sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, செப்டம்பர் 07, 2025 ,ஆவணி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

வாராவாரம்

/

சித்ரா...மித்ரா (திருப்பூர்)

/

'நடிகர்' ஆக மேயர்; 'சீட்' பெற பா.ஜ., 'பிரேயர்'

/

'நடிகர்' ஆக மேயர்; 'சீட்' பெற பா.ஜ., 'பிரேயர்'

'நடிகர்' ஆக மேயர்; 'சீட்' பெற பா.ஜ., 'பிரேயர்'

'நடிகர்' ஆக மேயர்; 'சீட்' பெற பா.ஜ., 'பிரேயர்'


ADDED : ஏப் 15, 2025 05:59 AM

Google News

ADDED : ஏப் 15, 2025 05:59 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

''சித்ராக்கா... தமிழ்ப்புத்தாண்டுக்கு பூ வாங்க மாநகராட்சி பூ மார்க்கெட் போனேனா... எவ்ளோ கூட்டம்?''

வியர்வை சொட்ட வந்தாள் மித்ரா.

''ஆமா மித்து... கட்டுக்கடங்காத கூட்டம்தான். பூ மார்க்கெட்ல முறையா ஏலம் எடுத்து கடை நடத்தறவங்க இருக்காங்க. ஆனா, வளாகத்தைச் சுத்தி, பிளாட்பாரத்திலும் சிலர் கடை நடத்துறாங்க... தள்ளுவண்டிலயும் வியாபாரம் பண்றாங்க... பிளாட்பாரக்கடைக்கு ஏலதாரர் வசூல் பண்ணிடுறாராம். தள்ளுவண்டி வியாபாரிகள்ட்ட ஆளும் கட்சி பெயர்ல வசூல் நடக்குதாம்''

''அக்கா... இந்த மாதிரி வசூலையெல்லாம் மேயர்தான் கவனிக்கணும்...''

சித்திரைக்கனிக்கு வாங்கிவைத்த ஆரஞ்சு சுளையை உரித்தவாறே சொன்னாள் மித்ரா.

'நடிகர்கள் மாயமாகியிருப்பர்'


''மித்து... மேயர் சிறந்த நடிகர்னு திருப்பூர் தமிழ்ச்சங்கம் சார்புல நடந்த 'குறளிசை' விழாவுல சங்கத்தலைவர் முருகநாதன் புகழ்ந்தாராம்.

''பல கோணங்களில் பல விஷயங்களை அணுகறப்ப தன்னை மாத்திக்கிட்டு பிரச்னைகளை எளிதில் கையாள்ற திறமை படைச்சவர். சினிமால நடிக்கப் போயிருந்தார்னா, பல நடிகர்கள் காணாமப் போயிருப்பாங்கன்னாராம்''

மித்ரா சிரித்தாள்.

''அக்கா... காலேஜ் ரோட்ல குடிநீர் வீணா போகுதாம். அதைக் கண்டுக்குவாரா மேயர்ன்னுதான் தெரியல. அந்தப்பகுதில ஆக்கிரமிப்பு பகுதிகளா இருக்கற இடங்கள்ல மாநகராட்சி சார்புல குடிநீர் இணைப்பு கொடுத்திருக்காங்களாம். வீடுகள் எல்லாம் சின்னதுதானாம். குடிநீர் சேமிச்சு வைக்கிற அளவு பெரிய தொட்டிகள் வச்சிருக்கறதில்லை... குடிநீர் சப்ளையாகிற நேரம் டிரம், பாத்திரத்துல பிடிச்சு வைக்கிறாங்களாம். மீதி குடிநீர் அத்தனையும், ரோட்லயும், வடிகால்லயும் தான் வீணா போகுதாம்''

''மித்து... கருவலுார் கோவில் தேரோட்டத்துல சன்னைக்கட்டை விழுந்து ஒருத்தர் இறந்துட்டாரு. தேரோட்டத்தின்போது இதுவரை இல்லாத வகையில் மழை பெய்ஞ்சுதாம். கோவில் வளாகம், சுற்றுப்புறத்தில் உரிய பராமரிப்போ, சுகாதாரமோ இல்லையாம். கோவில் நிர்வாகத்திலயும் குளறுபடி; அதிகார மோதல்னு இருக்கறதால பக்தர்கள் வேதனைப்படறாங்க மித்து...''

'சர்ச்சை' பெண் ஏட்டு


''சித்ராக்கா... காளைக்குப் பேர் போன ஊர்ல மகளிர் ஸ்டேஷன்ல, கோவில்ல திருமணத்தை முடிச்சுட்டு, ஒரு காதல் ஜோடி தஞ்ச மடைஞ்சாங்களாம்.

தகவலறிஞ்சு, இவங்களோட பெற்றோர் ஸ்டேஷனுக்கு வந்தாங்களாம். அப்ப பெண் வீட்டார் ஆதங்கத்தில் பேசினாங்களாம்.

''ஒரு பெண் போலீஸ் ஏட்டு, அவங்கள ஒருமையில பேசுனதோட, வளர்ப்பு குறித்தும் தப்பா பேசிட்டாங்களாம்.

''ஏட்டம்மாவுக்கும், அவங்களுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டிருச்சாம். மத்த போலீஸ்காரங்க சமாதானப் படுத்தியிருக்காங்க.

''ஏட்டம்மா அடிக்கடி சர்ச்சைல சிக்கிறவரு தானாம். ஸ்டேஷன் அதிகாரியோட ஆதரவுல 'அதிகாரப் புள்ளி'யாக இருக்காராம்.

''அவரை 'டிரான்ஸ்பர்' பண்ண எஸ்.பி., முடிவு பண்ணியிருக்கிறதா போலீஸ் வட்டாரத்துல பேசிக்கிறாங்க.

''சமீபத்தில டி.ஐ.ஜி., வந்தப்ப, இந்த விஷயத்தைக் கேள்விப்பட்டுத்தான், பொதுமக்கள்ட்ட, போலீசார் நாகரிகமாக நடந்துக்கணும்ன்னு அட்வைஸ் கொடுத்திருக்காரு''

விவரித்தாள் மித்ரா.

''மித்து... சிட்டி போலீஸ்ல வாகனத்தணிக்கையில ஈடுபடுற போலீசார் சிலர் வாகன ஓட்டிகள் முகம் சுளிக்கிற மாதிரிப் பேசறாங்களாம். 'வாயா... போயா'ன்னு அழைக்கிறது; ஒருமைல பேசுறது... 'என்ன தள்ளாடுறீங்க...', 'போதை தலைக்கேறிடுச்சா' இப்படியெல்லாம் கேக்குறாங்களாம்...

''சிட்டில போலீஸ் பற்றாக்குறை இருக்குது... இதுல, வாகன தணிக்கை பண்றப்ப தினமும் 'டார்கெட்' வச்சு 'பைன்' போடச் சொல்றாங்க... 'டார்கெட்' தொடறதுக்குள்ள திக்குமுக்காடிப் போகுதாம். இந்த டென்சனும் போலீஸ் நடந்துக்குற முறைக்கு காரணமாக இருக்குமோ!''

''இருக்கலாம்... இருக்கலாம்''

தலையசைத்தாள் மித்ரா.

''சித்ராக்கா... சில நாள் முன்னாடி, மூனு ஆண்டை கடந்த போலீசாரை இடம்மாற்றம் செய்ய கமிஷனர் பட்டியல் தயார் செய்ய சொல்லியிருக்காரு. இதுல எந்தத்தப்பும் நடக்கக்கூடாதுன்னு ஸ்டிரிக்டா உத்தரவு போட்ருக்காரு... ஆனா, சில பேரு, விருப்பப்பட்ட ஸ்டேஷனை தக்க வைக்கிறதுக்காகவும், 'டூயிங் டியூட்டி'ங்கிற பேர்ல மீண்டும் பழைய ஸ்டேஷனை தக்க வைக்கவும் பிளான் பண்ணியிருக்காங்களாம். கமிஷனர்தான் உஷாரா இருக்கணும்''

பெட்டிக்கடையில் 'போதை' விற்பனை


''மித்து... கொங்கு மெயின் ரோட்டுல இருக்கிற மாநகராட்சி பள்ளி அருகே ஒரு பெட்டிக்கடைல கஞ்சா சாக்லேட், போதை பாக்கெட் விற்பனை நடக்குது. கடந்த வாரம், பள்ளி மாணவர்கள் சிலர் சத்தமில்லாமல் வாங்கி பாக்கெட்ல வச்சதைப் பார்த்த சிலர், கையும், களவுமா பிடிக்க முயற்சி செஞ்சிருக்காங்க... அதற்குள் மாணவர்கள் ஓடிவிட, கடைக்காரரும் சுதாரிப்பாயிட்டாராம்.

''எம்.எஸ்., நகர், கொடிக்கம்பம், கொங்கு மெயின் ரோட்டில் இப்படி நடப்பது தெரிந்தும் போலீஸ் கண்டுக்கிறதில்லையாம். காரணம், மாமூல்தானாம்''

''சித்ராக்கா... அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் நோயாளியா 'அட்மிட்' ஆகியிருக்கிற சிலர் வார்டை விட்டு வெளியே வந்து, பீடி, சிகரெட் அடிச்சுட்டு, மது அருந்திட்டு மீண்டும் வார்டுக்குள் வந்துடுறாங்களாம். நோயாளி அருகில் டாக்டர் செல்லும் போது 'குப்'ன்னு வாசம் வருதாம். இப்படிப்பட்டவங்களை தயவு தாட்சண்யம் பாக்காம வெளியே அனுப்பிடணும்னு டாக்டர்கள் ஆதங்கப்படறாங்களாம்''

-''மித்து... மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில், இணைப்பு சக்கரம் பொருத்திய ஸ்கூட்டருக்கு பயனாளிகள் தேர்வு செய்றதில குளறுபடின்னு 'தினமலர்'ல செய்தி படிச்சேல்ல... இதுக்கெல்லாம் காரணம், செயல் திறன் உதவியாளர் ஒருத்தர்தானாம். 12 வருஷமா இதே ஆபீஸ்ல 'குப்பை' கொட்டறாராம். அவரை மாத்துனாலே, அலுவலகம் முறையா செயல்படும்னு சொல்றாங்க''

ரேஷன் ஊழியர் பலிகடா?


''சித்ராக்கா, ரேஷன் கடைல காலாவதிப்பொருள் வச்சிருந்ததா ஊழியரை 'டிஸ்மிஸ்' பண்ணீட்டாங்க... வருவாய், கூட்டுறவு, நுகர்பொருள் வாணிபக்கழகம்னு மூனு துறை அதிகாரிகள் ஆய்வு நடத்தியும் எப்படி தப்பு நடந்துச்சு... ஊழியரை பலிகடாவாக்கிட்டாங்கன்னு 'பேச்சு' ஓடிட்டு இருக்கு''

''மித்து... அரசு விழா, ஆய்வுக்கூட்டம், பேச்சுவார்த்தை என அரசு விவகாரத்தில, ஆளும் கட்சியோட 'தங்க'மான வடக்கு மாநகர நிர்வாகி தலையிடறாராம். கலெக்டர் ஆபீஸ் உள்பட அரசு நிகழ்ச்சிகள்ல மேடையை இவர் எப்படி ஆக்கிரமிக்கிறார்ங்கறதுக்கு வருவாய்த்துறை அதிகாரிகள்தான் பதில் கூறணும்''

''அக்கா... திருப்பூர் சடையப்பன் கோவில்ல, ஞாயித்துக்கிழமை, குழந்தைகளுக்கு மந்திரிச்சு சிறகடிக்கும் நிகழ்ச்சி நடக்கும். போன சண்டே, யூனியன் மில் ரோட்டில் பொதுக்கூட்டம்னு, போலீஸ்காரங்க, எல்லா ரோட்டையும் அடைச்சுட்டாங்க. சிட்டியையே ஒரு ரவுண்ட் அடிச்சுட்டுத்தான் கோவிலுக்கு போக வேண்டிய நிலை வந்திடுச்சுன்னு பக்தர்கள் புலம்பித்தள்ளிட்டாங்க''

''மித்து... அ.தி.மு.க., கூட்டணி உறுதியாயிட்டதால, திருப்பூர் தெற்கு தொகுதியை பா.ஜ., இப்பவே குறி வச்சிருக்காங்களாம்; இதுக்காக இப்பவே பிரார்த்தனையைத் துவக்கிட்டாங்களாம்''

''சித்ராக்கா... இனி அரசியல் அமர்க்களமா இருக்கும்ன்னு சொல்லுங்க...''

'கேங்ஸ்டர்' வாலிபர்


''மித்து... அவிநாசில ஒரு வாலிபர் 'கேங்ஸ்டர்' ஆகிட்டாராம். போலீஸ் மீதான கொலை முயற்சி உள்பட ஏராளமான வழக்கு இருக்குதாம். பெற்றோர் அரசுப்பணில இருக்கறதுனால செல்வாக்குல வெளில வந்துடறாராம். சமீபத்துல நண்பர்களுக்குள் நடந்த தகராறுல இவரை 'உள்ளே' தள்ளிட்டாங்க... குண்டாஸ் போட்டு ஜெயில்ல இருந்து வெளில வராம பாத்துக்கணும்ன்னு மக்கள் விரும்பறாங்களாம்... நடக்குதான்னு பார்ப்போம்''

''அக்கா... திருமுருகன்பூண்டி கிளை நுாலகத்துக்கு 22 லட்சம் ரூபா செலவுல இணைப்புக்கட்டடம் கட்டிக் கொடுத்திருக்காங்க. இதனோட திறப்பு விழாவில ஆளும்கட்சிக்காரங்க நின்னு 'போஸ்' கொடுத்தாங்க... ஏற்கனவே பயன்பாட்டுல இருக்கிற கட்டடத்தை ரேஷன் கடையாக்கிடலாம்ன்னு ஒரு தரப்பு பிளான் பண்ணுதாம்...

''மித்து... விசாலமா படிக்கிறதுக்காகத்தான் இணைப்புக்கட்டடமே கட்டியிருக்காங்கங்கற விவரம் கூடவா அவங்களுக்குத் தெரியல''

வெயில் கொளுத்தத் துவங்கியது. மித்ரா குடிப்பதற்காக, 'ஜில்' என மோர் கொண்டுவந்தாள் சித்ரா.






      Dinamalar
      Follow us