கவுன்சிலர்கள் 'ரீல்ஸ்' மோகம் ஆசிரியர்கள் எதிர்ப்பு வேகம்
கவுன்சிலர்கள் 'ரீல்ஸ்' மோகம் ஆசிரியர்கள் எதிர்ப்பு வேகம்
UPDATED : அக் 26, 2026 05:05 PM
ADDED : அக் 26, 2026 05:02 PM

தெருக்குழாயில் தண்ணீர் வரவில்லை எனப் புகார் கொடுக்க, தெருவாசிகளுடன் கலெக்டர் அலுவலகத்துக்கு வந்திருந்தனர் சித்ராவும், மித்ராவும்.
''மித்து... இங்க வந்த பிறகுதான் தெரியுது... கலெக்டர் ஆபீஸ்ல ஒரு சொட்டு குடிநீர் கூட இல்லையாம். சுத்திகரிப்புக் கருவிகள் ரிப்பேராம். வாராவாரம் குறைதீர்க்கூட்டத்துக்கு ஆயிரம் பேர் வர்றாங்க. தாகத்தோடதான் திரும்பிப் போகணும் போல.''
''ஆமாக்கா... எப்படியோ இழுபறிக்குப் பிறகு அணைப்பாளையம் பாலத்தைத் திறந்துட்டாங்க. ஆனா, ரவுண்டானா வேலை இன்னும் முடியல. எம்.எல்.ஏ., சத்யபாமா ஹெல்மெட் போட்டுட்டு டூவீலர்ல போனதைப் பார்த்தீங்களாக்கா?''
''பார்த்தேன் மித்து... விழா அமர்க்களமா நடந்துச்சு. ஆனா, விழாவுக்கு வந்த போலீஸ்காரர், பத்திரிகையாளர்னு ரெண்டு பேரோட ஹெல்மெட் காணாமப் போயிருச்சாம்.''
''ஒரு நல்ல செய்திக்கா... மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்துக்கு வந்திருக்கிற புதிய மாவட்டப் பொறியாளர் ஸ்ட்ரெய்ட் பார்வேர்டாம். லைசன்ஸ், புதுப்பித்தல் எல்லாம் ஆன்லைன்ல வந்துட்டதால இடைத்தரகர்களுக்கு இனி வேலையில்லையாம்.''
''எல்லாம் சரியா இருந்தாதான் அனுமதி கிடைக்கும்னு சொல்றாங்களாம். நம்ம ஊருக்கு இது புதுசுதான் மித்து.''
விசாரிக்கப்படாத புகார்
''சித்ராக்கா... சிட்டி போலீஸ்ல எட்டு இன்ஸ்பெக்டர்கள் டிரான்ஸ்பர் ஆகியிருக்காங்க. சிலர் எதிர்பார்த்த இடத்தைப் பிடிச்சு சந்தோஷமா இருக்காங்களாம். ஆனா, அவங்க மேல வந்த புகார்கள் விசாரிக்கப்பட்டதான்னு தெரியல.''
''மாவட்டத்துல சில்லிங் விற்பனை புகார் வந்தா உடனே நடவடிக்கை பாயுதாம். 'கோவில்' பெயர் கொண்ட பகுதில சில்லிங் விற்பனை அதிகம்னு புகார் வந்ததும், தாராபுரம் மதுவிலக்கு ஏ.டி.எஸ்.பி., சம்பந்தப்பட்ட எஸ்.ஐ.யைக் கடுமையா எச்சரிச்சாராம்.''
''அக்கா... 'துரை'யா இருந்தாலும் தப்ப முடியாது. பள்ளிகள்ல தேர்ச்சி சதவீதத்தை உயர்த்த, குறைந்த மதிப்பெண் எடுத்த மாணவர்கள் விவரங்களோட ஆசிரியர்கள் பகுப்பாய்வுக் கூட்டத்துக்கு வரணும்னு சி.இ.ஓ., உத்தரவிட்டிருந்தாரு. ஆசிரியர் சங்கங்கள் வேகமா எதிர்த்ததும், அது ஆலோசனைக் கூட்டமா மாறிடுச்சாம். விடைத்தாள் வேண்டாம், மதிப்பெண் பட்டியல் மட்டும் போதும்னு சொல்லிட்டாங்களாம்.''
''அப்புறம் வல்லுனர்கள் வந்தாங்களா மித்து?''
''அதெல்லாம் இல்லக்கா... அரையாண்டுத் தேர்வுல நல்ல மார்க் வாங்க வைக்கச் சொல்லி அறிவுரை மட்டும் சொல்லி அனுப்பிட்டாங்களாம்.''
மாணவர் மனசு
''மித்து... நஞ்சப்பா ஸ்கூல் தலைமையாசிரியரை மாத்திட்டாங்களாம். இவரை தாக்குனதா சஸ்பெண்ட் ஆன மாணவர்களையும் திரும்பச் சேர்த்துட்டாங்களாம்.
''ஈட்டி ஊருக்கு சமீபத்துல ஒரு தலைமையாசிரியையை மாத்துனாங்க... மாணவர் மனசுப் பெட்டில, மாணவியர் சிலர், 'சாப்பிட்ட தட்டுகளைக் கழுவச் சொல்றார். குறிப்பிட்ட சிலரை மட்டும் அழைத்து ஒருமைல பேசுறார்'னு புகார் எழுதிப்போட்ருக்காங்களாம். மாவட்ட தொடக்கக்கல்வித் துறை விசாரிக்க தயாராகுதாம்''
''லதா வரட்டும். மேல் விவரம் கேட்டுச்சொல்றேன்க்கா... ரயில்வே ஸ்டேஷன்ல கோட்ட மேலாளர் ஆய்வுக்கு வந்தப்போ, பயணிகள்ட்ட கருத்துக் கேட்கணும்னு விரும்பினாராம். ஆனா, கூட்டிட்டு வந்த பயணிகள் ரயில் நேரமாச்சுன்னு கிளம்பிட்டாங்களாம். அதிகாரிகளை ஒரு பார்வை பார்த்துட்டு ஆய்வை முடிச்சாராம்.''
''மித்து... கருவலுார் பகுதியில் ஒதுக்குப்புறத்துல நடந்த சேவல் சண்டை, இப்போ வீட்டு வாசலுக்கே வந்துடுச்சாம். ஐயாயிரம் ரூபாயில தொடங்கி ஒரு லட்சம் ரூபாய் வரை பந்தயம் கட்டுறாங்களாம்.''
ஏழாம் பொருத்தம்
''அக்கா... திருமுருகன்பூண்டி நகராட்சியில தலைவர், துணைத்தலைவர், கவுன்சிலர்கள் ஒரு நாளும், அதிகாரிகள் இன்னொரு நாளும்னு சரஸ்வதி பூஜை கொண்டாடியிருக்காங்க. காரணம் கேட்டா, இரு தரப்புக்கும் ஏழாம் பொருத்தமாம்.''
''அதுமட்டுமில்ல மித்து... சில கவுன்சிலர்கள் த.வெ.க.வுக்கு மாறினதுக்குப் பிறகு, கவுன்சிலர்கள் ஒரு சிலரைத் தவிர எல்லாரும் ரீல்ஸ் மோகத்துல இருக்காங்களாம். சின்ன நிகழ்ச்சியைக்கூட விடாம படம் எடுத்து சோஷியல் மீடியால பதிவிடுறாங்களாம்.''
''பூண்டி நகராட்சிப் பள்ளிகள்ல 12 துாய்மைப் பணியாளர்கள் இருக்காங்களாம். அவங்களோட இ.எஸ்.ஐ., பி.எப். பணம் பிடித்தம் செய்யப்படுது. ஆனா, வங்கிக் கணக்கே இல்லையாம். கவுன்சிலர் கேட்டதுக்கு, பணத்தைத் தனியா எடுத்து வச்சிருக்கோம்னு பதில் சொன்னாங்களாம். இது எப்படி இருக்கு அக்கா?''
''மித்து... பல்லடம் பதிவாளர் அலுவலகத்துல இருக்கிற ஒரு பெண் ஊழியரை 'கவனிச்சா' மட்டும்தான் வேலை நடக்குதாம். ஆறு வருஷத்துக்கு மேலாகியும் அவர் இடமாற்றம் ஆகாததற்கு அதிகாரிகளின் ஆதரவுதான் காரணம்னு பேசிக்கிறாங்களாம்.''
''சரிக்கா... பேசிட்டோம். விமலாவைப் பார்க்கப் போலாமா?''
சித்ரா தலையசைக்க, இருவரும் கலெக்டர் அலுவலகத்திலிருந்து புறப்பட்டனர்.
''ஒரு நல்ல செய்திக்கா... மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்துக்கு வந்திருக்கிற புதிய மாவட்டப் பொறியாளர் ஸ்ட்ரெய்ட் பார்வேர்டாம்''
''எல்லாம் சரியா இருந்தாதான் அனுமதி கிடைக்கும்னு சொல்றாங்களாம். நம்ம ஊருக்கு இது புதுசுதான் மித்து''
