UPDATED : நவ 19, 2025 08:14 AM
ADDED : நவ 19, 2025 08:07 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
'ஆடி' நிறுவனத்தின் 'க்யூ 3, க்யூ 3 ஸ்போர்ட்பேக் மற்றும் க்யூ 5' எஸ்.யூ.வி., கார்கள், 'சிக்னேச்சர் லைன்' என்ற புதிய எடிஷனில் அறிமுகமாகி உள்ளன. இந்த எடிஷன், 'டெக்னாலஜி' என்ற மாடலுக்கு மட்டுமே கிடைக்கிறது.
இதில், காரின் வெளிப்புற மற்றும் உட்புற அலங்காரங்கள் மேம்படுத்தப்பட்டுள்ளன. க்யூ 3 கார்களுக்கு 18 அங்குல சக்கரங்களும், க்யூ 5 காருக்கு 19 அங்குல சக்கரங்களும் வழங்கப்படுகின்றன.
காரின் கதவை திறக்கும் போது தரையில் படும் 'ஆடி' அடையாள லைட்டுகள், டிரைவர் பெடலுக்கு ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் கவர், பார்க் அசிஸ்ட் வசதி, பின்புற பயணிகளுக்கு இரு சார்ஜிங் போர்ட்டுகள், கேபினுக்குள் நல்ல வாசனை வழங்க டிஸ்பென்சர் என கூடுதல் அம்சங்கள் சேர்க்கப்பட்டுள்ளன.

