sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

வாராவாரம்

/

சித்ரா... மித்ரா ( கோவை)

/

மாமூல் மேட்டரால போலீஸ்காரங்க பீதி

/

மாமூல் மேட்டரால போலீஸ்காரங்க பீதி

மாமூல் மேட்டரால போலீஸ்காரங்க பீதி

மாமூல் மேட்டரால போலீஸ்காரங்க பீதி


ADDED : ஆக 06, 2024 06:27 AM

Google News

ADDED : ஆக 06, 2024 06:27 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

''என்னக்கா... நம்மூருக்கு புது மேயர் செலக்ட் பண்ணிட்டாங்க போலிருக்கு... '' என்றபடி, வீட்டுக்குள் நுழைந்தாள் மித்ரா.

ஹாலில் அமர்ந்து, மொபைல் போனில், சமூக வலைதளங்களை பார்த்துக் கொண்டிருந்த மித்ரா, ''ஆமாப்பா... மேடைக்கு மேடை சமூக நீதி பேசுறாங்க. இப்போ, பெரும்பான்மை சமுதாயத்தை புறக்கணிக்கக் கூடாதுன்னு, அந்த சமுதாயத்தைச் சேர்ந்த கவுன்சிலரை தேர்வு செஞ்சிருக்காங்களாம். ஒரு மாவட்டம், ரெண்டு எம்.பி., பதவியை அச்சமுதாயத்துக்கு கொடுத்திருக்காங்க; மறுபடியும் மேயர் பதவி கொடுத்ததைப் பார்த்துட்டு, மத்த சமுதாயத்து கவுன்சிலர்கள்ட்ட கடுமையான அதிருப்தியை ஏற்படுத்திருக்கு,''

''ஏன்னா... லோக்சபா எலக்சன்ல, மேயர் சமுதாயத்தைச் சேர்ந்தவுங்க பெரும்பாலும் அ.தி.மு.க.,வுக்கும், அண்ணாமலைக்காக பா.ஜ.,வுக்கும் ஓட்டுப்போட்டுருக்காங்கன்னு, கட்சியில இருக்குற மத்த சமுதாயத்துக்காரங்க, ஆதாரப்பூர்வமா புள்ளி விபரம் காட்டியிருக்காங்க. இருந்தாலும் ஜாதியை பார்த்துருக்காங்க. ஏற்கனவே இருந்த மேயர், 'நார்த் ஜோன்'ங்கிறதுனால, அதே ஜோன்ல இருந்து மறுபடியும் செலக்ட் பண்ணியிருக்காங்களாம்,''

ஜெயில் மூவ்


''இதுக்கும் ஒரு காரணம் சொல்றாங்க. எம்.பி., எலக்சன்ல அண்ணாமலைக்கு கார்ப்பரேஷன் லிமிட்டுக்குள்ள ஏகப்பட்ட ஓட்டு விழுந்திருக்கு. பெரும்பான்மையா இருக்கற சமுதாயத்தைச் சேர்ந்தவங்கள இப்போ புறக்கணிச்சா, 2026 அசெம்பிளி எலக்சன்ல எதிரொலிக்கும்னு சொல்லியிருக்காங்க. சிறையில இருக்கற முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி ரெகமென்டேசன்ல, புதிய மேயரை செலக்ட் பண்ணியிருக்கறதா சொல்றாங்க,''

''இன்னைக்கு எலக்சன் நடக்கப் போகுது; தலைமைக்கு கட்டுப்பட்டு போட்டி இல்லாம 'செலக்ட்' பண்றதுக்கு 'அட்வைஸ்' பண்ணியிருக்காங்க. நெல்லையில நடந்த மாதிரி, யாராச்சும் போட்டி வேட்பாளரா வேட்பு மனு தாக்கல் செய்வாங்களோங்கிற பயத்துல, எலக்சன் நடத்துறதுக்கு கார்ப்பரேஷன் ஆபீசர்ஸ் தயாரா இருக்காங்களாம்.

இன்னொரு சதி வேலை


''ஓட்டுப்பெட்டி எல்லாம் தயார் செஞ்சு வச்சிருக்காங்க... நெல்லையில எப்படி எலக்சன் நடத்துனாங்கன்னு கேட்டுத் தெரிஞ்சுக்குங்க; எந்தவொரு விஷயத்திலும் சொதப்பிடக் கூடாதுன்னு சொல்லியிருக்காங்களாம். அதிருப்தியில இருக்கற கவுன்சிலர்கள், எலக்சனுக்கு வருவாங்களான்னு தெரியலை,''

''இந்த பிரச்னையில, இன்னொரு சதி வேலையும் நடந்திருக்காம். கார்ப்பரேஷன் ஆபீசர்ஸ் சைடுல எலக்சன் நடத்துறதை பத்தி விசாரிச்சிருக்காங்க. அப்போ, மண்டல தலைவர்களையோ அல்லது நிலைக்குழு தலைவர்களையோ மேயரா தேர்ந்தெடுத்தா, காலியாகுற பதவிக்கு இன்னொரு தடவை எலக்சன் நடத்த வேண்டிய சூழல் வரும். கவுன்சிலர்ல இருந்து ஒருத்தரை தேர்ந்தெடுத்தா, அந்த பிரச்னை வராதுன்னு சொல்லியிருக்காங்க. இதை நுால் கேப்புல தெரிஞ்சுக்கிட்டு, வாய்ப்பை கைப்பத்தியிருக்கறதா பேசிக்கிறாங்க,''

பதவி கைப்பற்ற 'மூவ்'


''கம்யூ., கட்சியிலும் பதவியை கைப்பத்துறதுக்கு 'மூவ்' நடக்குதுன்னு சொல்றாங்களே... உண்மையா...''

''ஆமா... இந்த இன்பர்மேஷன் எனக்கும் கெடைச்சது; கம்யூ., கட்சியை சேர்ந்த நிர்வாகிகளிடம் விசாரிச்சேன்.

''ரெண்டு கம்யூ., கட்சிக்கும் தலா நாலு பேருன்னு, எட்டு கவுன்சிலர்கள் இருக்காங்க. 'மாவட்டத்தை' ஆட்டிப் படைக்கற முன்னாள் எம்.எல்.ஏ., ஒருத்தரு, மாமன்றத்துல கவுன்சில் குழு தலைவரா இருக்கறவரை மாத்துறதுக்கு, 'மூவ்' பண்ணிட்டு இருக்காராம்,''

''ஆளுங்கட்சியில மேயரையே மாத்துறாங்க. நம்ம கட்சியில குழு தலைவரை மாத்தக்கூடாதான்னு கேட்குறாராம். கட்சியில இருந்து கமிஷனருக்கு, கடிதம் கொடுக்கணும்னு கம்யூ., கட்சிக்காரங்க மத்தியில பரபரப்பா பேசிட்டு இருக்காங்க.

பூ பெயர் கொண்ட நான்கெழுத்து கவுன்சிலரை மாத்திட்டு, சாந்தமா இருக்கற மூன்றெழுத்து கவுன்சிலரை நியமிக்க, 'பிளான்' போடுறாங்களாம்,''

கல்லா கட்டும் அசிஸ்டென்ட்


''கார்ப்பரேஷன் ஜோனல் சேர்மன் ஒருத்தரின் அசிஸ்டென்ட் ஒருத்தரு தாலுகா ஆபீசுக்கு போயி, கெத்து காட்டுறாராமே...''

''அதுவா... சிவனின் மறுபெயர் கொண்ட அந்த அசிஸ்டென்ட் ரேஷன் கடையில வேலைபார்த்தவரு. தெற்கு, வடக்கு தாலுகா ஆபீசுக்கு போயி, ஜோனல் சேர்மன் பெயரை சொல்லி, வேலையை கச்சிதமா செஞ்சு கொடுக்குறாராம். ஒவ்வொரு வேலைக்கும் ஒரு ரேட் பேசி, வாங்குறாராம்,''

கலெக்சன் எங்கே போகுது!


''அதெல்லாம் இருக்கட்டும். 'எல் அண்டு ஓ' போலீஸ்காரங்க, வாகன ஓட்டிகளை தடுத்து நிறுத்தி, ஹெல்மெட் கேஸ் போடுறாங்களாமே...''

''அதையேன் கேக்குறே... போலீஸ்காரங்க செய்ற அட்டூழியத்தை எழுத ஆரம்பிச்சா... பக்கம் பக்கமா எழுதிட்டே போகலாம். உதாரணத்துக்கு ஒரு விஷயத்தை சொல்றேன்... கேளு! கீரணத்தத்துல இருக்குற ஐ.டி., பார்க்கை ஒட்டி, கீரணத்தம் கிராமத்துக்குப் போற ரோட்டுல ஒரு தடுப்பணை இருக்கு.

அந்த ரோட்டுல எப்பப்போனாலும் ரோட்டோரத்துலயே நாலு பேரு உட்கார்ந்து தண்ணி அடிச்சிட்டு இருக்காங்க. காலி மதுபாட்டில், குப்பை எல்லாத்தையும் தண்ணியில போடுறாங்க. ஜோடி ஜோடியா உட்கார்ந்து யாரைப் பத்தியும், கவலைப்படாம அத்துமீறிட்டு இருக்காங்க,''

''இதையெல்லாம் தடுக்காத சரவணம்பட்டி 'எல் அண்டு ஓ' போலீஸ்காரங்க, ஐ.டி., பார்க் முன்னால நின்னுட்டு, ஹெல்மெட் போடாம வர்றவுங்களைப் பிடிக்கிறாங்களாம். போன ஞாயித்துக்கிழமை காலையில எட்டு மணிக்கு இப்பிடித்தான் ஏகப்பட்ட பேரைப் பிடிச்சு, பைன் போட்ருக்காங்க.

டிராபிக் போலீஸ் பண்ற வேலையை, நீங்க ஏன் பண்றீங்கன்னு ஒரு இளைஞர் கேட்டதுக்கு, ஹெல்மெட் போட்டு வந்த அவருக்கு, ஹெல்மெட் போடாம வந்ததா ஆயிரம் ரூபாய் பைன் போட்ருக்காங்க. அது, 'சிசி டிவி'யிலயும் பதிவாயிருக்குறதை ஐ.டி.,காரங்க எடுத்து வச்சிருக்காங்க,''

''இதுல இன்னொரு சந்தேகம் என்னன்னா, அவுங்க பைன் போட்டதா வர்ற மெசேஜ்ல, பைன் அமவுண்ட் எவ்வளவுன்னே தெரியாம 'பிளாங்கா' இருக்காம். உண்மையிலேயே அவுங்க கட்டுற பைன், கவர்மென்ட்டுக்கு போகுதான்னே சந்தேகமா இருக்கு. அங்க நடக்குற வசூலைப் பத்தி, விஜிலென்ஸ் போலீஸ் விசாரிச்சா நல்லாருக்கும்னு சொல்றாங்க,''

''அக்கா... இதே சரவணம்பட்டியில அரசுக்கு சொந்தமான இடத்தை ஆக்கிரமிச்சு கட்டடம் கட்டி, ரேஷன் கடைக்கு வாடகைக்கு கொடுத்திருக்காங்களாம். இதுசம்பந்தமா 'கம்ப்ளைன்ட்' கொடுத்தும் கவர்மென்ட் சைடுல நடவடிக்கை இல்லையாம்,''

போஸ்டர் யுத்தம்


''அடக்கொடுமையே...'' என்ற சித்ரா, ''ஆளுங்கட்சியில இப்பவே கோஷ்டி சண்டை அதிகமாயிடுச்சாமே...'' என, கேட்டாள்.

''ஆமாக்கா... 'மாவட்டம்' தரப்பிலும், மாவட்டத்தின் ஆதரவாளர்கள் தரப்பிலும் சிட்டிக்குள்ள ஒட்டுற போஸ்டர்ல, எம்.பி., போட்டோ போடுறதில்லையாம். இந்த விவகாரம் தலைமை வரைக்கும் போயிருக்காம். சிட்டிக்குள்ள எங்கெங்கெல்லாம் போஸ்டர் ஒட்டியிருக்காங்கன்னு உளவுத்துறை போலீஸ்காரங்க கணக்கெடுத்துட்டு இருக்காங்க. போஸ்டர் விவகாரம் கட்சிக்குள்ள சலசலப்பை ஏற்படுத்தியிருக்கு,''

அந்த பயம் இருக்கட்டும்!


''ஒட்டுமொத்த போலீஸ் டீமே கலக்கத்துல இருக்கறதா சொல்றாங்களே...''

''அதுவா... பேரூர் ஸ்டேஷன்ல மாமூல் பங்கு பிரிக்கற ஆடியோ லீக்காகி போலீஸ் வட்டாரத்துல பரபரப்பா பேசிக்கிட்டு இருந்தாங்க. அப்புறம்... ரூரல் லிமிட்டுல இருக்கற குடில்கள்ல சாராய ஆறு ஓடுறது; கஞ்சா சேல்ஸ் பண்றதை பத்தி, விரிவா எழுதுனதுனால... ஒட்டுமொத்த போலீஸ் டீமையே மாத்திடுவாங்களோன்னு, பயத்துல இருக்காங்க. இந்த நேரத்தை பயன்படுத்தி, உளவுத்துறை போலீஸ்காரங்க, மேலிடத்துக்கு 'ரிப்போர்ட்'டுகளை தள்ளி விட்டுட்டு இருக்காங்களாம்...''

குடிகாரர்களின் புலம்பல்


''ஒயின் ஷாப் பக்கத்துலேயே நின்னுக்கிட்டு, போலீஸ்காரங்க பைன் போடுறாங்களாமே...''

''அதையேன் கேக்குறீங்க. சிங்காநல்லுார் போலீஸ்காரங்க காட்டுற கெடுபிடி ரொம்ப ஓவரா போயிட்டு இருக்குதாம். ஒண்டிப்புதுாரில் இருந்து எஸ்.ஐ.எச்.எஸ்., காலனி திரும்புற வளைவுல ஒரு ஒயின்ஷாப் இருக்கு.

அங்க குடிச்சிட்டு வாகனங்கள்ல வரவங்கள, பக்கத்துலயே நின்னுக்கிட்டு டிராபிக் போலீஸ்காரங்க புடுச்சி 'டிரங்க் அண்டு டிரைவ்' வழக்கு போடுறாங்களாம். சரக்கும் விக்கிறீங்க; அபராதமும் போடுறீங்கன்னு 'குடி'மகன்கள் புலம்பிட்டு போறாங்க...''

''இந்த பிரச்னை போதாதுன்னு... இன்னொரு பிரச்னை ஆரம்பிச்சிருக்காம். சிங்காநல்லுார் பஸ் ஸ்டாண்ட் பின்னாடி கோவிலுக்கு பக்கத்துல இருந்த மதுக்கடைக்கு, பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவிச்சதுனால துாக்குனாங்க. இப்போ, அதே இடத்துல, 'எப்எல்2' கடை 'ஓபன்' பண்ணப் போறாங்களாம். அந்த ஏரியா 'பப்ளிக்' கொந்தளிப்புல இருக்காங்க,''

தாசில்தாருக்கு மனஉளைச்சல்


''சிட்டிக்குள்ள இருக்கற ஒரு தாசில்தார் மன உளைச்சல்ல இருக்காராமே...''

''ஆமாக்கா... உண்மைதான்! ஒரே நாள்ல, 17 தாசில்தார்களை வெவ்வேறு இடத்துக்கு மாத்துனாங்க; அதுல, சிட்டிக்குள்ள இருக்கற தாசில்தாரும் சிக்கிட்டாரு. பொறுப்புக்கு வந்து நாலு மாசம்தான் ஆச்சாம்; பொறுப்புக்கு வர்றதுக்கு செலவு செஞ்ச தொகையை, இன்னும் முழுசா 'சம்பாதிக்கவே' இல்லையாம்; அதுக்குள்ள மாத்திட்டாங்கன்னு புலம்பிட்டு இருக்காரு. மறுபடியும் பழைய இடத்துக்கே திரும்ப வர்றதுக்கு முட்டி மோதிட்டு இருக்காராம்,''

பார்சல் கிடையாது


''உணவு டெலிவரி செய்ற பசங்க, ஹெல்மெட் போட்டுட்டு வந்தா... பார்சல் கொடுக்கறதில்லையாமே... என்னாச்சு...''

''அதுவா... சென்னையில உணவு டெலிவரி செய்றவங்க யூனிபார்ம்ல வந்து, கட்சி தலைவரை கொலை செஞ்சதுனால... நம்மூர்ல இருக்கற ஓட்டல் நிர்வாகிகள் ரொம்ப உஷாராகிட்டாங்க. சில சமயங்கள்ல உணவு பார்சலை மாத்தி வாங்கிட்டு போயிடுறாங்களாம்.

அவுங்க நிஜமாவே ஊழியர்கள் தானான்னு, ஓட்டல் நிர்வாகங்களுக்கு சந்தேகம் வந்துருக்கு. அதனால, ஹெல்மெட் போட்டுட்டு வந்தா, பார்சல் தர மாட்டோம்னு சில ஓட்டல்களுக்கு முன்னாடி, போர்டு மாட்டிட்டாங்க...''

அத்துமீறும் கைதிகள்


''அடக்கொடுமையே...'' என்ற சித்ரா, ''காந்திபுரத்துல பாரதியார் ரோட்டுல இருக்கற பெட்ரோல் பங்க்குல வேலைபார்க்குற சில கைதிங்க அத்துமீறி நடந்துக்கிறாங்களாமே...''

''ஆமா... நானும் கேள்விப்பட்டேன்... நன்னடத்தை கைதிகள் மறுவாழ்வுக்காக, பெட்ரோல் பங்க் நடத்துறாங்க. அங்க வேலை பார்க்குற சில கைதிங்க, வண்டிக்கு எரிபொருள் நிரப்ப வர்ற லேடீஸ்ட்ட அத்துமீறி நடந்துக்கிறாங்களாம்.

சில சமயங்கள்ல இரட்டை அர்த்தத்துல பேசி, சீண்டிப் பார்க்குறாங்களாம். அசம்பாவிதம் ஏதாச்சும் நடக்குறதுக்கு முன்னாடி, ஜெயில் ஆபீசர்ஸ் உஷாரா ஆக்சன் எடுக்கணும்னு பப்ளிக் ஆசைப்படுறாங்க,'' என்றபடி, சமையலறைக்குள் சென்றாள் மித்ரா.






      Dinamalar
      Follow us