ADDED : மார் 12, 2025 08:43 AM

'பஜாஜ்' நிறுவனம், 'பஜாஜ் கோகோ' என்ற மின்சார ஆட்டோ பிராண்டை துவக்கி உள்ளது. இந்த பிராண்டின் கீழ், 'பி5009, பி5012 மற்றும் பி7012' என மூன்று வகை பயணியர் மின்சார ஆட்டோக்களை அறிமுகம் செய்துள்ளது. இதன் விலை, 3.26 லட்சம் ரூபாய் முதல் 3.83 லட்சம் ரூபாய் வரை அறிவிக்கப்பட்டுள்ளது. 24,999 ரூபாய் முன்பணம் செலுத்தி, இந்த ஆட்டோவை பெற்றுக்கொள்ளலாம்.
ஆரம்ப விலை ஆட்டோவில், 9.2 கி.வாட்.ஹார்., பேட்டரி முதல் உயர்ந்த விலை ஆட்டோவில் 12.1 கி.வாட்.ஹார்., பேட்டரி வரை வழங்கப்படுகிறது. ஒரு சார்ஜில், 171 கி.மீ., முதல் 251 கி.மீ., வரை பயணிக்கலாம். முழுமையாக சார்ஜ் செய்ய 4 மணி நேரம் 30 நிமிடம் தேவைப்படுகிறது.
கூடுதலாக 3,200 ரூபாய் செலுத்தினால், ஹில் ஹோல்டு அசிஸ்ட், பார்க் அசிஸ்ட் வசதி உள்ளிட்டவை வழங்கப்படுகின்றன. மற்றபடி, டிரம் பிரேக்குகள், ரீஜென் மோடுகள், டிஜிட்டல் எல்.சி.டி., டிஸ்ப்ளே, ஸ்மார்ட்போன் இணைப்பு வசதி, எல்.இ.டி., லைட்டுகள் உள்ளிட்ட அம்சங்கள் இதில் உள்ளன. இந்த ஆட்டோவுக்கு, 5 ஆண்டு உத்தரவாதம் வழங்குகிறது.