'அப்பாச்சி ஆர்.டி.எக்ஸ்.,' டி.வி.எஸ்.,ன் முதல் அட்வெஞ்சர் டூரர் பைக்
'அப்பாச்சி ஆர்.டி.எக்ஸ்.,' டி.வி.எஸ்.,ன் முதல் அட்வெஞ்சர் டூரர் பைக்
UPDATED : அக் 22, 2025 08:25 AM
ADDED : அக் 22, 2025 08:04 AM

'டி.வி.எஸ்.,' நிறுவனம், 'அப்பாச்சி ஆர்.டி.எக்ஸ்.,' என்ற முதல் அட்வெஞ்சர் டூரர் பைக்கை அறிமுகம் செய்துள்ளது. பெரும்பாலும் டூரிங் செய்ய உருவாக்கப்பட்டுள்ள இந்த பைக்கில், சிறிதளவில் ஆப்ரோடிங் செய்ய முடியும். இது, பேஸ், டாப் மற்றும் பி.டி.ஒ., என மூன்று மாடலில் வந்துள்ளது.
இந்த பைக்கில் 'ஆர்.டி., எக்ஸ்.டி., - 4' என்ற புதிய 299.1 சி.சி., லிக்விட் கூல்டு இன்ஜின் பயன்படுத்தப்படுகிறது. இது, 8.2 வினாடியில் 100 கி.மீ., வேகத்தை எட்டும் திறன் உடையது. இந்த இன்ஜினோடு, 'பை டைரக்ஷனல் குயிக் ஷிப்டர்' வசதியுடன் 6 - ஸ்பீடு கியர் பாக்ஸ் மற்றும் 'ஸ்லிப்பர் கிளட்ச்' இணைக்கப்பட்டுள்ளன.
![]() |
இந்த பைக்கில், முழு எல்.இ.டி., லைட்டுகள், சீட் உயரம் 835 எம்.எம்., அட்ஜெஸ்ட்டபிள் யு.எஸ்.டி., போர்க் மற்றும் மோனோ ஷாக் சஸ்பென்ஷன்கள், 19 மற்றும் 17 அங்குல அலாய் சக்கரங்கள், டூயல் பர்பஸ் ட்யூப்லெஸ் டயர்கள், 5 அங்குல டி.எப்.டி., டிஸ்ப்ளே, ஸ்மார்ட்போன் இணைப்பு வசதியுடன் வரும் கூகுள் மேப்ஸ் மற்றும் கோ ப்ரோ இணைப்பு அம்சங்கள் உள்ளிட்டவை வருகின்றன.
பாதுகாப்பை பொறுத்தவரை, டூயல் சேனல் ஏ.பி.எஸ்., டிராக்ஷன் கன்ட்ரோல், க்ரூஸ் கன்ட்ரோல் வசதிகள், ரேலி மோடு உட்பட நான்கு ரைட் மோடுகள் ஆகியவை அடிப்படை அம்சங்களாக வந்துள்ளன. இந்த பைக், ஐந்து நிறங்களில் கிடைக்கிறது.