sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, செப்டம்பர் 07, 2025 ,ஆவணி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

வாராவாரம்

/

சித்ரா... மித்ரா ( கோவை)

/

கோவையில் விஜய் புலி பாய்ச்சல்: ஆளுங்கட்சிக்கோ 'கிலி' காய்ச்சல்!

/

கோவையில் விஜய் புலி பாய்ச்சல்: ஆளுங்கட்சிக்கோ 'கிலி' காய்ச்சல்!

கோவையில் விஜய் புலி பாய்ச்சல்: ஆளுங்கட்சிக்கோ 'கிலி' காய்ச்சல்!

கோவையில் விஜய் புலி பாய்ச்சல்: ஆளுங்கட்சிக்கோ 'கிலி' காய்ச்சல்!


ADDED : ஏப் 29, 2025 06:32 AM

Google News

ADDED : ஏப் 29, 2025 06:32 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வீட்டு வராண்டாவில் அமர்ந்து, நாளிதழ்களை புரட்டிக் கொண்டிருந்தாள் சித்ரா.

காபி கோப்பையை நீட்டிய மித்ரா, ''என்னக்கா... நம்மூர்ல விஜய் பூத் கமிட்டி கூட்டம் நடத்தியிருக்காரு. எப்படி இருந்துச்சு...'' என, பேச்சை ஆரம்பித்தாள்.

''த.வெ.க.,வை பார்த்து, ஆரம்பத்தில இருந்தே ஆளுங்கட்சி பயந்துக்கிட்டு இருக்கு. 1977ல் எம்.ஜி.ஆர்., கொடுத்த அடியை, 2026ல் விஜய் மீண்டும் கொடுப்பாரோங்கிற பயம், ஆளுங்கட்சிகிட்ட இருக்கு. உளவுத்துறை போலீஸ்காரங்க, விஜய் கட்சிக்காரங்க 'மூவ்மென்ட்'டை உன்னிப்பா கவனிக்கிறாங்க...''

''ஏர்போர்ட்டுல வரவேற்புக்கு கூடுன கூட்டத்தை பார்த்து, போலீஸ்காரங்களே மிரண்டு போயிட்டாங்க. இத்தனை ஆயிரம் பேர் எப்படி திரண்டாங்கன்னு, 'என்கொயரி' செஞ்சாங்க. கூட்டத்தையும், தொண்டர்களையும் பார்த்ததும், விஜய் ரோடு ஷோ நடத்துனதுனால, ஒரே களேபரமாகிடுச்சு,''

''களமும் நமதே; காலமும் நமதேன்னு கருத்தரங்குல பேசியிருக்காங்க. தேவைப்பட்டால் சமரசம் செஞ்சுக்கிட்டு, எந்த எல்லைக்கும் போவேன்னு விஜய் பேசியது, ஆளுங்கட்சி தரப்பை அலற வச்சிருக்கு... அவருக்கு 'சப்போர்ட்'டா ஆதவ் இருக்கறதுனால, 2026 அசெம்ப்ளி எலக்சன் ஆளுங்கட்சிக்கு, அவ்ளோ ஈஸியா இருக்காதுன்னு சொல்றாங்க,''

ஹோட்டல் மாறிய உதயநிதி


''விஜய் தங்கியிருந்ததுனால, துணை முதல்வர் உதயநிதி, ஹோட்டலை மாத்திட்டாராமே...''

''ஆமாக்கா... உண்மைதான்! வழக்கமா, லீ மெரீடியன் ஹோட்டல்லதான் உதயநிதி தங்குவாரு. அவருக்கு, 10 'ரூம்'களை கட்சி நிர்வாகிங்க 'புக்' பண்ணி வச்சிருந்தாங்க. ஆளுங்கட்சி என்ன செய்யுதுன்னு பார்க்கலாம்னு, வீம்புக்கென்றே, அந்த ஹோட்டல்ல விஜய் தங்குனாரு. மாற்று ஏற்பாடா, ரெசிடென்சி ஹோட்டல்லயும், 10 'ரூம்'களை உதயநிதிக்காக, 'புக்' பண்ணியிருந்தாங்க. கவர்மென்ட் பங்ஷன் முடிஞ்சதும், ரெசிடென்சியில் உதயநிதி ஓய்வெடுத்தாரு...''

''இவரும் ரோடு ஷோ நடத்துனாராமே...''

''வேற வழி? ரெண்டு நாளா... நம்மூரையே விஜய் கலக்கிட்டு போயிருக்காரு. ஆளுங்கட்சியா இருக்காங்க; செல்வாக்கு இல்லைன்னு, யாரும் நினைச்சிடக் கூடாதே. அதனால, ஏர்போர்ட் ரோட்டுல வழக்கம்போல ஆட்களை நிக்க வச்சிருந்தாங்க. கார்ல நின்னுக்கிட்டு வந்து, தொண்டர்களை பார்த்து கையசைச்சாரு; சில பேருக்கு கை கொடுத்து, வரவேற்பை ஏத்துக்கிட்டாரு,''

''இதெல்லாம் பப்ளிக்கிற்கு இடைஞ்சலா இருக்குன்னு தலைவர்கள் உணர மாட்டாங்களா...''

''அதெல்லாம் அவுங்களுக்கு எங்கே புரியப்போகுது. ஓட்டு அரசியலை தானே செய்றாங்க,'' என்ற மித்ரா, ''கனிமொழியும் ரெண்டு நாளா நம்மூர்ல முகாமிட்டு இருந்தாங்களே... எதுக்கு வந்தாங்க...'' என, நோண்டினாள்.

கனிமொழி 'மூவ்'


''அதுவா... மினிஸ்டர் பதவியில இருந்து, செந்தில்பாலாஜி விலகிட்டாரு. கொங்கு மண்டலத்துல தி.மு.க.,வை தன் வசப்படுத்துறதுக்கு, கனிமொழி ஆசைப்படுறாங்களாம். அதற்கான முதல் படியா, மகளிரணி கூட்டத்தை நம்மூர்ல நடத்தி, கெத்து காட்டியிருக்காங்க... ''

''பபே ஸ்டைல்ல சைவ உணவு வகைகளோட விருந்து கொடுத்திருக்காங்க. மகளிரணியை சேர்ந்தவங்க ஒரே டிசைன் புடவையில வந்து கலந்துருக்காங்க. பங்சனுக்காக பல 'ல'கரங்களை கொட்டியிருக்காங்க.

அசெம்ப்ளி எலக்சன்ல நம்ம மாவட்டத்துல, அஞ்சு தொகுதிகளை மகளிருக்கு கொடுக்கணும்னு சொல்லியிருக்காங்களாம்... ரெண்டு நாள் தங்கியிருந்து, வெவ்வேறு நிகழ்ச்சிகள்ல தலையை காட்டியிருக்காங்க...''

''உதயநிதி கூட்டத்துக்கு பணம் கொடுத்து ஆட்களை திரட்டிட்டு வந்தாங்களாமே...''

''ஆமாப்பா... நானும் கேள்விப்பட்டேன். ஆர்.எஸ்.புரம் ஹாக்கி மைதானம் நிகழ்ச்சியில உதயநிதி கலந்துக்கிட்டாரு. ஊராட்சிகள்ல இருந்து மக்களை அழைச்சிட்டு வாங்கன்னு, மேலிடத்துல இருந்து உத்தரவு வந்திருக்கு.

ஊராட்சி செயலர்கள், துணை பி.டி.ஓ.,க்கள், ஊராட்சி ஒன்றிய பணியாளர்கள் ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு ஊரில் இருந்தும், ஆர்.எஸ்.புரத்தில் நடந்த நிகழ்ச்சிக்கு, பிரைவேட் ஸ்கூல் வாகனங்கள்ல அழைச்சிட்டு போயிருக்காங்க. கட்சிக்காரங்க மாதிரி, ஆபீசர்ஸ்சும், ஒவ்வொருத்தருக்கும், 300 ரூபா கொடுத்தாங்களாம்...''

ஆளுங்கட்சி வசூல்


''அதெல்லாம் இருக்கட்டும்... உதயநிதி பெயரைச் சொல்லி, கோடிக்கணக்குல கரன்சியை அள்ளிக் குவிச்சிட்டாங்களாமே...''

''அதுவா... ஜல்லிக்கட்டு போட்டியை காரணமா வச்சு, வசூல் வேட்டை நடத்தியிருக்காங்க. வசதியானவங்களா பார்த்து மிரட்டி வசூல் செஞ்சிருக்காங்க; சிலருக்கு அழுத்தம் கொடுத்திருக்காங்க. சிலரிடம் இத்தனை 'ல'கரம் வேணும்னு சொல்லி, வாங்கியிருக்காங்களாம். ஆளுங்கட்சி நிர்வாகி ஒருத்தரு, கட்சிக்காரங்களை நம்பாம, தன்னுடைய உறவினர்களை களத்துல இறக்கி விட்டு, வசூல் செஞ்சதா சொல்றாங்க.

உளவுத்துறை மூலமா கட்சி மேலிடத்துக்கு தகவல் போயிருக்கு. விஷயத்தை கேள்விப்பட்ட உதயநிதி, ஜல்லிக்கட்டு நடந்த ஏரியா பக்கமே போகலை... போட்டியை செந்தில்பாலாஜி துவக்கி வச்சாரு. மினிஸ்டர் பதவியை துறந்ததுனால, அவரும் இறுகுன முகத்தோட இருந்தாரு,''

கரன்சிக்கு போஸ்ட்டிங்


''ஆளுங்கட்சி வடக்கு மாவட்டத்திலும், புகைச்சல் ஓடுதுன்னு கேள்விப்பட்டேனே...''

''ஆமா, மித்து! உண்மைதான்... இளைஞரணியில இருக்கற முக்கியப்புள்ளி ஒருத்தரு, இளைஞரணி போஸ்ட்டிங்கிற்கு நிர்வாகிகளை நியமிக்கறதுல பாகுபாடு பார்க்கறதா உடன்பிறப்புகள் சொல்றாங்க. கட்சிக்காக உழைக்கிறவங்களை நியமிக்காம, கரன்சிய அள்ளிக் கொடுக்கறவங்களை மட்டுமே நியமனம் செய்றதா 'கம்ப்ளைன்ட்' போயிருக்கு.

இந்த விஷயம் 'பொறுப்பு' காதுக்கும் எட்டியிருக்குதாம். எலக்சனுக்கு முன்னாடி, ஆளுங்கட்சி தரப்புல நிர்வாகிகள் மாற்றம் நடக்கும்னு சொல்றாங்க. அப்போ, கொங்கு மண்டல அளவுல மாற்றம் அதிரடியா இருக்கும்னு, உடன்பிறப்புகள் பேசிக்கிறாங்க...''

புரோக்கரான தாசில்தார்


''மூன்றெழுத்து தாசில்தார் ஒருத்தர் புரோக்கர் வேலை செஞ்சுக்கிட்டு இருக்காராமே... அவருடைய ஆபீசுக்கு வி.ஐ.பி.,களின் கார், அடிக்கடி வந்துட்டு போகுதாமே...''

''அதுவா... செஞ்சிலுவை சங்கத்துக்கு பக்கத்துல இருக்கற ஆபீசுல, ஒரு செக்சன் இருக்குது. அங்க வேலை பார்க்குற தாசில்தார், கொரோனா காலத்துல வடக்கு தாலுகாவுல வேலைபார்த்தாரு. இப்போ, யாரை சொல்றேன்னு, ஒனக்கு நல்லா புரியும்னு நெனைக்கிறேன். வடக்குல ஒன்னே முக்கால் வருஷம் தாசில்தாரா கோலாச்சுனாரு,''

''நல்ல செல்வாக்கோட இருந்ததுனால, வி.ஐ.பி.,கள், முக்கிய பிரமுகர்கள் பலரும் நிலம், வீடு வாங்குனா, ரெவின்யூ டிபார்ட்மென்ட் சம்பந்தமா பைல் மூவ் பண்றதுக்கு, இவரை அணுகுறாங்க. ஸ்கூல், காலேஜ்களுக்கு பில்டிங் லைசென்ஸ் வாங்கித் தர்றாராம்.

அதனால, இவரை பார்க்க முக்கியஸ்தர்கள் பலரும் ஆபீசுக்கு வந்துட்டு போறாங்களாம். புரோக்கர் வேலை செஞ்சு கொடுத்தா, கரன்சியை அள்ளிக் குவிக்கிறதா ரெவின்யூ டிபார்ட்மென்ட் காரங்க பேசிட்டு இருக்காங்க,''

'இல்லீகல் ஆக்ட்டிவிட்டீஸ்'


''ரூரல் ஏரியாவுல இல்லீகல் ஆக்டிவிட்டீஸ் ஜாஸ்தியாகிட்டே போகுதுன்னு சொல்றாங்க... ரூரல் போலீஸ்காரங்க என்ன செய்றாங்க...''

''ஆமாக்கா... நானும் கேள்விப்பட்டேன். ஆனைமலை ஏரியாவுல இல்லீகல் பிசினஸ் ஜாஸ்தியா நடக்குதாம். அழுக்குச் சாமியார் கோவிலுக்கு பக்கத்துல, எம்.ஜி.ஆர்., நகர், சேத்துமடை பக்கம், சுப்பே கவுண்டன்புதுார், கோட்டூருன்னு எகப்பட்ட இடங்கள்ல 'பார்'களிலேயே 'சில்லிங்' கெடைக்குதாம். இதுமட்டுமில்ல... கேரளா லாட்டரி, விபச்சாரம், கஞ்சா சேல்ஸ்ன்னு இல்லீகல் ஆக்டிவிட்டீஸ் களை கட்டுது,''

போலீசுக்கு கவனிப்பு


''இதையெல்லாம் கண்டுக்க கூடாதுங்கிறதுக்காக, போலீஸ்காரங்களுக்கு தகுதிக்கேற்ப 'கவனிப்பு' போகுது. கனிம வள கடத்தலுக்கு லாரிக்காரங்க தனியாக கவனிக்கிறாங்க. செக்போஸ்ட்டுகளை வசூல் மையமா மாத்திட்டாங்களாம். இந்த ஏரியாவுக்கு உயரதிகாரிகள் எட்டிப்பார்க்கறதே இல்லை,''

''யாராச்சும் ஆய்வுக்கு வந்தா, தடபுடலா கவனிச்சு, தங்க வைக்கிறாங்க. அதனால, மனசு குளிர்ந்து நடவடிக்கை எடுக்கறதில்லைன்னு சமூக ஆர்வலர்கள் பேசிக்கிறாங்க. இதுசம்பந்தமா, மாநில உளவுத்துறையின் நேரடி பார்வையில இயங்குற எஸ்.பி.சி.ஐ.டி., போலீசாரும், எஸ்.பி.,க்கு கீழ் நேரடியாக இயங்குற ஸ்பெஷல் பிரான்ச் போலீசாரும், மேலிடத்திற்கு ரிப்போர்ட் அனுப்புறதே இல்லையாம்.

சமூக விரோதிகள் கூட கைகோர்த்து செயல்படுறதா, 'கம்ப்ளைன்ட்' கெளம்பியிருக்கு. இவுங்களை ஒட்டுமொத்தமா வேறிடத்துக்கு துாக்கியடிச்சா மட்டுமே, 'இல்லீகல் ஆக்டிவிட்டிசை' தடுக்க முடியும்னு 'பப்ளிக்' சொல்றாங்க,''

மாமூல் பார்ட்டியிடம் கைகோர்ப்பு


''சிட்டி லிமிட்டுக்குள்ளேயும், இதே நெலமை தான்னு சொல்றாங்களே...''

''மித்து... புது கமிஷனர் வந்ததும், சட்ட விரோதமா செயல்பட்ட ஸ்பாக்களை 'சீல்' வச்சாங்க. இப்போ, மறுபடியும் ஸ்பா கலாசாரம் தலைதுாக்க ஆரம்பிடுச்சு. இப்போ, போலீஸ்காரங்க நேர்மையா செயல்படுறதே, ரொம்ப அரிதாகிடுச்சுன்னு பேசிக்கிறாங்க,'' என்றபடி, ஹெல்மெட் அணிந்து கொண்டு, நகர்வலத்துக்கு புறப்பட்டாள் சித்ரா.

ஜோல்னா பை அணிந்தபடி, பின் இருக்கையில் அமர்ந்தாள் மித்ரா.






      Dinamalar
      Follow us