தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/வாராவாரம்/சித்ரா...மித்ரா (திருப்பூர்)/ அமைச்சர் முன் பெண் ஆவேசம்

 அமைச்சர் முன் பெண் ஆவேசம்

 அமைச்சர் முன் பெண் ஆவேசம்


ADDED : ஜூன் 23, 2026 07:46 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 23, 2026 07:46 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

''மித்து... சி.எம். விஜய் பிறந்த நாளை, த.வெ.க.காரங்க செமயா கொண்டாடினாங்களாமே... ஆனா, ஆரவாரமா இல்லாம நல உதவி, அன்னதானம்னு கொண்டாடுனது திருப்தியா இருக்கு...'

சொல்லிக்கொண்டேவந்தாள் சித்ரா.

''ஆமாக்கா... இப்ப அவங்கதானே ஆளுங்கட்சி; மாவட்டப் பொறுப்பு மினிஸ்டர் அருண்ராஜ் படுவேகமா இருக்காருக்கா...

''மெடிக்கல் காலேஜ் ஹாஸ்பிட்டல்ல வார்டுகள்ல சுத்தம் இல்லைன்னு முதல்வர் தனிப்பிரிவுக்குப் புகார்கள் போயிருக்குக்கா... ஞாயித்துக்கிழமை மினிஸ்டர் வருவாருன்னு வெள்ளிக்கிழமை நைட்டே சொல்லியிருக்காங்க. ஆனா, மினிஸ்டரோ, சனிக்கிழமை அதிகாலை நாலரை மணிக்கே ட்ரெய்ன்ல வந்து இறங்கீட்டாருக்கா...''

''அப்போ சர்ப்ரைஸ் விசிட்டா மித்து?''

''ஆமாக்கா... காலைல அஞ்சு மணிக்கே ஒரு 'உயர்' பொறுப்புல இருக்கிற டாக்டர் மூலமா ஹாஸ்பிடலுக்குத் தகவல் பறக்கவும், பதறி அடிச்சு ரெடி பண்ணியிருக்காங்க.

''மினிஸ்டர் நேரா கழிவறை வரைக்கும் போய் செக் பண்ணியிருக்காரு. அப்போ ஒரு பெண், பிரசவ வார்டுல சுத்தம் பண்ண 200 ரூபாய் லஞ்சம் கேக்குறாங்கன்னு மினிஸ்டர்கிட்ட தைரியமா சொல்லிட்டாங்க.

''டென்ஷனான அமைச்சர், டீன்கிட்ட கோபப்பட்டாராம். அப்புறம் நீங்க ஒரு பைசா லஞ்சம் கொடுக்க வேண்டியதில்ல.. மீறிக் கேட்டா துணிச்சலா கம்ப்ளெய்ன்ட் பண்ணுங்கன்னு புகார் கொடுத்த பெண்கிட்ட மினிஸ்டர் சொன்னாராம். ஹாஸ்பிடல் ஸ்டாப் எல்லாம் பயந்துபோய்நின்னாங்களாம்...

''அம்மா உணவகத்துல சமைச்ச உணவை 'சாம்பிள்' எடுத்து வைக்கணும்னு ஆர்டர் போட்ருக்காரு.

''ஒரு பில்டிங் மாடில சுவத்தைத் தொட்டப்பவே பூச்சு பெயர்ந்து விழுந்துருச்சாம்... கான்ட்ராக்டரை அங்கேயே வச்சு வெளுத்து வாங்கிட்டாரு''

தெருவிளக்கு ஊழல் ''ஊரக வளர்ச்சித்துறை ஆபீசர்ஸ் ரெண்டு பேரு பஞ்சாயத்து ஆபீஸ்கள்ல புதுசா தெருவிளக்கு வாங்கணும்னா, அவங்க சொல்ற குறிப்பிட்ட டீலர்ட்டதான் வாங்கணும்னு ஊராட்சி செயலாளர்களைக் கட்டாயப்படுத்துறாங்களாம் மித்து.

''விளக்கு தேவை இல்லைன்னா கூட வாங்கி ஸ்டாக் வைங்க, பில்லை நாங்க பாஸ் பண்றோம், கமிஷனை மட்டும் கொடுங்கன்னு அன்புக் கட்டளை போடுறாங்களாம்...''

''ஊழல் இல்லாத நிர்வாகம்னு சொன்னாலும், இவங்க மாற மாட்டாங்கக்கா...பொறுப்பு மினிஸ்டர் சாட்டையைச் சுழற்றுவார்னு நம்புவோம்.

''இன்னொரு சீரியஸான காமெடி; கார்ப்பரேஷன் ெஹல்த் டிபார்ட்மென்ட்ல புதுசா சேர்ந்த ஒரு ஹெல்த் இன்ஸ்பெக்டர், 'ஏங்க... மாசாமாசம் வர்ற மாமூல் ஏன் இன்னும் எனக்கு வரலை'ன்னு சீனியர்கிட்ட கேட்டாராம்''

''ஆமாமா... நானும் கேள்விப்பட்டேன்க்கா... அதுக்கு அந்த சீனியர், 'தம்பி, அதெல்லாம் அப்போ... இப்ப நிலைமை சரி இல்ல, ஏதாவது பேசி வேலைக்கு உலை வச்சுக்காதே'ன்னு அட்வைஸ் பண்ணுனாராம்''

சித்ரா சிரித்தாள்.

இன்ஸ்பெக்டர் மீது 'சார்ஜ்' ''சித்ராக்கா... அந்த 15ம் நம்பர் பாளையம் ஸ்டேஷன்ல பெண் இன்ஸ்பெக்டர், அவரோட நெருங்கிய உறவினரோட மேரேஜ்க்காக 10 நாள் லீவு கேட்டிருக்காரு. ஆனா, உயரதிகாரிகள் லீவு கொடுக்கல. லீவு கொடுக்கலன்னா உடனே, அவரே பதிவேட்டுல எழுதி வச்சுட்டுத் தன்னிச்சையா லீவு எடுத்துட்டுப் போயிட்டார்னு நாம பேசுனம்ல.

''ஏற்கனவே மூணு இன்ஸ்பெக்டர்கள் பணில இல்லைங்கிறதாலயும், திடீர்னு கேட்டதாலயும்தான் லீவு கொடுக்க முடியலைன்னு உயரதிகாரிகள் சொல்றாங்க.

''இப்ப அந்த பெண் இன்ஸ்பெக்டருக்கு 'சார்ஜ்' தீட்டிட்டாங்க... கேட்டா, இந்த மாதிரித் தவறுகள் முன்னுதாரணமாயிடக் கூடாதுங்கற அக்கறைன்னு சொல்றாங்களாம்.

''ஸ்டேஷன்ல இருக்குற ரைட்டர்ல இருந்து எஸ்.ஐ வரைக்கும் யார் லீவு கேட்டாலும் இந்த இன்ஸ்பெக்டர் அம்மா கண்டுக்கவே மாட்டாராம். அப்படிப்பட்டவர் தனக்கு லீவு கிடைக்கலைன்னு இப்படி நியாயம் பேசலாமான்னு கீழ்பணியாளர்கள் முணுமுணுக்கிறாங்க...

காலை 6 மணிக்கே சரக்கு ''ஒரு குட் நியூஸ்க்கா... நமக்கு இல்ல... 'குடி'மகன்களுக்கு... பல்லடம் ரோடு நொச்சிபாளையம் பிரிவுல முன்னாடி பார் இருந்த இடத்துல இப்ப புதுசா எப்.எல். 2 பார் வந்திருக்கு. ஆனா, 11 மணிக்கு பார் திறக்கிற வரைக்கும் நம்ம ஆளுங்களுக்குப் பொறுமை கிடையாதே... பழைய பார் ஊழியர்கள் காலைல 6 மணிக்கே சாக்கு மூட்டைல சரக்கோட ஆஜராயிடுறாங்க. இவங்கதான் இப்ப விடியற்காலைக் 'குடி'மகன்களின் கண் கண்டதெய்வமாம்''

''அடக் கொடுமையே... அவிநாசி பஞ்சாயத்து யூனியன் ஆபீஸ்ல ஆட்களே இல்லாம எப்படித்தான் வேலை நடக்குதோ தெரியல மித்து... அங்க சம்பளம் வாங்குற ரெண்டு டெபுடி ஆபீசர்ஸ்ல ஒருத்தர் கலெக்டர் ஆபீஸ்லயும், இன்னொருத்தர் பி.ஓ. ஆபீஸ்லயும் வேலை பாக்குறாங்க. ஆபீஸ் அசிஸ்டென்ட் ஒருத்தர் கலெக்டர் கேம்ப் ஆபீஸ்லயும், இன்னொருத்தர் பி.ஓ. வீட்லயும் வேலைசெய்யுறாங்க. டைப்பிஸ்ட் வேற ஆபீஸ்ல இருக்காரு. ஆபீஸ்ல ஆளே இல்லாம பொதுமக்கள் தவிக்கிறாங்க...''

இறக்கிவிடப்பட்ட மாணவி ''தாராபுரத்துல இருந்து தேர்பட்டி பிரிவுக்கு அரசு பஸ்ல எட்டாம் வகுப்பு மாணவி டிக்கெட் எடுத்திருக்காங்க. ஆனா, கண்டக்டர் தேர்பட்டி ஸ்டாப்புக்கு மூணு கி.மீ முன்னாடியே ஒட்டன்சத்திரம் பிரிவுல சிறுமியை இறக்கிவிட்டுட்டுப் போயிட்டாருக்கா...

''மாணவி அழுதுகிட்டே நடந்து வந்ததைப் பார்த்து, பொதுமக்கள் மறியல் பண்ணியிருக்காங்க. விஷயம் தாராபுரம் போக்குவரத்து அதிகாரிகளுக்குத் தெரிந்தும் 'கமுக்கமா' மூடி மறைச்சுட்டாங்க...''

''அப்றம், அவிநாசி சாவக்கட்டுப்பாளையத்துல திடீர்னு மக்னா யானை புகுந்துருச்சு, பார்த்தியா மித்து''

''ஆமாக்கா... பாவம், அதுங்க வழித்தடத்தை மனுஷங்க ஆக்கிரமிச்சுட்டாங்க. அப்புறம் யானை என்ன, சிறுத்தையே ஊருக்குள்ள வந்தாலும் ஆச்சரியப்படுறதுக்கில்ல!''

மித்ரா 'தத்துவம்' பேச சித்ரா வீட்டுக்குக் கிளம்பினாள்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us