தவங்க சம்பந்தப்பட்டு இருக்காங்க. அரசியல் அழுத்தம் வர்றதுக்கு வாய்ப்பிருக்குங்கிறதுனால, பதவியேத்ததும் கொஞ்சம் கூட தயங்காம, பாம்பு புற்றுக்குள் தைரியமா கையை விட்டிருக்காரு. இந்த விவகாரத்தை எப்படி டீல் பண்ணுவாருன்னு பார்ப்போம்...''

''ஒரே நாள்ல ஏகப்பட்ட தாசில்தார்களை ஏரியா விட்டு ஏரியா, 'டிரான்ஸ்பர்' செஞ்சாங்களே. பலரும் 'ஜாயின்ட்' பண்ணலைன்னு சொல்றாங்களே, உண்மையா...''

''அதுவா... பழைய கலெக்டர் போட்ட 'டிரான்ஸ்பர்' உத்தரவுங்கிறதுனால, தயக்கத்துல இருக்காங்க. புது கலெக்டர் 'சிக்னல்' கொடுத்ததும், அந்தந்த வட்டத்துல 'ஜாயின்ட்' பண்ணிடுவாங்க. இதுல, கனிம வள கொள்ளையில சம்பந்தப்பட்டிருக்கிற தாசில்தார்களை, 'சஸ்பெண்ட்' செய்யணும் அல்லது மாவட்டம் விட்டு மாவட்டம் மாத்தணும். இந்த விவகாரத்துல என்ன முடிவெடுக்கப் போறாருன்னு தெரியலை...''

கலெக்டரின் 'பீல்ட் விசிட்'


''ஜாயின் பண்ணுன மறுநாளே, 'பீல்ட் விசிட்'டுக்கு கெளம்பிட்டாருன்னு சொன்னாங்களே...''

''ஆமாப்பா... உண்மைதான்! காரமடை யூனியன்ல இருக்கற ஊராட்சிகளுக்கு போயி, கவர்மென்ட் ஸ்கீம்ல கட்டுற வீடுகளை பார்த்திருக்காரு... வீடு மட்டும் கட்டுறதோட விட்டுடாம... கழிவு நீர் போறதுக்கும் தீர்வு ஏற்படுத்தணும். 'சோக் பிட்' போடுறதுக்குரிய ஸ்கீமை இணைச்சு செஞ்சா, ஒரே நேரத்தில் பிரச்னை தீர்ந்திரும். வீடு கட்டுனதுக்கு பின்னாடி, கால்வாய் கட்டித்தாங்கன்னு கோரிக்கை வராதுன்னு, ஆபீசர்களுக்கு 'அட்வைஸ்' பண்ணியிருக்காரு,''

'ஒன் வே'ல போலீஸ் ஆபீசர்


அவ்வழியாகச் சென்ற ரோந்து போலீஸ் ஜீப்பை பார்த்த மித்ரா, ''போலீஸ் ஆபீசரின் காரே, 'ஒன்-வே'ல போச்சாமே...'' என கேட்டாள்.

''அந்தக்கூத்தை ஏன் கேக்குறே... ராம் நகர், ரங்க கோனார் வீதியில இருக்கற இந்து முன்னணி ஆபீஸ் வழியா, போலீஸ் அதிகாரி இன்னோவோ கார்ல 'ரவுண்ட்ஸ்' போனாரு. அவருக்கு பின்னாடி, அதிவிரைவு படை வண்டியும் போச்சு,''

''அப்போ, 'நோ என்ட்ரி'யில போலீஸ் ஆபீசர் கார் போச்சு. குறுகலான அந்த ரோட்டுல, ஆபீசரின் கார் போனதாலேயே போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டுச்சு. போதாக்குறைக்கு அதிவிரைவு படை போலீஸ்காரங்க வேனும் போனதால, ஏகப்பட்ட பிரச்னை ஏற்பட்டுச்சு.

எதைப்பத்தியும் கவலைப்படாம, போலீஸ்காரங்க வண்டியில போனாங்க. ரோட்டுல இடதுபுறம் இருந்த கடை கூரையில அவங்க வண்டி மோதுனதுல, சேதமடைஞ்சு, லைட்டும் ஒடைஞ்சு, ரோட்டுல விழுந்துச்சு.

அதை பார்த்துட்டு பேசாம நகர்ந்து போயிட்டாங்க. அந்த ஏரியாக்காரங்க ரொம்பவே வருத்தப்பட்டாங்க. போலீஸ்காரங்க 'ரவுண்ட்ஸ்' யாருக்காக போறாங்கன்னு தெரியலை.. பொதுமக்களுக்கு மட்டும்தான் 'நோ என்ட்ரி' ரூல்ஸ் போலிருக்கு,''.

பதிவு துறையில் புதிய யுக்தி


''லஞ்சம் வாங்குறதுக்கு பத்திரப்பதிவு துறையில புது யுக்தி கையாள்றாங்களாமே...''

''நானும் கேள்விப்பட்டேன்... வெள்ளலுார் ரோட்டுல இருக்கற பத்திரப்பதிவு ஆபீசுக்கு வந்துட்டு போற பத்திரப்பதிவு எழுத்தர்களுக்கு, 'மீட்டிங்' போட்டிருக்காங்க. அதுல, 'சட்டத்தை மீறி யாரும் வசூல் வேட்டை பண்ணக்கூடாது'ன்னு சொல்லியிருக்காங்க.

உடனே, ரொம்ப ஸ்ட்ரிக்ட் போலிருக்குன்னு டாக்குமென்ட் ரைட்டர்ஸ் நெனைச்சிருக்காங்க. அடுத்த நிமிஷமே... சட்டத்தை வளைச்சு பணம் சம்பாதிக்கறதுக்கு, ஏகப்பட்ட ரூட் இருக்கு. அதை 'யூஸ்' பண்ணணும். விஜிலென்ஸ் டிபார்ட்மென்ட்டுகாரங்க, சாயங்காலத்துல ரெய்டுக்கு வருவாங்க.

கொடுக்கல் வாங்கலை மார்னிங்ல முடிச்சுறணும்னு, டிப்ஸ் குடுத்திருக்காங்க. டாக்குமென்ட் ரைட்டர்ஸ் ரெண்டு பேரை செலக்ட் பண்ணி, அவுங்க மூலமா 'டீலிங்' செய்றாங்களாம். யார் எந்த விஷயத்துக்கு வந்தாலும், நேரடியா பேச மாட்டாங்களாம். அந்த ரெண்டு பேர் மூலமாவே வரணும்னு, கறாரா ஆர்டர் போட்டிருக்காங்களாம்,''

''லஞ்சப்பணத்தையும் ஒசத்திட்டதா சொல்றாங்களே...''

''கார்ப்பரேஷன் லிமிட்டுக்குள்ள வரப்போகுதுன்னு சொல்லி, வெள்ளலுார், மதுக்கரை ஏரியாவுல பத்திரப்பதிவு செய்றதுக்கு, ஒரு பத்திரத்துக்கு ஆயிரம் ரூபான்னு கலெக்சன் பண்ண ஆரம்பிச்சிட்டாங்களாம். இதுக்கு முன்னாடி, 250 ரூபா வாங்கியிருக்காங்க. இன்னும் கார்ப்பரேஷன் லிமிட்டுக்குள்ள இணையவே இல்லை; அதுக்குள்ள லஞ்சப் பணத்தை ஒசத்திட்டாங்க. இதனால, பப்ளிக் தான் பாதிக்கப்பட்டு இருக்காங்க...''

'ல'கரத்துல டீலிங்


''சரவணம்பட்டி பத்திரப்பதிவு ஆபீசுல, பெரிய அளவுல டீலிங் நடந்துருக்காமே...''

''ஆமாப்பா... நானும் கேள்விப்பட்டேன். பல கோடி ரூபா சொத்து மதிப்புள்ள நிலத்தை பதிவு செய்றதுக்கு வந்திருக்காங்க. மதிப்புக்கு தகுந்த மாதிரி ஸ்டாம்ப் பேப்பர் வாங்கணும். அதை தவிர்க்கிறதுக்கு, 15 'ல'கரம் லஞ்சம் கைமாறியிருக்குதாம்.

இந்த விவகாரத்துல, கவர்மென்ட்டுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டிருக்குன்னு பேசிக்கிறாங்க. பத்திரப்பதிவு ஆபீஸ் பக்கம், விஜிலென்ஸ் ஆபீசர்ஸ் எட்டிப் பார்த்தா நல்லாயிருக்கும்னு 'பப்ளிக்' நினைக்கிறாங்க...''

கல்லா கட்டும் செகரட்டரீஸ்


''ஊரக உள்ளாட்சிகளை கண்காணிக்கிறதுக்கு ஆள் இல்லாததால, கன்ட்ரோல் இல்லாம கல்லா கட்டுறாங்களாமே...''

''யெஸ்... நீ சொல்றது நுாத்துக்கு நுாறு கரெக்ட். இதுக்கு முன்னாடி, பஞ்சாயத்து சேர்மன், கவுன்சிலர்ஸ் இருந்தாங்க. இப்போ, அவுங்க இல்லாததால, பஞ்சாயத்து செகரட்டரி சொல்றதே சட்டம்னு ஆகிடுச்சு.

மனை வரன்முறைக்கு போனா, இஷ்டத்துக்கு பணம் கேக்குறாங்களாம். பணம் கொடுக்கலைன்னா, ஊராட்சிகள்ல எந்த காரியமும் நடக்குறதில்லையாம். இடத்துக்கு தகுந்த மாதிரியும், அப்ளிகேசன் கொண்டு வர்றவர் வசதிக்கு தகுந்த மாதிரியும், 'ரேட் பிக்ஸ்' பண்ணி, கரன்சியை கறந்திடுறாங்களாம்...''

இதுல, அன்னுார் யூனியன்ல இருக்கற சில ஊராட்சிகள்ல, ஆளுங்கட்சியை சேர்ந்தவங்க, 100 நாள் வேலை திட்ட அட்டை வச்சிருக்கிறவங்கள, ஊராட்சிகளுக்கு உதவியாளரா நியமிச்சு, அவுங்க நிர்வாகத்தை நடத்துறாங்களாம். ஆளுங்கட்சிக்காரங்களை மீறி, ஊராட்சியை நடத்த முடியாம செகரட்டரிகள் தவிக்கிறாங்களாம்...'' என்றபடி, 'வாக்கிங்'கை நிறைவு செய்து, காபி ஷாப் நோக்கி நடந்தாள் சித்ரா.

குழாயை உடைத்து கலெக் ஷன்


அங்கு நின்று கொண்டிருந்த கார்ப்பரேஷன் ஜீப்பை பார்த்த மித்ரா, ''கார்ப்பரேஷன் மேட்டர் ஏதும் இல்லையா...'' என கேட்டாள்.

''மித்து... கார்ப்பரேஷன் டிபார்ட்மென்ட்டு ஊழல் கறைபடிஞ்சது. தோண்டத் தோண்ட பூதம் கெளம்பிட்டே இருக்கும். கொஞ்ச நாளைக்கு முன்னாடி, 27வது வார்டுல சாக்கடை கால்வாயை சீரமைச்சிருக்காங்க; வழக்கம்போல குடிநீர் குழாயை ஒடைச்சிட்டாங்க.

கார்ப்பரேஷன் ஆபீசர்ஸ்கிட்ட பலமுறை சொல்லியும் கேக்கலை. சில வீடுகளுக்கு குடிநீர் சப்ளை பாதிச்சது. பேச்சு நடத்தி, கார்ப்பரேஷன் இன்ஜி., செக்சன் அதிகாரிக்கு, 10 ஆயிரம் ரூபா, குழி தோண்டுன ரெண்டு பேருக்கு 600 ரூபா, தண்ணீர் திறந்து விட்டவருக்கு 200 ரூபா கொடுத்திருக்காங்க. அதுக்கப்புறம் சப்ளை சரியாகி இருக்கு,''

''அக்கா... நீங்க சொல்றது கார்ப்பரேஷன்ல நடக்குறதுல ஒரு சாம்பிள். அஞ்சு மண்டலத்துல நடக்குற விஷயங்களை பேச ஆரம்பிச்சா... விடிஞ்சிரும்...'' என்றபடி, காபி ஷாப்-க்குள் நுழைந்தாள் மித்ரா,






      Dinamalar
      Follow us