/
வாராவாரம்
/
சித்ரா...மித்ரா (திருப்பூர்)
/
லஞ்சம் வந்த வழி... ஆளுங்கட்சி விஐபி 'கிலி'
/
லஞ்சம் வந்த வழி... ஆளுங்கட்சி விஐபி 'கிலி'
ADDED : நவ 11, 2025 12:42 AM

'தி ருப்பூர்ல குப்பை பிரச்னை, விஸ்வரூபம் எடுத்துட்டு வருது சித்ராக்கா. ஊருக்கு ஊரு மக்கள்கிட்ட நல்லாவே 'அவேர்னஸ்' வந்துட்டு இருக்கு...'' என பேச்சை துவக்கினாள் மித்ரா.
''ஆமா மித்து. குறிப்பா, கார்ப்ரேஷன் கவுன்சிலர் களுக்கு நெருக்கடி அதிகமாகிடுச்சு. கார்ப்ரேஷன் பிரச்னை சம்மந்தமா, வாய் திறக்காம இருக்க, தீபாவளி பண்டிகையப்போ, சில கவுன்சிலர்களுக்கு லகரங்கள்ல அன்பளிப்பு கிடைச்சிருக்குன்னு, நாம பேசினோம்ல; இது, மக்கள்கிட்ட 'ரீச்' ஆகிடுச்சு.
''நாம பேசினதையெல்லாம், உன்னிப்பா கவனிச்ச, திருப்பூர் சுற்றுச்சூழல் குழுவை சேர்ந்த ஒருத்தரு, 'எந்த அன்பளிப்பும் வாங்கலைன்னு கம்யூ. கவுன்சிலர்ஸ் சொன்னத வச்சு பார்க்கும் போது, மத்த கட்சியை சேர்ந்த கவுன்சிலர்ஸ் வாங்கியிருக்கிறது, 'கன்பார்ம்' ஆகிடுச்சு. அதுக்கு பணம், யாரு கொடுத்தாங்க? ஏதாவது, திட்டத்துல இருந்து ஊழல் பணமா?''
''இந்த விஷயத்தையும் சொன்னா தானே, அவங்க நேர்மையை நாம முழுசா பாராட்ட முடியும்ன்னு கேட்டு, அறிக்கை விட்டிருக்காங்க. அதோட விடாம, அந்த அன்பளிப்பு விவகாரமா விசாரிக்க, சிறப்பு விசாரணைக்குழு அமைக்கணும்ன்னு, கலெக்டர், கார்ப்ரேஷன் கமிஷனர், விஜிலென்ஸ் போலீசுக்கு எழுத்துப்பூர்வமாவே புகார் மனு அனுப்பியிருக்காங்கன்னா பார்த்துக்கோயேன்...'' விளக்கினாள் சித்ரா.
'தேர்தல்' அரசியல் ''அவங்க கேட்கிறதும் ஒரு வகையில 'கரெக்ட்' தானே... பார்ப்போம் என்ன பண்றாங்கன்னு'', என்ற மித்ரா நானும் ஒரு அரசியல் மேட்டர் சொல்றேன்.
''சவுத்ல அ.தி.மு.க., 'மாஜி' நிர்வாகி இறந்துட்டார்ல. அவரோட பதவியை பிடிக்க கடும் போட்டியாம். இதுல, பேரவையை சேர்ந்த ஒரு நிர்வாகி, ரொம்ப தீவிரமாக முயற்சி பண்றாராம். பதவியை மனசுல வச்சு, தீபாவளிக்கு, 21 வார்டு பொறுப்பாளர்களுக்கு, அஞ்சாயிரம் ரூபா கொடுத்து, வாழ்த்து சொல்லியிருக்காருன்னு ஒரு பேச்சு உலா வருது,''
''அதுமட்டுமில்லாம, இப்போ, எஸ்.ஐ.ஆர். வேல நடக்குதுல்ல, 'நம்ம வாக்காளர்கள் யாரும் பட்டியல்ல இருந்து 'மிஸ்' ஆகாம பார்த்துக்கணும்'ன்னு சொல்லி, டோட்டலா உள்ள 246 பூத் இன்சார்ஜ்களுக்கும், ஆயிரம் ரூபா கை செலவுக்கு கொடுத்திருக்காராம். இதனால, குஷியான பூத் நிர்வாகிங்க, பி.எல்.ஓ.,பணியாளரை 'பாலோ பண்றாங்களாம்,'' என்றாள்.
'வாரிசு' அரசியல் ''இதான்டி அரசியல்'' என சிரித்த சித்ரா, ''ஒரு ஆளுங்கட்சி மேட்டர் கேளு. ஆளுங்கட்சி வார்டு நிர்வாகி ஒருத்தரோட மகன், வீரபாண்டி பக்கம் இருக்கற, தன்னோட 'பிரெண்டு' வீட்டு க்கு போயிட்டு, அவர்கிட்ட பேசிட்டு வந்திருக்காரு; இந்த நிலைமைல, அவங்க வீட்ல இருந்த, 6 சவரன் நகை, 50 ஆயிரம் கேஷ் மிஸ்ஸிங் ஆயிடுச்சு. 'ஷாக்' ஆன வீட்டுக்காரங்க, போலீஸ்ல 'கம்ப்ளைன்ட்' கொடுத்திருக்காங்க,''
''விசாரணையில, நகை பணம் மிஸ்ஸிங் விவகாரத்துல, வீட்டுக்கு வந்துட்டு போன அந்த ஆளுங்கட்சி நிர்வாகியோட வாரிசுக்கு தொடர்பு இருக்குன்னு தெரிஞ்சதும், அந்த விஷயம் உள்ளூர் விஐபி கவனத்துக்கு போயிருக்கு. சம்பந்தப்பட்டவர், கட்சி மாணவரணியில பொறுப்புல வேற இருக்காராம். விவகாரம் வெளியே தெரிஞ்சா, அசிங்கமா போயிடும்ன்னு நினைச்சு, விஐபி.யின் தலையீட்ல, போலீஸ் கட்டப்பஞ்சாயத்து பேசி, முடிச்சிட்டாங்களாம். இதுக்கு பரிகாரமா, பெரிய தொகையை 'தட்சணையா' வாங்கிட்டாங்கன்னு, ஆளுங்கட்சிக்காரங்களே பேசிக் கிறாங்க...'' என்றாள்.
''எல்லாம் மேலிட விவகாரம்...'' அங்கலாய்த்த மித்ரா, ''பல்லடம் பக்கத்துல செம்மிபாளையத்துல, போலி டாக்குமென்ட் தயாரிச்சு, விவசாயி ஒருத்தரோட நிலத்தை இன்னொருத்தரு ஆக்கிரமிச்சுட்டாராம். அவரு மேல அந்த விவசாயி புகார் கொடுக்க, 'எப்ஐஆர்.,' போட்டுட்டாங்களாம். ஆனா, நடவடிக்கை எதுவும் எடுக்கலையாம். காரணம் கேட்டா, அவரு சீனியர் சிட்டிசன்னு சொல்றாங்களாம்...''
''அதே மாதிரி, அங்க இருக்கற ரெவின்யூ டிபார்ட்மென்ட்காரங்க பட்டா கொடுக்கிற வேலையில திடீர்ன்னு பிசியாகிட்டாங்களாம். என்ன காரணம்ன்னு விசாரிச்சப்போ, பூமிதான இயக்கத்துல கொடுக்கப்பட்ட நிலத்தை, பயனாளிகள்கிட்ட இருந்து, ஆளுங்கட்சி நிர்வாகிங்க மிரட்டியும், கட்டாயப்படுத்தியும் எழுதி வாங்கி, பட்டா போட வச்சுட்டாங்களாம்...'' என்றாள்.
'பயர் அரசியல் ''பயர் சர்வீஸ்ல 'புகைச்சல்' அதிகமாகிடுச்சாம்,'' என பேச்சை மாற்றிய சித்ரா, ''அந்த துறையில லஞ்சம் வாங்கி சிக்கின ஒருத்தரை 'சஸ்பெண்ட்' செஞ்சங்காளல்ல. அவரு, தன்னோட சொந்த ஊருக்கே போனாலும், தன்னோட செல்வாக்கை இழக்க விரும்பாம, வேண்டப்பட்டவங்க சிபாரிசு பிடித்து, யாரு, யாரு என்ன வேலை செய்றாங்க? தப்பு பண்றாங்களான்னு தெரிஞ்சு வச்சுக்கிட்டு, அவங்கள 'பிளாக்மெயில்' பண்ணி வசூல் பண்றாருன்னு பேசிக்கிறாங்க,''
''அதேமாதிரி, டிரான்ஸ்பர்ல வேற ஊருக்கு போனவங்க கூட, இங்க இருக்கற குவாட்டர்ஸ் காலி செய்யாம இருக்காங்களாம். இதனால, வெளியூர்ல இருந்து டிரான்ஸ்பராகி வந்தவங்களுக்கு வீடு கிடைக்காம, வாடகைக்கு எடுத்து தங்க வேண்டியிருக்குன்னு புலம்பறாங்க,'' என்றாள்.
''குவாட்டர்ஸ்னு சொல்லவும் தான் எனக்கொரு விஷயம் ஞாபகத்துக்கு வருது, சித்ராக்கா...'' என்ற மித்ரா, ''ரயில்வே ஸ்டேஷன் பக்கத்துல இருக்கற குவாட்டர்சில், ரயில்வேக்கு சொந்தமான நிலத்தை பொது வழிப்பாதையா மக்கள் யூஸ் பண்ணிட்டு இருக்காங்க. ரொம்ப நாளா மக்கள் பயன்பாட்டில் இருக்கிறதால யாரும் பெரிசா கண்டுக்கல. அங்க வழி இல்லாத ஒரு இடத்தை வாங்கின மாநகர தோழர் வி.ஐ.பி. ஒருத்தரு, தன்னோட செல்வாக்கை பயன்படுத்தி, தார் ரோடு போட்டு, நில மதிப்பை உயர்த்தி விட்டுட்டாராம். போன வாரம், ரயில்வே டிபார்ட்மென்ட்காரங்க தங்களோட எல்லையில வேலி போட போனப்போ, அந்த இடத்தை மட்டும் விட்டுட்டாங்களாம்,'' என்றாள்.
'ரயில்' அரசியல் ''அரசியல்வாதி தப்பு செஞ்சா விட்டுடுறாங்க. அதுவே சாமானியன்னா, வெச்சு செய்யறாங்க. என்னங்க சார் உங்க சட்டம்,'' என ஆவேசப்பட்ட மித்ரா, ''ரெண்டு நாளைக்கு முன்னாடி புதுசா வந்தே பாரத் ரயில் விட்டாங்கள்ல. அந்த ரயிலுக்கு 'தடபுடல்' வரவேற்பு கொடுத்தாங்க. இதுல கலந்துக்க, ஆளுங்கட்சி சவுத் விஐபி, கார்ப்ரேஷன் விஐபி களுக்கு அழைப்பு கொடுத்தும், வரலையாம்,''
''ஆனா, கார்ப்ரேஷன் தோழர் விஐபி, நார்த் விஐபி, அப்புறம் பா.ஜ. நிர்வாகிங்க எல்லாம் கலந்துக்கிட்டாங்களாம். ஆனா, சிறப்பு விருந்தினரா கலந்துக்க அழைப்பு கொடுத்திருந்த ஆளுங்கட்சி விஐபி வராததால, யாரை வச்சு நிகழ்ச்சி நடத்துறதுன்னு தெரியாம, ரயில்வே ஆபீசர்ஸ் கொஞ்சம் தடுமாறிட்டாங்க. அப்புறமா ஒரு ஐடியாவில, ஒவ்வொரு கட்சிக்காரங்களும் தனித்தனியாக மலர்த்துாவி வந்தே பாரத் ரயிலுக்கு வரவேற்பு கொடுக்க வச்சிட்டாங்க...'' என்றாள்.
''என்ன தான் 'அரசியல்' இருந்தாலும், வந்தே பாரத் ரயிலுக்கு, மக்கள்கிட்ட வரவேற்பு குறையல பார்த்தீயா'' என்றாள் சித்ரா.
'போலீஸ்' அரசியல் ''கரெக்ட் மித்து...'' ஆமோதித்த சித்ரா, ''மூன்றாவது கண் மட்டும் இல்லீன்னா, தினம் ஒரு கொலை நடக்கும் போல...'' என வேறு மேட்டருக்கு தாவினாள்.
''என்னக்கா சொல்றீங்க, விவரமா சொல்லுங்க...? ஆர்வமானாள் மித்ரா.
''போன வாரம், அரிசிக்கடை வீதியில நின்னுக்கிட்டு இருந்த ஒரு லேடிக்கிட்ட, ஒருவர் பேசிட்டு இருந்திருக்காரு. அப்போ, அவர் மறைச்சு வச்சிருந்த அரிவாள் கீழே விழுந்திருக்கு. இத பக்கத்துல இருந்த சிசிடிவி கேமராவில கவனிச்ச ஒரு கடைக்காரரு, அந்த ஆசாமியை விரட்டியதோடு, சவுத் போலீசுக்கு 'கம்ப்ளைன்ட்' பண்ணிட்டாரு. விசாரிச்சதுல, அந்த வாலிபர் லேடியை ஒருதலையா 'லவ்' பண்ற விஷயம் தெரிஞ்சிருக்கு. மூன்றாவது கண் மட்டும் இல்லாம இருந்திருந்தா, அங்க பெரிய களேபரமே நடந்திருக்கும்,'' என்றாள் சித்ரா.
''போலீஸ் கட்டுப்பாட்டு அறையை கவனிக்கிற பெரிய ஆபீசரோட, 'அட்ராசிட்டி' தாங்க முடியலையாம். மெடிக்கல் லீவுல இருக்கற போலீஸ்காரங்களையும் டியூட்டிக்கு வரச் சொல்றாராம். அடிக்கடி ஈரோட்ல இருக்கற தன்னோட வீட்டுக்கு, கவர்மென்ட் ஜீப்பை எடுத்துட்டு போயிடறாராம். டீசலும் கவர்மென்ட் காசு தான். இதுபோக கூட வேல செய்யுற போலீஸ்காரங்கள 'வாடா... போடா'ன்னு திட்றாராம். அவரோட அட்ராசிட்டி தாங்க முடியாம, ஒரு சில போலீஸ், வேற யூனிட்டுக்கு 'டிரான்ஸ்பர்' வாங்கிட்டே ஓடிட்டாங்களாம்...'' என்றாள் சித்ரா.
பிளாஸ்க்கிலிருந்து டீ ஊற்றி குடித்த மித்ரா, ''அக்கா, வாகன தணிக்கையில மரியாதையில்லாம, போலீஸ்காரங்க பேசுறதால, பலரும் மன உளைச்சல்ல இருக்காங்களாம்,'' என்றாள்.
'சிவில்' அரசியல் ''இது எங்கடி?''
''சிட்டி லிமிட்ல உள்ள 'செக் போஸ்ட்'ல ராத்திரி நேரத்துல 'செக்கிங்' செய்யும் போலீஸ்காரங்க, வயசு வித்தியாசம் பார்க்காம பப்ளிக்கை ஒருமையில பேசுறது, 'உன்ன பார்த்தா பெண்டிங் கேஸ் அக்யூஸ்ட் மாதிரி இருக்குதுனு உருவ கேலி செய்றாங்களாம். இதனால, பலரும் கடும் மன உளைச்சல்ல இருக் காங்களாம்,'' என்றாள் சித்ரா.
''இப்படி எந்த போலீஸ் ஆபீசர் கேட்கிறாருன்னு பார்த்து, டிஸ்ட்ரிக்ட் அதிகாரி நடவடிக்கை எடுப்பாரா?'' என கோபப்பட்ட மித்ரா, ''நாச்சிபாளையம் ஸ்டேஷன் ஆபீசர், சிவில் வழக்கை விசாரிக்கிறாராம். அதுமட்டுமல்லாம, ரெண்டு சைடும் கல்லா கட்ற வேலையில ஈடுபடுகிறாராம். சமீபத்தில கூட, ஒரு கேஸ்-ல, நல்லா கல்லா கட்டியதாக பேச்சு அடிபடுகிறது. ஸ்டேஷன்ல வச்சு, 'சிவில்' கேஸ் விசாரிக்க கூடாதுன்னு, அதிகாரி சொல்லியும் இவரு, எதயும் காதுல வாங்காம, இப்படியே 'வினோதமா' நடந்துக்குறாராம்,'' என்றாள் மித்ரா.
''டிஸ்க்ட்ரிக்ட் ஆபீசர் சாட் டைய சுத்துனார்னா பரவாயில்ல...'' என்ற சித்ரா, ''லிங்கேஸ்வரர் ஊருக்கு போன வாரம் பா.ஜ. தலைவர் வந்தாரல்ல. அப்போ, பக்கத்திலுள்ள புதுப்பாளையம் வில்லேஜில இருந்து தோழர் கட்சிக்காரங்க நெறைய பேரு பா.ஜ.வுல சேர்ந்துட்டாங்களாம். இதனால, ஓட்டு நிறைய போயிடுச்சுன்னு தெரிஞ்சு, தோழர்கள் அப்செட் ஆயிட்டாங்களாம்...'' என்றதும், ''அக்கா நான் கிளம்பறேன்,'' என்றவாறு புறப்பட்டாள் மித்ரா.

