sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/வாராவாரம்/சித்ரா... மித்ரா ( கோவை)/ ஆளுங்கட்சியில போடுறாங்க குஸ்தி!

 ஆளுங்கட்சியில போடுறாங்க குஸ்தி!

 ஆளுங்கட்சியில போடுறாங்க குஸ்தி!


ADDED : பிப் 24, 2026 04:40 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 24, 2026 04:40 AM


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

''ஆ ளுங்கட்சி படு ஸ்பீடா எலக் ஷன் வேலை செய்யுதாமே...'' என்றபடி, காபி கோப்பையை நீட்டினாள் மித்ரா.

நாளிதழ்களை புரட்டி கொண்டிருந்த சித்ரா, ''தே.மு.தி.க. வந்ததால, கூட்டணி ஸ்ட்ராங் ஆயிட்டதா நினைக்கிறாங்க. ஆனாலும் இளம் வாக்காளர்கள் விஜய் பின்னால போயிடுவாங்கன்னு ஒரு 'டாக்' இருக்கு. அதனால, இளைஞர்கள் எங்க பக்கந்தான்னு காட்றதுக்கு கணியூர்ல மேற்கு மண்டல நிர்வாகிகள் கூட்டம் நடத்துனாங்க. 75 ஆயிரம் சேர் போட்டாங்க. வார்டுக்கு ஒரு பஸ் ஏற்பாடு செஞ்சி, 50 பேரை அழைச்சிட்டு வர உத்தரவு போட்டிருந்தாங்க. பல்லடம் மகளிரணி மாநாட்டுல கொடுத்த மாதிரி ஆளுக்கொரு ஸ்நாக்ஸ் பை, பிரியாணி குடுத்தாங்க''

''உ.பி.க்கள் நம்பிடுவாங்களா... பதவியே வேணாம்; வெறும் உ.பி.யா இருந்துட்டு போறோம்னு சில பேரு ராஜினாமா கடிதம் அனுப்புனாங்களாமே...''

''திருமலையாம் பாளையத்துல 12 வருஷமா இருக்கற கட்சி நிர்வாகியை நீக்கிட்டு, வேற ஆள போட்டாங்க. கடுப்பான நிர்வாகிகள் ராஜினாமா லெட்டர் அனுப்பிருக்காங்க. தேர்தல் நடத்தி நிர்வாகி நியமிக்கிற வழக்கத்த விட்டு விலகி, வேண்டியவங்கள நியமிச்சா கட்சி வளருமா?னு கேட்டிருக்காங்க''

''லாட்டரி குடும்ப லேடி, அ.தி.மு.க.வுல எதுக்கு சேந்தாங்களாம்?''

''திருவாடானைல போட்டியிட ஆசையாம். கட்சி நிதியா 25சி கொடுத்து, 5 தொகுதி செலவை ஏத்துக்கறதா சொன்னாங்களாம்..''

''அடேங்கப்பா...'' என்ற சித்ரா, ''அமைச்சர் நேரு மேல அமலாக்க துறை வச்ச புகார்கள்ல நம்ம கார்ப்பரேஷன் மாஜி ஆபீசர் சிக்கிருக்காராமே...'' என கேட்டபடி, காபியை உறிஞ்சினாள்.

''டவுன் பிளானிங் மாஜி லேடி ஆபீசர் பெயரை சொல்லி, தொகை கிடைத்ததுனு மெசேஜ் வந்ததா வைரல் ஆகுது. அந்த ஆபீசர், ஏற்கனவே விஜிலென்ஸ் விசாரணைல சிக்கினவங்க. அரசியல் செல்வாக்குல அப்போ தப்பிச்சாங்க; இப்போ, அமலாக்கத்துறை விசாரிக்கும் போல. கரன்சி கொடுத்து போஸ்டிங் வாங்கிட்டு வந்த ஆபீசர்ஸ் பீதில இருக்காங்க''

சத்தமாக சிரித்த மித்ரா, ''சூலுார்ல போட்டி பலமாயிடுச்சு. சில்வர் அண்டா, புடவைன்னு ஆளுங்கட்சி அள்ளி குடுக்றாங்க. பதிலடியா அ.தி.மு.க.வும் கொட்டுறாங்க. ரெண்டு தரப்புலயும் மாத்தி மாத்தி பிரியாணி விருந்து வேற. தேர்தல் முடியும்போது நம்மூர்ல ஆடு கோழியே இருக்காது போல...'' என்று கவலைப்பட்டாள்.

''அவிநாசில பிரச்னை வேற மாதிரி போகுதாம். அ.தி.மு.க.வுல 3 பேர் பட்டியல் தயார் செஞ்சிருக்காங்க. அதை தெரிஞ்சுகிட்ட கட்சிக்காரங்க, அருந்ததியர் அல்லாத வேட்பாளரை நிறுத்தினா பிரச்னை வரும்னு சொல்லிருக்காங்க. திமுக அருந்ததியர் வேட்பாளர போட்டா, நம்மாளுகளே ஓட்டு போட்டு ஜெயிக்க வச்சிடுவாங்கன்னு தலைமைக்கு லெட்டர் அனுப்பிருக்காங்க...''

''ஹைவேஸ் ஆபீசர்ஸ் பிரச்னைல ரோடு அகலப்படுத்ற வேலை பாதிக்குதாமே...''

''சத்தி ரோட்டுல, கரட்டுமேடுல ஆரம்பிச்சு கோவில்பாளையம் வரை அகலப்படுத்தணும்; சென்ட்ரல் கவர்மென்ட் 75 கோடி ஒதுக்கி இருக்கு. ரெண்டு சைடுலயும் வடிகால் கட்டணும். குழி தோண்டி ஒரு மாசமாச்சு; கான்கிரீட் கலவை ஊத்தலை. விசாரிச்சா... சாலை செயலாக்க பிரிவு அதிகாரிக்கும், தரக்கட்டுப்பாடு அதிகாரிக்கும் ஈகோ பிரச்னையாம். ரெண்டு பேர் சண்டைல ஜனங்கதான் பாதிக்கப்படுறாங்க,''

''லஞ்சம் வாங்குறவங்க மேல ஆக்சன் எடுக்க கார்ப்பரேஷன் கமிஷனர் தயங்குறாராமே...''

''ரன்னிங் லைசென்ஸ்ங்கற பேர்ல ஹெல்த் இன்ஸ்பெக்டர்ஸ் சில பேரு லஞ்சம் குவிக்குறாங்கனு புகார் இருக்கு. நம்ம பேப்பர்ல, 'லஞ்சம் என்னிடம் பறித்தனர்' பகுதில தகவல் வந்துச்சு. பாதிக்கப்பட்டவங்கள கமிஷனரே வரவழைச்சு விசாரிச்சாரு. அதிகாரிகள்ட்ட விளக்கமும் கேட்டாரு. ஆனா, அதோட விவகாரம் அமுங்கிருச்சு..”

''வணிகர் சங்கமும் இதே புகார சொல்லிருக்கு. லைசென்ஸ் ரினீவல் பண்ண கட்டணத்த விட லஞ்சம் அதிகம் கேக்றாங்களாம். உடனே, இனிமே மாநகராட்சி கருவூலத்துல, ஆன்லைனுல கட்டலாம்னு கமிஷனர் ஏற்பாடு பண்ணிக் கொடுத்தாரு.

அப்டி நேரடியா பணம் கட்ட போனா மண்டல அலுவலகங்கள்ல, பணம் வாங்க மறுத்து, ஹெல்த் இன்ஸ்பெக்டர்களை பாருங்கனு சொல்றாங்க. கமிஷனரே சொல்லிருக்காரேனு கேட்டா, சர்வர் பிரச்னைன்னு அசால்ட்டா சொல்லிருக்காங்க.

லேட்டானா அபராதம் கட்டணுமேன்னு நிறைய பேர் வழக்கம்போல் மொய் எழுதினாங்களாம். இது தெரிஞ்சும் கமிஷனர் மவுனமா இருக்காராம்,'' என்றபடி, நகர் வலம் செல்ல தயாரானாள் சித்ரா.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us