ADDED : ஜன 29, 2025 09:01 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
'ஆடி' நிறுவனம், அதன் மேம்படுத்தப்பட்ட 'ஆர்.எஸ்., க்யூ8' ஸ்போர்ட்ஸ் காரை அடுத்த மாதம் அறிமுகப்படுத்த உள்ளது. இந்நிலையில், இதன் முன்பதிவுகள் துவங்கி உள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இதை, 5 லட்சம் ரூபாய் செலுத்தி முன்பதிவு செய்து கொள்ளலாம். இணையதளத்தில் முன்பதிவு செய்ய, ஆடி இந்தியா வலைதளத்திலோ அல்லது 'மை ஆடி கனெக்ட்' என்ற செயலியின் வாயிலாகவோ முன்பதிவை மேற்கொள்ளலாம்.
இந்த கார், இந்நிறுவனத்தின் அதிவேக 'ஸ்போர்ட்ஸ் கூபே' கார் ஆகும். இந்த காரில், 4 லிட்டர், வி - 8, டுவின் டர்போ 'டி.எப்.எஸ்.ஐ.,' பெட்ரோல் இன்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இது, 640 ஹெச்.பி., பவரையும், 850 என்.எம்., டார்க்கையும் வெளிப்படுத்துகிறது.