தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/சித்ரா...மித்ரா (திருப்பூர்)/ 'மாமூல்' வாழ்க்கை தொடருது: 'எம்' லிஸ்ட் ஒழிந்தது!

 'மாமூல்' வாழ்க்கை தொடருது: 'எம்' லிஸ்ட் ஒழிந்தது!

 'மாமூல்' வாழ்க்கை தொடருது: 'எம்' லிஸ்ட் ஒழிந்தது!


ADDED : ஜூலை 07, 2026 06:52 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 07, 2026 06:52 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

''மி த்து நாம போன வாரம் பேசின மாதிரியே, ஆனந்தமான 'மாஜி' மினிஸ்டர் 'விசிலடிச்சிட்டாரு' பார்த்தியா'' பேச்சை ஆரம்பித்தாள் சித்ரா.

''ஆமாங்க்கா, அவரோட, ஆதரவாளர்களும் போயிட்டாங்க. ஆனா, மீதியுள்ளவங்களுக்கு என்ன பண்றதுன்னே தெரியாம முழிக்கிறாங்களாம். அதேமாதிரி ம.தி.மு.க-.வில முக்கிய புள்ளிகளும், 'விசில்' கட்சி பக்கம் போய்ட்டாங்க. இதே போல, முன்னாள் எம்.பி. மகன், மொடக்குறிச்சி, கொடுமுடி, காங்கயம் ஏரியா ம.தி.மு.க. நிர்வாகிகளை நம்ம 'மாஜி' மினிஸ்டர் சாமிநாதன், ஒரே நாள்ல பேசி முடிச்சு, தி.மு.க-.வுக்கு இழுத்துட்டு போயிட்டாராம். கையோட கட்சி தலைவரையும் சந்திக்க வச்சு சபாஷ் வாங்கிட்டார்,'' அரசியல் 'அப்டேட்' செய்தாள் மித்ரா.

''அவிநாசி 'விசில்' கட்சியில திருப்பூர் மேற்கு இளைஞரணி நிர்வாகி ஒருத்தரு, பதவிக்காக அடிதடி வரைக்கும் போயிருக்காரு. இன்னொரு பக்கம், இணை அமைப்பாளர் பொறுப்புல இருக்கற ஒருத்தரு 'டாஸ்மாக்' பார்ல ஊழியர்கள் கூட சண்டை போட்டு, சேர், டேபிள் எல்லாம் ஒடைச்சு ரகளை பண்ணியிருக்காரு. விஷயம் மீடியால வந்ததுக்கு அப்புறம் தான், அவிநாசி போலீஸ் கேஸ் போட்டிருக்காங்க. அதுலயும் பார்ல ரகளை செஞ்சவரை மட்டும் 'அரெஸ்ட்' பண்ணிட்டு, மேலிடத்து 'பிரஷர்'ல, இன்னொருத்தரை விட்டுட்டாங்களாம்,'' சித்ரா விளக்கினாள்.

விசித்திர வழக்கு ''என்ன மாற்றமோ...'' அங்கலாய்த்த மித்ரா, ''2023ம் வருஷம், தமிழக அரசை கண்டிச்சு அவிநாசி கோவில் முன்னாடி பா.ஜ., கட்சிக்காரங்க போராட்டம் நடத்துனாங்க. அதுக்கு மறுநாளே, மத்திய அரசை கண்டிச்சு மா.கம்யூ.,வினர் போஸ்ட் ஆபீஸ் பக்கம் போராட்டம் நடத்துனாங்க. இதுல என்ன விஷயம்னா, கம்யூனிஸ்ட்காரங்க நடத்துன போராட்டத்துக்கு கேஸ் எதுவும் போடாம விட்டுட்டாங்க,''

''ஆனா, பா.ஜ.,வினர் மேல கேஸ் போட்டு, கோர்ட் விசாரணை வரைக்கும் போயிடுச்சு. அங்க தான் ஒரு பெரிய 'டவிஸ்ட்'. பா.ஜ.மேல போட்ட கேஸ்ல, கோர்ட்ல ஆஜராக சொல்லி, கம்யூனிஸ்ட்களுக்கு சம்மன் போயிருக்கு. இத பார்த்து அதிர்ச்சியான தோழர்கள், 'அவங்க கேஸ்க்கு எங்களுக்கு ஏன் சம்மன் அனுப்புறீங்க?'ன்னு கேட்கவும் தான் விஷயம் போலீசுக்கு தெரிஞ்சிருக்கு. இந்த சொதப்பலால, பா.ஜ.,காரங்க மேல போட்ட கேஸையும் வேற வழியே இல்லாம தள்ளுபடி செய்ற நிலைமைக்கு ஆயிட்டாங்களாம்,'' என்றாள் சித்ரா.

'ரூட்' மாறி -'மாமூல்' ''இப்படியுமா கவனக்குறைவா இருப்பாங்க...'' என ஆவேசமாக சொன்ன மித்ரா, ''திருப்பூர் ஈஸ்வரன், பெருமாள் கோவிலில், 'ஸ்பான்சர்' வாங்கித்தான் பங்ஷன் நிறைய நடக்குது. இதுல கூத்து என்னென்னா, கோவில் ஆபீசருக்கே தெரியாம சில ஸ்டாப்ஸ், ஸ்பான்சர்ஸ் பேர்ல வசூல் அள்றாங்களாம். இது மண்டல ஆபீசர் காதுக்கு போக, ''இனி யாரு ஸ்பான்சர் செஞ்சாலும், ரசீது போடணும்னு ஸ்ட்ரிக்டா ஆர்டர் போட்டுட்டாராம்'' என்றாள் மித்ரா.

''ஏற்கனவே, கோவில்ல கல்யாணம் நடத்துறதுல போலி பில் தயாரிச்ச விவகாரத்துல அப்போதிருந்த ஆபீசர் சஸ்பெண்ட் ஆனாரே?'' சித்ரா கேட்க, ''ஆமா, மித்து, ஆனா தப்பு செஞ்ச ஊழியர்கள் மேல எந்த நடவடிக்கையும் எடுக்கல. கோவில்ல நடக்குற இந்த தில்லுமுல்லுகளுக்கு சீக்கிரம் முற்றுப்புள்ளி வைக்கோணும்னு பக்தர்கள் பேசிக்கிறாங்க,'' என்றாள் மித்ரா.

''ஆட்சி மாறினாலும் காட்சி மாறுலங்கற கதையால்ல இருக்கு...'' என்ற சித்ரா, ''அவிநாசியில உள்ள டாஸ்மாக் கடைகள்ல, 24 மணி நேரமும் சரக்கு வித்துட்டு இருந்தாங்க. இதுக்காக, போலீசுக்கு மாமூல் போய்ட்டு இருந்துச்சு. புது கவர்ன்மென்ட் வந்ததும், இல்லீக்கல் சேலுக்கு தடா போட்டுட்டாங்க. இதனால 'கட்' ஆன 'வருமான'த்தை ஈடுகட்ட, 'எப்.எல்.2' பார்களை 'டார்கெட்' பண்றாங்களாம். அதுல, மெம்பர்களுக்கு மட்டும்தான் சரக்கு விக்கணுமாம். ஆனா, அவங்க 'ஓபன் சேல்' செஞ்சு கல்லா கட்றாங்க. இத கண்டுக்காம இருக்க இப்போ 'மாமூல்' வேட்டை ஜோரா நடக்குதாம்,'' என்றாள்.

''அப்டின்னா, மாமூல் வாழ்க்கை பாதிக்காம பார்த்துகிறாங்கன்னு சொல்லுங்க...'' என சிரித்த மித்ரா, ''அவிநாசி, பழங்கரை பக்கம் ஒரு எக்ஸ்போர்ட் கம்பெனியோட தொழிலாளர் விடுதி இருக்கு. அதுக்கு வீட்டு மின் இணைப்பு வாங்கிப் பயன்படுத்தியதா சொல்லி, இ.பி. காரங்க, 4.20 லட்சம் ரூபாய் 'பைன்' போட்டுட்டாங்க. 'நாங்க இந்த பில்டிங்க இப்பதான் வாங்கினோம், கமர்ஷியல் கனெக் ஷனுக்கு அப்ளை பண்ணிட்டோம்'னு அவங்க சொல்லியும், 'நாங்க இன்ஸ்பெக் ஷன் பண்றப்போ என்ன நிலைமையோ, அத வச்சுத்தான் பைன்'னு ரொம்ப ஸ்ட்ரிக்ட்டா சொல்லிட்டாங்களாம்...'' என்றாள்.

ஒழிந்தது 'எம்' லிஸ்ட் ''போன ஆட்சியில, டீச்சர்ஸ் கவுன்சிலிங் நடக்குறப்போ மெயின் ரோடு பக்கத்துல இருக்குற ஸ்கூல்களுக்குப் போக பயங்கர சிபாரிசு இருக்கும். அதுபோன்ற ஸ்கூல் லிஸ்ட்டை 'எம் லிஸ்ட்'னு (மினிஸ்டர் லிஸ்ட்) ஒதுக்கி, கவுன்சிலிங்ல காட்டாம மறைச்சுடுவாங்க. கடைசி நாள்ல தங்களுக்கு வேண்டியவங்களுக்கு அந்த இடத்தை கொடுத்திடுவாங்க. ஆனா, இந்த கவர்மென்ட் 'எம் லிஸ்ட்' என்ற விஷயமே இருக்கக் கூடாது, எந்த இடத்தையும் மறைக்கக் கூடாதுனு அதிரடி உத்தரவு போட்டுட்டாங்க. இதனால, இப்ப நடக்குற கவுன்சிலிங்ல எந்த ஸ்கூலும் மறையல. டீச்சர்ஸ் எல்லாரும் 'அப்பாடா'னு நிம்மதியா இருக்காங்க'' என்றாள் மித்ரா.

எப்.ஐ.ஆர். என்னாச்சு? ''அவிநாசியைச் சேர்ந்த ஒரு லேடி ட்ரீட்மென்ட்க்காக திருப்பூர் ஜி.எச். வந்திருக்காங்க. பழைய பஸ் ஸ்டாண்டுல மயக்கம் வர்ற மாதிரி இருந்ததால, டீ குடிக்கப் போயிருக்காங்க. அப்போ மொபைல் போன யாரோ திருடிட்டாங்க. அங்கிருந்த 'சிசிடிவி'-யை 'செக்' பண்ணிப் பார்த்தப்போ, ஒருத்தன் போனைத் திருடி, அங்கிருந்த இன்னொரு லேடிகிட்ட கொடுக்குறது தெரிஞ்சது. மொபைல் போனை பறிகொடுத்த பெண்ணோட ஹஸ்பெண்டே தேடிப் போய் அந்த திருடன புடிச்சு சவுத் போலீஸ் ஸ்டேஷன்ல ஒப்படைச்சிருக்காரு. ஆனா, இதுவரைக்கும் எப்.ஐ.ஆர்., போடலையாம்,'' ஆதங்கப்பட்டாள் சித்ரா.

''திருப்பூர் கார்ப்பரேஷன் மீட்டிங் ஹால்ல மைக் சிஸ்டம் ஒழுங்கா வேலை செய்யலையாம். இதனால, மைக் சிஸ்டம் சரி செய்ய, ஏழரை லட்சம் 'பாஸ்' பண்ணுனாங்க. ஆனா, மைக் இன்னும் மக்கர் பண்ணுதாம். அப்ப பணம் பாஸாயிடுச்சு. மைக் பெயிலாடுச்சு,'' என சிரித்தாள் சித்ரா.

''அக்கா, வக்கீல் மேட்டர் ஒன்னு இருக்கு கேளுங்க. மாவட்ட கோர்ட்டுகளில் அரசு தரப்பில் ஆஜராக வேண்டிய அரசு வக்கீல்கள் பட்டியலை, மாவட்ட நிர்வாகம் நீதிபதிக்கு அனுப்பியது. ஆனா, அதில் சில குழப்பங்கள் இருந்ததால, நீதிபதி சில விளக்கங்களை கேட்டிருக்கார். மாவட்ட நிர்வாகம் இன்னும் சரி செஞ்சு தராததால, வழக்குகளுக்கு தொடர்ந்து வாய்தா போட்டுட்டு வர்றாங்களாம், '' என்று சித்ரா சொன்னதும், ''அக்கா, நான் கெளம்பறேன்,'' என புறப்பட்டாள் மித்ரா.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us