ADDED : ஜன 29, 2025 08:58 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
'ஹோண்டா மோட்டார்சைக்கிள்ஸ்' நிறுவனம், 2025க்கான புதிய 'ஆக்ட்டிவா 110' ஸ்கூட்டரை அறிமுகப்படுத்தி உள்ளது. இது, கடந்த 20 ஆண்டுகளில், அதிகம் விற்பனையான ஹோண்டா இருசக்கர வாகனம் ஆகும். இந்த ஸ்கூட்டர் 6 நிறங்களிலும், 3 வகையிலும் வந்துள்ளது. இதன் விலை, 2,266 ரூபாய் உயர்ந்து, 80,950 ரூபாயாக உள்ளது.
இந்த 2025 மாடல் ஸ்கூட்டரில், குறிப்பிடத்தக்க மேம்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பைக்கிலிருந்து வெளிவரும் உமிழ்வுகளை கண்காணிக்கும், ஸ்கூட்டரின் 'ஆன்போர்டு டயக்நாஸ்டிக்ஸ்' அமைப்பு மேம்படுத்தப்பட்டுள்ளது. புதிய 4.2 அங்குல டி.எப்.டி., டிஸ்ப்ளே, டைப் சி சார்ஜிங் போர்ட் ஆகியவையும் இணைக்கப்பட்டுள்ளன. இன்ஜின் உள்ளிட்ட இதர உபகரணங்களில் எந்த மாற்றமும் இல்லை.