பென்ஸ் இ - கிளாஸ் லாங் வீல் பேஸ் உறுமும் வி - 6 டர்போ, தெறிக்கும் ஸ்பீடு
பென்ஸ் இ - கிளாஸ் லாங் வீல் பேஸ் உறுமும் வி - 6 டர்போ, தெறிக்கும் ஸ்பீடு
ADDED : அக் 16, 2024 08:28 AM

'மெர்சிடிஸ் பென்ஸ்' நிறுவனம், அதன் 'இ - கிளாஸ் லாங் வீல் பேஸ்' செடான் காரை புதுப்பித்து அறிமுகப்படுத்தி உள்ளது. இந்த கார், பெட்ரோல் மற்றும் டீசல் வகையிலும், ரியர் வீல் டிரைவ் மற்றும் ஆல் வீல் டிரைவ் வகையிலும் வந்துள்ளது.
இ - கிளாஸ் அணிவகுப்பில், முதல் முறையாக அதிக செயல்திறன் கொண்ட இ - 450 என்ற புதிய வகை கார் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த காரில் மட்டும், 3 லிட்டர், வி - 6 சிலிண்டர், டர்போ பெட்ரோல் ஹைப்ரிட் பெட்ரோல் இன்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இந்த இன்ஜின், 380 ஹெச்.பி., பவரையும், 550 என்.எம்., டார்க்கையும் வெளிப்படுத்துகிறது.
காரின் நீளம் 12 எம்.எம்., உயரம் 13 எம்.எம்., வீல் பேஸ் 15 எம்.எம்., அதிகரிக்கப்பட்டுள்ளது. பென்ஸ் இ.க்யூ., மின்சார கார்களில் வழங்கப்பட்டுள்ள முன்புற டிசைன், விசேஷ '3 - டி ஸ்டார்' கிரில் மற்றும் டெயில் லைட், 18 அங்குல ஏ.எம்.ஜி., ஸ்போர்ட்ஸ் அலாய் சக்கரம், அதிகரிக்கப்பட்டுள்ள குரோம் அலங்காரம் ஆகிய வெளிப்புற மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.
கூடுதலாக, 36 டிகிரி ரிக்லைன் பின்புற சீட்டுகள், டேஷ் போர்டில் மூன்று டிஸ்ப்ளேக்கள், 17 ஸ்பீக்கர் 3டி பர்மெஸ்டர் சவுண்ட் சிஸ்டம், 8 காற்றுப்பைகள், மேம்படுத்தப்பட்டுள்ள பிரேக் அசிஸ்ட் அமைப்பு ஆகியவை வழங்கப்பட்டுள்ளன.
முதல் முறையாக, பி.எம்.டபுள்யூ., நிறுவனத்தின் 5 - சீரிஸ் லாங் வீல் பேஸ் கார் இதற்கு போட்டியாக வந்துள்ளது. இதன் விலை, பென்ஸ் இ - கிளாஸ் காரை விட, 5.6 லட்சம் ரூபாய் குறைவு.