UPDATED : ஜூலை 23, 2025 08:56 AM
ADDED : ஜூலை 23, 2025 08:49 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
'மெர்சிடிஸ் பென்ஸ்' நிறுவனம், அதன் 'ஜி.எல்.எஸ்., 450' - எஸ்.யூ.வி., காரை, 'ஏ.எம்.ஜி., லைன்' மாடலில் அறிமுகம் செய்துள்ளது. இந்நிறுவனத்தின் அதிவேக கார்களான 'ஏ.எம்.ஜி.,' கார்களில் வரும், பிரத்யேக வெளிப்புற மற்றும் உட்புற டிசைன் இந்த காருக்கு வழங்கப்பட்டுள்ளது.
![]() |
ஸ்போர்ட்ஸ் பம்பர்கள், கார் நிறத்தில் வரும் வீல் ஆர்ச்சுகள் மற்றும் பக்கவாட்டு அடிப்புறம், ட்வின் ஸ்போக் ஏ.எம்.ஜி., ஸ்டீயரிங் வீல், ப்ளோர் மேட்கள், ஸ்டெயின்லெஸ் ஸ்டீலில் வரும் பிரேக், ஆக்சிலரேட்டர் பெடல்கள் உள்ளிட்டவை இதில் வரும் மாற்றங்கள். இதர அம்சங்களில் எந்த மாற்றமும் இல்லை.


