'ஏர்கிராஸ் எக்ஸ்' எஸ்-.யு.வி., ஐந்து ஸ்டார் பெற்ற முதல் சிட்ரான் கார்
'ஏர்கிராஸ் எக்ஸ்' எஸ்-.யு.வி., ஐந்து ஸ்டார் பெற்ற முதல் சிட்ரான் கார்
UPDATED : அக் 08, 2025 09:22 AM
ADDED : அக் 08, 2025 08:24 AM

'சிட்ரான்' நிறுவனம், அதன் 'சி3 ஏர்கிராஸ்' எஸ்.யு.வி., காரை மேம்படுத்தி, 'ஏர்கிராஸ் எக்ஸ்' என்ற புதிய மாடலில் அறிமுகம் செய்துள்ளது. இந்த கார், ஐந்து மற்றும் ஏழு சீட்டர் வகையில் வந்துள்ளது. இது, பாரத் என்கேப் கிராஷ் டெஸ்ட்டில், ஐந்து ஸ்டார்களை பெறும் முதல் சிட்ரான் கார் ஆகும்.
'சி3 ஏர்கிராஸ்' காரில் அம்சங்கள் குறைவாக இருந்தன. அதனால், இந்த மாடல் காரில், லெதரால் அலங்கரிக்கப்பட்ட டேஷ் போர்டு, 10.25 மற்றும் 7 அங்குல டிஸ்ப்ளேக்கள், எல்.இ.டி., பிரொஜெக்டர் பாக் லைட்கள், க்ரூஸ் கன்ட்ரோல் வசதி, வென்ட்டிலேட்டட் சீட்கள், வாகன விபரங்களை தெரிந்து கொள்ள 'காரா ஏஐ' என்ற செயற்கை நுண்ணறிவு, புஷ் பட்டன் ஸ்டார்ட் வசதி உள்ளிட்ட அம்சங்கள் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளன. கூடுதல் 25,000 ரூபாய்க்கு, 360 டிகிரி கேமரா வழங்கப்படுகிறது.
பாதுகாப்புக்கு, ஆறு காற்று பைகள், காற்று அழுத்தம் கண்காணிப்பு அமைப்பு, ஹில் ஹோல்டு அசிஸ்ட் உள்ளிட்டவை அடிப்படையாக இருக்கின்றன. இந்த கார், 1.2 லிட்டர் என்.ஏ., மற்றும் டர்போ பெட்ரோல் இன்ஜின்களில் வருகிறது.
![]() |
மொத்தம் நான்கு மாடல்களில் வரும் இந்த காரில் 6 - ஸ்பீடு மேனுவல் மற்றும் டார்க் கன்வர்ட்டர் ஆட்டோ கியர்பாக்ஸ் வழங்கப் படுகின்றன. இந்த கார், 'பாரஸ்ட் கிரீன்' என்ற புதிய நிறத்தில் கிடைக்கிறது.