தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/சித்ரா...மித்ரா (திருப்பூர்)/லஞ்சம் வாங்குவதற்கு ‘டெக்னிக்’ புதுசு... ஆக்கிரமிப்பு விஷயத்துல பண்றாங்க ‘ரவுசு’

லஞ்சம் வாங்குவதற்கு ‘டெக்னிக்’ புதுசு... ஆக்கிரமிப்பு விஷயத்துல பண்றாங்க ‘ரவுசு’

லஞ்சம் வாங்குவதற்கு ‘டெக்னிக்’ புதுசு... ஆக்கிரமிப்பு விஷயத்துல பண்றாங்க ‘ரவுசு’


UPDATED : நவ 16, 2026 05:39 PM

ADDED : நவ 16, 2026 05:36 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 16, 2026 05:39 PM ADDED : நவ 16, 2026 05:36 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

‘‘அப்பப்பா எவ்வேளா கூட்டம்...,’’ என்றவாறே வேகமாக வந்தாள் சித்ராவிடம், ‘‘எங்க சொல்கிறீங்க?’’ மித்ரா கேட்டாள்.

‘‘மித்து, கந்த சஷ்டி விழாவைத்தான் சொல்றேன். எந்த வருஷம் இல்லாத மாதிரி, இந்த வருஷம் பக்தர்கள் கூட்டம் ஜே.ஜே.ன்னு இருந்துச்சு. அதிலும், அவிநாசி, பூண்டியில எக்கச்சக்கமான கூட்டம். முக்கியமா ஒன்று சொல்லோணும். ஜென்ஸீ கிட்ஸ் நெறைய பேர் ஏழு நாள் சஷ்டி விரதமிருந்து, கோவிலுக்கு போனாங்கன்னா, பாத்துக்கோ,’’

‘‘அடடே... நல்ல விஷயம்தானேக்கா,’’ பாராட்டிய மித்ரா, ‘‘அக்கா, காசிபாளையத்துல, அங்கன்வாடி மையம், வாட்டர் டேங்க் இருக்கற இடத்தில, ஆக்கிரமிப்பு உள்ளதாம். அங்கன்வாடி மையத்தின் பாதுகாப்பு கருதி சுற்றுச் சுவர் கட்டற வேலை, இந்த ஆக்கிரமிப்பாளர்களால் பாதியில நின்னுடுச்சாம். இறந்தவர் சடலங்களை வைத்து சடங்கு சம்பிரதாயம் செஞ்சுட்டு வர்றோம்னு சொல்லி சிலர் பிரச்னை செய்யறாங்க. ‘ஆக்கிரமிப்பு இடத்துல, சடலங்களை புதைக்க கல்லறை தோட்டமாக மாற்ற டிரை பண்றாங்க,’ன்னு அங்க வசிக்கற மக்கள் சொல்றாங்க. ஆபீசர்களும் ‘கப்சிப்’னு இருக்காங்களாம்,’’ என்றாள்.

‘ஜகா’ வாங்கிய ஆபீசர்

‘‘யூனியன் மில் ரோட்டில் உள்ள ‘அகலமான வழி’ மல்டிபிளக்ஸ் தியேட்டர் கட்டுமானத்தில், பல ரூல்ஸ்கள் மீறப்பட்டுள்ளதாம். போதிய பாதுகாப்பு ஏற்பாடு, பார்க்கிங் வசதி இல்லை என மக்கள் கம்ளையன்ட் பண்ணினாங்க. இதுபோ, மெகா சைஸில், ரோட்டோரம் வைத்துள்ள ஸ்கிரீனை பாத்துட்டு டூவீலர், போர் வீலர் ஓட்டவறங்க டிஸ்டர்ப் ஆகறாங்க. இவ்வளவு இருந்தும் கூட இதப்பத்தி கார்ப்ரேஷன் நிர்வாகம் எதையுமே கண்டுக்கலை. ஒரு சிலர் கேட்டதுக்கு, ‘நோட்டீஸ் அனுப்பிட்டோம்னு,’ ‘மாமூல்’ பதிலை சொல்றாங்களாம் மித்து...’’

சரியான போட்டி

‘‘திஷா’ மீட்டிங் மற்றும் பொறுப்பு மினிஸ்டர் மீட்டிங் என கலெக்டர் அலுவலகம் கடந்தவாரம் களைகட்டியது. ‘திஷா’ மீட்டிங்கில், மத்திய, மாநில அரசுகள் திட்டத்தில் செயல்படுத்தும் பணிகளை கண்காணிக்க கமிட்டிக்கு அதிகாரம் உள்ளது. அதிகாரிகள் ஒத்துழைக்கணும்,’ என தெளிவாக பேசினர்.

‘‘அந்த மீட்டிங் முடிஞ்சதும், பொறுப்பு மினிஸ்டர் தலைமையில், ஆளுகட்சி எம்.எல்.ஏ.க்களை வைத்து ஆய்வுக்கூட்டமும் நடத்தப்பட்டது. ஒரு நாளில், ரெண்டு மீட்டிங்... மக்கள் பணி செய்ய இப்படி ஒரு நல்ல போட்டி இருப்பது நல்லது தான் என ஆபீசர்கள் தங்களுக்குள் பேசி கொண்டதாக தகவல்,’’ என்றாள் சித்ரா.

அதிகாரிகள் ‘----கறார்’

‘‘பள்ளிக் குழந்தைகளுக்கு ‘கேக்’ வழங்கும் நிகழ்ச்சிக்கு வந்த மினிஸ்டர் அருண்ராஜிடம் தங்கள் குறைகளை கூற, ஆசிரியர்கள் வந்தனர். இதனை கவனித்த டி.இ.ஓ. ‘பேசிக்கலாம் வெயிட் பண்ணுங்க,’ எனக்கூறி அவர்களை ‘கண்’காணித்தார். ஒரு ஆசிரியர் கூட்டமைப்பினர் மனுகொடுத்ததும், மினிஸ்டர், ’கவலைப்படாதீங்க; எஜூகேஷன் மினிஸ்டரிடம் சொல்கிறேன்,’ என்றார்.

‘‘உடனே ஒரு ஆசிரியர் கண்ணீர் விட்டு கதறினார். இதனை பார்த்த ரிப்போர்ட்டர்ஸ், அவரிடம் மைக் நீட்டினர். உடனே சுதாரித்த கல்வி அதிகாரிகள், ஆசிரியரை ‘பேக்கப்’ செய்தனர். இந்த களேபரத்தால், மற்றவர்கள் மனு கொடுக்க முடியாமல் சோகமாக சென்றனர்,’’ ஆதங்கப்பட்டாள் மித்ரா.

‘பிளீஸ்’ போன் வேண்டாம்

‘‘தாராபும் இடைத்தேர்தலின் போது, த.வெ.க. தொண்டர்கள் பத்தி பேசியதாக ஒரு ஆடியோ ரிலீசாகி பரபரப்பாச்சுல்ல. அது ‘ஏஐ’ன்னு சொன்ன அந்த வி.ஐ.பி. தன்னை சந்திக்க யார் வந்தாலும், போனை வெளியே வெச்சுட்டு வாங்கன்னு ‘கறாரா’ சொல்லி விடுகிறார். நெருங்கிய நிர்வாகிகள் கேட்டதற்கு, ‘ஏற்கனவே பட்டது போதும்டா சாமி,’ என வி.ஐ.பி. புலம்புகிறாராம்,’’ சொன்னாள் சித்ரா.

இப்படி செய்யலாமா?

‘‘பூண்டி கோவிலில் நடந்த கந்தசஷ்டி திருக்கல்யாண உற்சவத்துக்கு, 600 வி.ஐ.பி. பாஸ் கொடுத்திருக்காங்க. ஆனா, அதுக்கும் மீறி ஆயிரக்கணக்கில் பக்தர்கள் திரண்டு சஷ்டி மண்டபத்தில எங்க பார்த்தாலும் மனித தலைகள் தாங்க தெரிஞ்சுது. ஒரு கட்டத்தில் பக்தர்கள் உள்ளே வர தள்ளுமுள்ளு ஆச்சு. ஆனா, பந்தோபஸ்துக்கு வந்த லேடி போலீஸ் சிலர், தங்களுக்கு வேண்டிய ஆட்களை உள்ளே கூட்டிட்டு போய் சுவாமி கும்பிட வச்சாங்களாம். இதப்பார்த்த பக்தர்கள் சிலர், ‘போலீசாரே இந்த வேலையை செய்யலாமா,’ன்னு சத்தம் போட்டனர். ஆனால், போலீஸ்காரர்கள் எதையுமே கண்டுக்கலையாம்,’’ ஆதங்கப்பட்டாள் மித்ரா.

சிக்கிய ‘டுபாக்கூர்’

‘‘மித்து, போன வாரம், அனுப்பர்பாளையம் ஸ்டேஷன் லிமிட்டில், ஒரு வீட்டில், ‘பலான’ விஷயம் நடப்பதாக தகவல் கிடைத்ததால், போலீசார் ரெய்டு போனாங்க. அங்கிருந்த ஒரு டுபாக்கூர் ரிப்போர்ட்டரை பிடித்து விசாரித்தனர். ‘மாஸ்டர் மைன்ட்’டே அந்த ஆசாமி தான் என தெரிந்த கொண்ட போலீசார், அரெஸ்ட் செய்து உள்ளே தள்ளினர். இதேபோல, இன்னொரு டுபாக்கூரையும் பிடித்து உள்ளே தள்ள போலீசார் ரெடியாயிட்டு இருக்காங்க...’’

மூடி மறைத்த போலீஸ்

‘‘அக்கா, கொண்டத்து காளியம்மன் ஊரில் உள்ள நால் ரோட்டில் போலீஸ் ரோந்து பணியில் இருந்தனர். ‘புல் சரக்கில்’ வந்த ஒரு ஆசாமி, பஸ்சுக்கு நின்ற பப்ளிக் சிலரை அடித்துள்ளார். இதனை கேட்கப்போன, லேடி எஸ்.ஐ., அப்புறம் ஏட்டய்யாவை, போதை ஆசாமி தாக்கியதும், ஆவேசம் வந்த பப்ளிக் சிலர், அந்நபரை துவைத்து எடுத்து, ஜி.எச்.க்கு அனுப்பி விட்டனர்,’’

‘‘நடுரோட்டில் நடந்த இந்த விவகாரம் பெரிய ஆபீசர் காதுக்கு போயும் கூட ஒரு நடவடிக்கையும் இல்லையாம். பெட்டி கேஸ் போட்டு முடிச்சிட்டாங்கன்னு, போலீஸ்காரங்க புலம்பறாங்ளாம்,’’ சொன்னாள் மித்ரா.

லஞ்சத்துக்கு புது ‘டெக்னிக்’

‘‘யாருக்கும் தெரியாம எப்படி லஞ்சம் வாங்கறதுன்னு, திருப்பூரில இருக்க சிலர் பி.எச்.டி, பட்டமே கொடுக்கலாம் மித்து. காங்கயம் ரோட்டிலுள்ள உள்ள நல்ல ஊர், பக்கத்துல இருக்க ‘... பாளையம்’ கிராமத்திலுள்ள வி.ஏ.ஓ. ஆபீசில் புது டெக்னிக் பயன்படுத்தி லஞ்சம் வாங்கறாங்களாளம். சர்டிபிகேட் கேட்டு வர்றவங்களிடம், பணத்தை, டேபிள் மேல இருக்கற நோட்டுக்குள் வெச்சுட்டு போங்கன்னு சொல்றாங்க. அவங்களும் வெச்சுட்டு போனதுக்குப்பறம், ‘பட்’னு ஆபீசை பூட்டிட்டு போயிட்டு, கொஞ்ச நேரம் கழிச்ச திறந்து பணத்தை எடுத்துக்கறாங்களாம். என்னதான் பொறி வெச்சு புடிச்சாலும் ஒரு சிலர் திருந்தவே மாட்டேங்குறாங்க...’’ வேதனைப்பட்ட சித்ரா, அருகிலுள் பேக்கரியில் பில்டர் காபிக்கு ஆர்டர் செய்தாள்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us