sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/வாராவாரம்/சித்ரா...மித்ரா (திருப்பூர்)/ மேயர் 'ரேஸ்'; விஜய் 'சஸ்பென்ஸ்'

 மேயர் 'ரேஸ்'; விஜய் 'சஸ்பென்ஸ்'

 மேயர் 'ரேஸ்'; விஜய் 'சஸ்பென்ஸ்'


ADDED : ஜூன் 02, 2026 06:13 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 02, 2026 06:13 AM


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

''தேர்தல் முடிஞ்சு புது அரசு அமைஞ்சும், நம்ம மாவட்டத்துல அரசியல் கணக்கு இன்னும் யாருக்கும் பிடிபடலையே மித்து...''

ஆதங்கத்தை வெளிப்படுத்தியபடி மித்ரா வீட்டுக்கு வந்தாள் சித்ரா.

''ஆமாக்கா... துறை வாரியா கவர்மென்ட்டோட அடுத்த மூவ் என்னவோன்னு அதிகாரிங்க அல்லாடுறாங்க''

''அதை விடு மித்து... தாராபுரம் அ.தி.மு.க. எம்.எல்.ஏ. சத்தியபாமா ரிசைன் பண்ணி த.வெ.க.ல சேர்ந்த விவகாரத்துல 'குதிரை பேரம்' சர்ச்சை கலகலக்குது. இடைத்தேர்தல்ல த.வெ.க. சீட் அவங்களுக்குத் தானான்ற பஞ்சாயத்து ஓடுது. அ.தி.மு.க. காரங்க கடுப்புல இருக்காங்க...

''தி.மு.க. மாஜி எம்.எல்.ஏ. செல்வராஜூக்கு பல்லடத்துல 'சீட்' கொடுத்தாங்க. அவரால ஜெயிக்க முடியல. மாவட்ட செயலாளர் பதவி போயிடும்னு நினைச்சாரோ என்னவோ, தி.மு.க.வை விட்டு விலகுறேன்னு சொன்னாரு.

''உடனே மேலிடம் அவரைக் கூப்பிட்டு சமாதானப்படுத்த அடுத்த நாளே பல்டி அடிச்சாரு. இப்ப மகனோட போய் ஸ்டாலின், உதயநிதியைச் சந்திச்சு பதவியைத் தக்க வச்சதுதான் இப்ப ஹாட் டாக்.

த.வெ.க.வினர் புலம்பல் ''அவிநாசி எம்.எல்.ஏ. கமலி அமைச்சராகிட்டாங்க... பதவி ஏத்து போன வாரம் அவிநாசிக்கு வந்தப்போ ஒரு பெரிய கூத்து நடந்திருக்கு மித்து.

''அவங்க கூட மேற்கு மாவட்ட செயலாளர் சங்கர், பல்லடம் எம்.எல்.ஏ. ராம்குமார்னு வந்திருந்தாங்க. ஆனா, அவிநாசி நகர, ஒன்றிய நிர்வாகிகள் யாரும் அதிகமா எட்டிப் பார்க்கலையாம். விசாரிச்சா, செயலாளர் இவங்க கூட இணக்கமா இருக்குறதே இல்லையாம். உள்ளூர் நிர்வாகிகள் அமைச்சரை கைக்குள்ள போட்டுப்பாங்கன்னு பயந்து, அவங்களுக்கு முக்கியத்துவம் தராம மாவட்ட செயலாளரே ஓரம் கட்டுறாராம்!

''அமைச்சரை சுத்தியும் அவரோட சொந்தக்காரங்களும் சில நிர்வாகிகளும் மட்டுமே அரணா நின்னுக்கிட்டு, மகளிர் அணியினரை பக்கத்துல கூட அண்ட விடலையாம். தனித்து விடப்பட்ட மகளிர் அணி யினர், கோவில் வாசல்லயே பத்திரிகையாளர்கள்கிட்ட, 'எங்களுக்கு எந்தத் தகவலும் தர்றதில்ல... அமைச்சர்கிட்ட பேசவும் விடுறதில்ல'ன்னு புலம்பித் தீர்த்துட்டாங்க மித்து!

''கருணாநிதி பிறந்த நாளுக்கு வேலம்பாளையத்துல வடக்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் தினேஷ்குமார் பொதுமக்களுக்கு பிரியாணி வழங்குனாரு... வடக்கு மாநகர பொறுப்பாளர் தங்கராஜும் பல்வேறு வார்டு பொறுப்பாளர்களும் புறக்கணிச்சிட்டாங்களாம்.

கவுன்சிலர்கள் கடுப்பு ''கார்ப்பரேஷன் வார்டுகள்ல ஒருங்கிணைப்பாளர்களா அதிகாரிகள் நியமிக்கப்பட்டிருக்காங்க... இதனால கவுன்சிலர்கள் கடுப்பாகறாங்களாம்.

''வார்டுல இருக்கிற த.வெ.க. நிர்வாகிகள் பிரச்னைகளைச் சரிசெய்ய கோரி, டைரக்டா கமிஷனர், இன்ஜினியருக்கு போன் போடுறதால, 'இவங்க இப்ப எங்கிருந்து முளைச்சாங்க?'ன்னு ஆபீசர்ஸ் கடுப்பாகுறாங்க.

''அ.தி.மு.க. மாஜி அமைச்சரான 'ஆனந்த'மானவரு மேயர் கனவோட த.வெ.க.வுக்கு தாவப் பார்த்தா, 'விஜய் தான் முடிவு செய்வார்'னு செங்கோட்டையன் கைய விரிச்சுட்டாராம். அ.ம.மு.க.ல இருந்த முன்னாள் மேயர் விசாலாட்சி, தி.மு.க.ல இருந்த நகராட்சி தலைவர் மணின்னு மேயர் பதவிக்கு ஆசைப்பட்டு த.வெ.க.ல சேர்ந்திருக்காங்க... விஜய் மனசுல என்ன இருக்கோ தெரியலையே!''

''பதவி ஒண்ணு, ஆசை பலபேருக்கு மித்து...''

''பெருமாநல்லுார் பக்கத்துல தி.மு.க.வுல இருந்து த.வெ.க.வுக்கு தாவிய மாஜி பிரமுகர் ஒருவர், பேனர்ல தன் படத்தை மட்டும் பெருசா வச்சிருந்தாராம். இதைப் பார்த்ததும், ரசிகர் மன்ற காலத்துல இருந்து உழைச்ச உள்ளூர் பிரமுகர், 'நிர்வாகிகள் படம் இல்லாம எப்படி நீங்க மட்டும் பேனர் வைக்கலாம்'னு எகிறி, அந்த பேனரையே கழட்ட வச்சுட்டாரு. வந்த வேகத்துல பந்தா காமிச்ச அந்த மாஜி பிரமுகரும் வாயடைச்சுப் போயிட்டாராம்''

சித்ராவும், மித்ராவும் சிரித்தனர்.

கலெக்டரிடம் கேள்வி ''கலெக்டரேட்ல நடக்குற விஷயங்கள் அதைவிட சுவாரசியமா இருக்குங்க்கா...

''விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்துல ஒருத்தர், 'கலெக்டர் சொன்னாலும் அதிகாரிங்க ஐ.டி. கார்டு அணியறதே இல்ல. முதல்ல கலெக்டர் நீங்க அணியணும்'னு ஒரு போடு போட்டாராம்! கலெக்டரும் அசராம, 'சரிங்க... உங்களுக்கு எத்தனை ஏக்கர் விவசாய நிலம் இருக்கு?'ன்னு கிடுக்கிப்பிடி போட, அந்த நபர், 'என்கிட்ட சொத்து இல்ல, விவசாயிகளுக்காகப் பேச வந்தேன்'னாரு. உடனே கலெக்டர், 'ஐ.டி. கார்டு விவரத்தை நாங்க பார்த்துக்கிறோம், நீங்க விவசாயப் பிரச்னைய மட்டும் பேசுங்க'ன்னு ஸ்ட்ரிக்ட்டா சொல்லி அமர வச்சுட்டாரு.

அதே கூட்டத்துல தாராபுரம் விவசாயிகள் 'ஆன்லைன்ல' நஞ்சை நிலத்தை புஞ்சை நிலம்னு தப்பாப் பதிவு பண்ணினதைச் சரி செய்யக் கேட்டு சத்தம்போட ஆரம்பிச்சுட்டாங்க. கடைசில அதிகாரிங்க ஓடிவந்து, 'தேர்தல் வேலை காரணமாத்தான் லேட் ஆகிடுச்சு, படிப்படியா சரி செஞ்சுடுறோம்'னு சொல்லி சமாதானம் பண்ணுனாங்க''

இன்ஸ்பெக்டர் மன உளைச்சல் ''மித்து... தன் குடும்ப உறுப்பினர் கல்யாணத்துக்காக 'வேலம்...' ஸ்டேஷன் பெண் இன்ஸ்பெக்டர், பத்து நாள் லீவு கேட்டிருக்காங்க. ஆனா, இன்னொரு இன்ஸ்பெக்டரும் லீவுல போனதால இவருக்கு லீவு கொடுக்க உயரதிகாரிங்க மறுத்துட்டாங்க.

''இதனால அந்த பெண் இன்ஸ்பெக்டர், ஸ்டேஷன் ஜி.டி. நோட்ல, 'லீவு கிடைக்காததால் கடும் மன உளைச்சலில் இருக்கிறேன்'னு எழுதி வச்சுட்டு, பிஸ்டல், வாக்கி டாக்கினு எல்லாத்தையும் ஒப்படைச்சுட்டு லீவுல கிளம்பிட்டாங்க.

''தேர்தலையொட்டி மாறுதல்ல வெளியூர்ல இருந்து வந்த போக்குவரத்து இன்ஸ்பெக்டர்கள், பணம் செழிக்குற ஊரைப் பார்த்துட்டு இங்கேயே காலத்தை ஓட்ட பிளான் பண்ணிட்டாங்களாம். இவங்களோட கார் டிரைவர்கள் தங்களுக்குச் சாதகமா காய நகர்த்தி, எந்தெந்த வழியில எல்லாம் 'வருமானம்' வரும்னு லிஸ்ட் போட்டு வழிகாட்டிட்டு இருக்காங்களாம்.

''மங்கலம் நால் ரோடு பேக்கரிகள் முன்னாடி வண்டிகளை ரோட்டை ஆக்கிரமிச்சு கண்டபடி நிறுத்துறாங்க. டவுன் பஸ் போயிட்டு வர்றதுக்குள்ள டிரைவர்களுக்குப் போதும் போதும்னு ஆகிடுது. பக்கத்துலயே போலீஸ் ஸ்டேஷன் இருந்தும் சரியா கண்டுக்க மாட்டேங்குறாங்கன்னு பப்ளிக் புலம்புறாங்க''

கவலைப்பட்டாள் சித்ரா.

''கல்வித்துறையில போன வாரம் ஒரு பெரிய ஈகோ யுத்தமே நடந்திருக்கு மித்து. பயிற்சி முகாம் நிறைவு விழா பத்திரிகைல மாவட்ட சி.இ.ஓ. பெயரே இல்லையாம், ஆனா உதவி திட்ட அலுவலரோட பெயர் கம்பீரமா இருந்ததாம். நிகழ்ச்சிக்கு வந்த மாநகராட்சி கல்வி நிலைக்குழு தலைவர் திவாகரன், 'மாவட்ட நிர்வாகம் முறையா அழைக்கல... எங்களை மதிக்கறதில்ல'ன்னு ஓப்பனா சொல்லிட்டு பத்து நிமிஷத்துல கிளம்பிட்டாரு.

''மேடையில அமைச்சர் கமலி பேச வந்தப்போ, மரியாதைக்கு கலெக்டர் எழுந்து நிக்க, எம்.எல்.ஏ.க்கள் பாலமுருகனும், சத்தியபாமாவும் அப்படியே உட்கார்ந்திருந்தாங்க. பரிசு கொடுக்க ஏற்பாடு பண்ணியிருந்த 'ரோபோ' மெஷின் ரொம்ப மெதுவா நகர்ந்ததால டென்ஷனான கலெக்டர் சைகை காட்ட, அப்புறம் அதிகாரிகள் ரோபோவ ஓரமா நகர்த்தி வச்சுட்டு மேனுவலா டக் டக்குனு கொடுத்து முடிச்சாங்களாம்''

விவரித்தாள் சித்ரா.

ஹெச்.எம்.கள் தவிப்பு ''தேர்ச்சி விகிதம் 85 சதவீதம் குறைவா கொடுத்த ெஹச்.எம்-. களை கூப்பிட்டு சி.இ.ஓ. விளக்கம் கேட்க, அவங்க 'பசங்ககிட்ட மொபைல் போன் பயன்பாடு அதிகமா இருக்கு'ன்னு சொல்லியிருக்காங்க. ஆனா சி.இ.ஓ-.வோ, 'பொதுவான காரணம் சொல்லக் கூடாது, காலாண்டுத் தேர்வுல தேர்ச்சி விகிதம் முன்னேறலன்னா கடுமையான நடவடிக்கை எடுப்பேன்'னு சொல்லியிருக்காரு. இதனால சீனியர் ெஹச்.எம்-. கள் பின்னாடி நின்னு புலம்புறாங்கக்கா''

''மித்து... திருப்பூர் அரசு ஆஸ்பத்திரி அம்மா உணவகத்துல எம்.எல்.ஏ. பாலமுருகன் திடீர் ஆய்வு நடத்துனாரு. அங்க இருக்குற இட்லி மெஷின் இரண்டரை ஆண்டுகளா பழுதடைஞ்சு கிடக்குறதைப் பார்த்து ஊழியர்களைக் கேள்வி எழுப்புனாரு. அப்போ அங்க சாப்பிட வந்திருந்த ஒரு கஸ்டமர், 'இந்த மெஷின் பழுதாகி வருஷக்கணக்காச்சு, காலை நேரத்துல கேட்டா கூட இட்லி முடிஞ்சிருச்சுன்னே சொல்லி அனுப்பிடுறாங்க'ன்னு ஓபனா போட்டு உடைச்சிட்டாரு''

''வேலம்பட்டி டோல்கேட்ல 24 மணி நேரத்துக்குள்ள ரெண்டு முறை கடந்தா ரிட்டர்ன் டிக்கெட் சலுகை உண்டுக்கா. ஆனா, பெரும்பாலான நாட்கள்ல முழுக் கட்டணத்தையே வசூல் பண்ணிடுறாங்க. இதை ஒரு வாகன ஓட்டி ஆதாரத்தோட கம்ப்ளைன்ட் பண்ணி விடாம துரத்துனதால, அடிஷனலா வசூலிச்ச தொகையை ஒரு மாசம் கழிச்சு அவரோட பாஸ்டேக் அக்கவுன்ட்ல சேர்த்துட்டாங்க. கேக்காத மத்தவங்களோட பணம் என்ன ஆகுதுன்னு டோல்கேட் நிர்வாகம் கண்டுக்கிறதே இல்லை''

மித்ரா வேதனைப்பட்டாள்.

'மித்து... 'அவிநாசிலிங்கேஸ் வரர்' தொகுதில ஓட்டுப்பதிவு அன்னைக்கு ஷாமியானா பந்தல் போட்ட வகையில மொத்தம் 2 லட்சம் ரூபாய் தான் பில் வந்திருக்குமாம். ஆனா 10 லட்சம் ரூபாய் வரைக்கும் பில் போட்டு கிளைம் பண்ணியிருக்காங்களாம்! இந்த லட்சக்கணக்கான சுருட்டலுக்கு மாவட்ட அளவிலான சில பெரிய அதிகாரிகளோட ஆசியும் முழுசா இருந்திருக்கு''

''அக்கா... அதே ஒன்றிய ஆபீஸ்ல கம்ப்யூட்டர் ஆபரேட்டரா ஒருத்தர் வேலை பார்க்குறாரு. ஆனா, அவரு ஆபீஸ் வேலைய விட, அங்க இருக்குற பெரிய அதிகாரியோட சொந்த காருக்கு டிரைவராதான் அதிக நேரம் இருக்காராம்! அந்த அதிகாரியோட சகல விவகாரங்களுக்கும் இந்த ஆபரேட்டர் தான் வலது கரம் என்பதால், ஆபீஸ்ல மத்த யாரையும் நம்பாம இவரை மட்டும்தான் நம்புறாராம். விளைவு... அந்த ஆபரேட்டர் இப்போ ஆபீஸ்க்குள்ள முழு அதிகார தோரணையில வலம் வர்றாராம்...

மாநகராட்சி வேடிக்கை ''மாநகராட்சி பூ மார்க்கெட் கடையை வாடகைக்கு எடுத்த நபர், ஒழுங்கா வாடகை தராம பிரச்னை பண்ணியிருக்காரு. இதனால கடுப்பான ஏலதாரர் தரப்பு அதிரடியா கடைக்கு பூட்டுப் போட்டு சீல் வச்சுட்டாங்க. கடையோட உரிமையாளர் தரப்பு பூட்டை உடைச்சுட்டு உள்ளூர் அரசியல் கட்சிகளோட சப்போர்ட்டைக் கேட்க, விஷயம் சீரியஸ் ஆகுறதைப் பார்த்த பிரமுகர்கள் ஒதுங்கிட்டாங்க. இப்போ இந்த விவகாரம் போலீஸ், வருவாய்த்துறைன்னு தீவிர விசாரணை ரேஞ்சுக்குப் போயிடுச்சு, மாநகராட்சி நிர்வாகமோ கமுக்கமா வேடிக்கை பார்க்குதுக்கா''

சொல்லி முடித்தாள் மித்ரா.

''அவிநாசிலிங்கேஸ்வரர் பகுதி சப்-ரிஜிஸ்ட்ரார் ஆபீஸ்ல பத்திரம் பதிய லகரத்துல லஞ்சம் கேட்க, பார்ட்டிங்க எழுத்தர் வழியா போயிருக்காங்க. ஈகோ டச்சான சப்-ரிஜிஸ்ட்ரார், 'ஆவணம் சரியில்ல'ன்னு தட்டிக்கழிக்க வச்சதோட, 'பத்திரத்தை பதியாதீங்க, ஐம்பதாயிரம் வாங்கிக்கோங்க'ன்னு பகிரங்கமா டீல் பேசியிருக்காங்க! அதிர்ந்த எழுத்தர், 'எனக்கே ஐம்பதாயிரம்னா பத்திரம் பதிய எத்தனை லட்சம் வாங்குவாங்க?'ன்னு புலம்பிட்டாரு.''

''நிலைமை இப்போதைக்கு அப்படித்தான் இருக்கு மித்து... சரி டைம் ஆச்சு, அடுத்த வாரம் மத்த மேட்டரை அலசுவோம்''

சித்ரா சொல்லிக்கொண்டே தன் ஸ்கூட்டரை வீடு நோக்கி கிளப்பினாள்.

'அமைச்சர் கமலியை சுத்தியும் அவரோட சொந்தக்காரங்களும் சில நிர்வாகிகளும் மட்டுமே அரணா நின்னுக்கிட்டு, மகளிர் அணியினரை பக்கத்துல கூட அண்ட விடலையாம்''


''பெண் இன்ஸ்பெக்டர், ஸ்டேஷன் ஜி.டி. நோட்ல, 'லீவு கிடைக்காததால் கடும் மன உளைச்சலில் இருக்கிறேன்'னு எழுதி வச்சுட்டு, பிஸ்டல், வாக்கி டாக்கினு எல்லாத்தையும் ஒப்படைச்சுட்டு லீவுல கிளம்பிட்டாங்க''


தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us