தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/சித்ரா...மித்ரா (திருப்பூர்)/'டாடி'யின் அலப்பறை தாங்க முடியல...

'டாடி'யின் அலப்பறை தாங்க முடியல...

'டாடி'யின் அலப்பறை தாங்க முடியல...


ADDED : செப் 08, 2026 07:12 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 08, 2026 07:12 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

''அ ப்பப்பா. என்னே ஒரு டிராபிக் ஜாம். ஒருபக்கம் ரோடு வேலை நடக்குது, அப்பப்போ விரிவாக்கப் பணியும் செய்றாங்க. ஆனா, டிராபிக் நெருக்கடி மட்டும் குறைஞ்சபாடில்லை,'' சலித்தபடியே சித்ராவின் வீட்டுக்குள் நுழைந்தாள் மித்ரா.

''இத்தனைக்கும், ஹைவேஸ்காரங்க ஆக்கிரமிப்பையெல்லாம் அகற்றிட்டுதான் இருக்காங்க. ஆனா, அவங்க ஆபீஸ் காம்பவுண்ட் சுவரை ஒட்டியே ஒருத்தரு ஓட்டல் கடை நடத்திட்டு இருக்காரு. அத ஏன் கண்டுக்க மாட்டேங்கறாங்கன்னு மக்கள் பேசிக்கிறாங்க,'' என்றாள் மித்ரா.

''டிராபிக்ன்னு சொல்லவும் தான் ஒரு மேட்டர் ஞாபகம் வருது மித்து,'' என்ற சித்ரா,''டாஸ்மாக் நிறுவனத்துல வேல பார்க்குற ஒருத்தரு டிராபிக் வார்டன் பிரிவோட 'துணை தளபதி', 'அணிவகுப்பு அலுவலர்'னு ரெண்டு முக்கிய பொறுப்பையும் கையில் வச்சுக்கிட்டு ஆதிக்கம் செலுத்துறாராம். இதனால, தகுதியான மத்தவங்களுக்கு வாய்ப்பு மறுக்கப்படுதுன்னு டிபார்ட்மென்ட் ஆட்களே புலம்பறாங்க...''''அதுமட்டுமில்லாம, எஸ்.ஐ. அல்லது இன்ஸ்பெக்டர் ரேங்க்ல இருக்கற ஆபீசர்ஸ் தான் வாகன சோதனை நடத்துவாங்க. ஆனா, அதிகாரி இல்லாம, இரண்டாம் நிலை போலீஸ்காரர் சிலர், முட்டுச்சந்து, குறுக்கு வீதின்னு ஆபத்தான இடங்கள்ல திடீர்னு வண்டிய நிறுத்த சொல்றதால, பின்னாடி வர்ற வண்டிங்க மோதி விபத்து நடக்குற அபாயமும் இருக்கு...'' என்றாள்.

சம்பிரதாய கூட்டம் ''கலெக்டர் ஆபீஸ்,ஆர்.டி.ஓ., ஆபீஸ்ல நடக்குற விவசாயிகள் குறைகேட்பு கூட்டத்துல, 'சங்கம்'னு சொல்லிக்கிட்டு வர்றவங்க மட்டும் தான் கூட்டத்தை ஆக்கிரமிச்சு பேசுறாங்களே தவிர, சாதாரண விவசாயிகளுக்கு பேச வாய்ப்பே தர்றதில்லைனு போன வருஷமே சலசலப்பு வந்துச்சுல்ல. அப்பவே, முறையா பதிவு செஞ்ச சங்கங்கள் மட்டும் தான் பேசணும்னு சுற்றறிக்கை விட்டாங்க. ஆனா, பெரும்பாலான சங்கங்கள் கணக்கு வழக்கைக்கூட ஒழுங்கா தாக்கல் செய்யாம, பதிவு செய்யாம உள்ளது தெரிஞ்சும், கண்டுக்காம விட்டுட்டாங்க...''''இப்போ, இது திரும்பவும் விஸ்வரூபம் எடுத்ததும், 'முறையா பதிவு செய்யப்பட்டு இயங்குற சங்கங்களுக்கு மட்டும்தான் கூட்டத்துக்கு அழைப்பு அனுப்பப்படும்; மத்தவங்க தனிப்பட்ட விவசாயியா வேணும்னா வந்து பேசலாம்; அதனால முறையா பதிவு பண்ணிக்கணும்'ன்னு ஆபீசர்ஸ் கறாரா சொல்லிட்டாங்களாம்.

''இதுல பெரிய கூத்து என்னன்னா. ஒரு சமூக ஆர்வலர் ஆர்.டி.ஐ.ல் விவரம் கேட்டப்பத்தான், மாவட்டம் முழுக்கவே, 4 சங்கங்கள் தான் முறையா பதிவு செய்யப்பட்டு இயங்குதாம்...'' சொல்லிய சித்ரா சிரித்தாள்.

''அங்க அந்த மாதிரின்னா, தபால் துறை குறைகேட்பு கூட்டம் வேற மாதிரி. கூட்டம் நடக்குறதுக்கு, 10 நாளைக்கு முன்னாடியே அறிவிப்பு வெளியிட்டு, புகார்களை முன்கூட்டியே வாங்கி, கூட்டம் நடக்கற நாளில் டிஸ்கஸ் பண்ணுவாங்களாம். ஆனா, புகார் சம்பந்தமா முன்கூட்டியே பேசி முடிச்சிட்டு, கூட்டத்தை வெறும் சம்பிரதாயமா கணக்குக்காக நடத்தி முடிச்சுடறாங்களாம்...'' என்றாள் மித்ரா.

ஆபீசா... லாட்ஜா? அடுத்து, பத்திரப்பதிவு துறை சம்மந்தமான மேட்டருக்கு தாவிய சித்ரா, ''லிங்கேஸ்வரர் ஊர் தாலுகாவுல, 'சர்வே டிபார்ட்மென்ட்'ல இருக்கற பெரிய ஆபீசர் ஒருத்தரு, வி.ஏ.ஓ.,க்களை மதிக்கிறதே இல்லையாம். 25 வருஷத்துக்கு முன்னாடி கொடுத்த பட்டாவுக்கு இன்னமும் நிலத்தை அளந்து கொடுக்காம இழுத்தடிக்குறாங்களாம். நிலத்தை சரியா சப்--டிவிஷன் பண்ணி கொடுத்தாத்தானே அத ஆன்லைன்ல அப்லோடு பண்ண முடியும்?'' என கோபப்பட்டாள்.

''சரிதான் சித்ராக்கா. மூலனுார் பத்திரப்பதிவு ஆபீஸ்க்கு தினமும் 'டுபாக்கூர்' ரிப்போர்ட்டர்ஸ் படையெடுத்து வந்து பணம் கேட்டு மிரட்டுறாங்களாம். குறிப்பா அங்க இருக்குற லேடி ஆபீசரை ரொம்பவே தொல்லைப்படுத்துறாங்களாம். எங்களுக்கு 'கப்பம்' கட்டலைன்னா, 'டிரான்ஸ்பர் ஆர்டர்' வாங்கி கொடுத்துடுவோம்ன்னு சொல்றாங்களாம். இவங்களை கேக்க ஆளே இல்லையா?ன்னு, ஆபீசர்ஸ் புலம்பறாங்கன்னா பாரேன்,'' என்றாள் சித்ரா.

''அதேபோல, பகல்ல மக்களுக்காக செயல்படற பல்லடம் தாலுகா ஆபீசில, நைட் டைம்ல சமூக விரோத செயல் நடக்குதாம். இது கவர்மென்ட் ஆபீஸா, இல்ல லாட்ஜ் மாதிரியான்னு மக்கள் கேக்கற அளவுக்கு விஷயம் வெளிய தெரியாம நடக்குதாம்,'' ஆவேசமாக சொன்னாள் மித்ரா.

ஆளுங்கட்சி 'அலப்பறை' ''ஆட்சி மாறியும் காட்சி மாறல...,'' சலித்துக் கொண்ட சித்ரா, ''ஆனந்தமான 'மாஜி' மினிஸ்டர் 'விசில்' கட்சி பக்கம் போய்ட்டாரு. அவருக்கு நிறைய ஆதரவாளருங்க இருக்காங்க. அவங்களையெல்லாம் விசில் கட்சியில சேர்த்து, தடபுடலா இணைப்பு விழா நடத்த 'பிளான்' பண்றாராம். ஆனா இலை கட்சியில, புதுசா பொறுப்புக்கு வந்திருக்கற நிர்வாகி, 'மாஜி'யோட ஆதரவாளர்களுக்கே பார்த்து பார்த்து கட்சிப் பொறுப்புகளை வாங்கி கொடுத்துட்டு இருக்காராம்,'' என்றாள்.

''பல்லடத்துல விசில் கட்சியோட மாவட்ட நிர்வாகி பேரம் பேசின ஆடியோ பரவிட்டு இருக்குல்ல. பேசினத மறைக்க சம்மந்தப்பட்ட நிர்வாகிய வரவச்சு மிரட்டி இருக்காராம் மாவட்ட நிர்வாகி. இதனால, மத்த நிர்வாகிகளுக்கு ரொம்ப 'சங்க'டமாம். அவரால, பாதிக்கப்பட்டவங்க, தலைமைக்கு புகார் அனுப்பிட்டே இருந்தாலும், மாவட்டத்தோட பொறுப்பு மினிஸ்டரும், கட்சி தலைமையும் துளிக்கூட கண்டுக்கலையாம்,'' என்றாள் மித்ரா.

''இதேபோல, அவிநாசியில, ஆளுங்கட்சி நிர்வாகியோட ஆட்டம் தாங்கலையாம்...'' என்ற சித்ரா, தண்ணீர் குடித்து விட்டு தொடர்ந்தாள்.

''மாவட்ட பொறுப்பிலுள்ள 'கவர்மென்ட்' பேர் கொண்ட 'திரு'வாளர் ஒருத்தர், ஆரம்ப காலத்தில் இருந்து வந்த விஜய் ரசிகர் மன்ற ஆட்களை ஓரம்கட்டுறதிலயே குறியா இருக்காராம். அதே ஆசாமி, தொகுதி வி.ஐ.பி.யோட 'டாடி'யை கைக்குள் போட்டுட்டு, மத்த பொறுப்பாளர்களை பத்தி இல்லாததும் பொல்லாததுமாக சொல்லிட்டு, வசூல் வேட்டையில தீவிரம் காட்டுறார் என்று தலைமைக்கு புகார் பறந்துட்டு இருக்கு. ஏற்கனவே, எந்த நிகழ்ச்சி நடத்தினாலும், 'டாடி'க்கு கமிஷன் அள்ளி கொடுக்குற ஏஜென்டா மாறிட்டாருன்னு அவங்க கட்சி ஆட்களே ஓபனா பேசறாங்க..''

இ.பி. கொடுத்த 'ஷாக்' ''அதே ஊருக்கு பக்கத்துல, புதுப்பாளையம் வில்லேஜில உள்ள மிடில் ஸ்கூல்ல அங்குள்ள கட்சி நிர்வாகி ஒருத்தர், தினமும் காலையில டிபன், மதியம் லஞ்ச்னு வாங்கி சாப்பிடறாராம். இது கூட பரவாயில்ல. ஸ்கூல் சத்துணவு அமைப்பாளர்கிட்ட, 'டெய்லி ரெண்டு முட்டை எனக்கு எடுத்து வச்சு கொடுக்கோணும்னு' மிரட்றாராம்,'' என சித்ரா சொல்லி முடிக்கவும், ஒலித்த மொபைல் போனை ஆன் செய்து, ''நாச்சிமுத்து, செந்தில் ரெண்டு பேரும் பெரிய கோவில் வரைக்கும் போயிருக்காங்க,'' என பதில் கூறி 'கட்' செய்தாள் சித்ரா.

''ஆளுங்கட்சி விவகாரங்களை பார்த்தால், திராவிட கட்சிகளை துாக்கி சாப்பிடுவாங்க போலயே...'' சிரித்த மித்ரா, ''அமர்ஜோதி கார்டன் ஏரியாவுல, ஒரு வீட்டுக்கு, இந்த மாசம் திடீர்னு, இ.பி.பில் 26 ஆயிரம்னு வந்து 'ஷாக்' கொடுத்திருக்கு. வீட்டு உரிமையாளர், ரீடிங் எடுத்தவர்கிட்ட கேட்டப்போ, 'ரீடிங்' எடுக்குறப்ப குளறுபடி ஆயிடுச்சு. நீங்க முழு தொகையையும் கட்டிடுங்க,''

''நாங்க வேணும்னா,10 ஆயிரம் தர்றோம்'னு பேசியிருக்காராம். 'ஸ்கேனர்' வச்சு ரீடிங் எடுக்காம, 'மேனுவலா' எடுத்ததே இந்த குழப்பத்துக்கும் காரணமாம். பாதிக்கப்பட்டவர், பெரிய ஆபீசர்கிட்டேயே கம்ப்ளைன்ட் கொடுத்துட்டாராம்,'' என்று கூறி, ''அக்கா, கெளம்பறேன். வெயில் ஜாஸ்தியா இருக்கு,'' புறப்பட்டாள் மித்ரா.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us