ADDED : ஏப் 16, 2025 08:15 AM

'கே.டி.எம்.,' நிறுவனம், '390 என்டியூரோ ஆர்' என்ற அதன் புதிய ஆப்ரோட் பைக்கை அறிமுகப்படுத்தி உள்ளது. இந்த பைக்கின் விலை, '390 அட்வெஞ்சர்' பைக்கை விட 31,000 ரூபாய் அதிகம்.
இன்ஜின், சேசிஸ், சஸ்பென்ஷன் உள்ளிட்டவை '390 அட்வெஞ்சர்' பைக்கில் இருந்து எடுக்கப்பட்டவை. இந்த பைக், குறைந்த எடையில், டர்ட் பைக்கை போன்ற டிசைனில் வடிவமைக்கப்பட்டுள்ளது. 253 எம்.எம்., கிரவுண்ட் கிளியரன்ஸ், 860 எம்.எம்., சீட் உயரம், 9 லிட்டர் பெட்ரோல் டேங்க் ஆகியவை வழங்கப்படுகின்றன. இதன் எடை, '390 அட்வெஞ்சர் ' பைக்கை விட 6 கிலோ குறைவாக, 177 கிலோவில் உள்ளது.
மற்றபடி, 21 மற்றும் 18 அங்குல அலாய் சக்கரங்கள், ஸ்போக் வீல், ஸ்ட்ரீட் மற்றும் ஆப்ரோட் என இரு ரைட் மோடுகள், 4.2 அங்குல டி.எப்.டி., டிஸ்ப்ளே, சிங்கிள் சீட், 285 மற்றும் 240 எம்.எம்., டிஸ்க் பிரேக்குகள், ஸ்மார்ட் போன் இணைப்பு, டர்ன் பை டர்ன் நேவிகேஷன், ஏ.பி.எஸ்., வசதி உள்ளிட்ட பல அம்சங்கள் இதில் உள்ளன. ஆனால், ட்யூப்லெஸ் டயர்கள் வழங்கப்படுவதில்லை. இந்த பைக்கிற்கு, கவாசாக்கி 'கே.எல்.எக்ஸ்., - 230' பைக் போட்டியாக உள்ளது.

