ADDED : டிச 18, 2024 09:34 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
'பி.எம்.டபிள்யு.,' நிறுவனம், மேம்படுத்தப்பட்ட 'எம்.340.ஐ.,' ஸ்போர்ட்ஸ் செடான் காரை அறிமுகப்படுத்தி உள்ளது. இந்த காரின் விலை, 2 லட்சம் ரூபாய் உயர்ந்துள்ளது.
இன்ஜின், டிசைன், பாதுகாப்பு, அம்சங்கள் ஆகியவற்றில் எந்த மாற்றமும் இல்லை. ஆனால், சொகுசான பயணத்திற்கு, அடாப்டிச் சஸ்பென்ஷன்கள் அடிப்படை வசதியாக வழங்கப்பட்டுள்ளது. உட்புறத்தில் புதிய ஏசி வென்ட்டுகள், மேம்படுத்தப்பட்ட இன்போடெயின்மென்ட் அமைப்பு ஆகியவை வழங்கப்பட்டுள்ளன. கூடுதலாக, நீளம் மற்றும் சிவப்பு நிறங்களில் இந்த கார் வந்துள்ள நிலையில், நிறங்கள் மொத்தம் நான்காக உயர்ந்துள்ளன.
இந்த காரின் விலை, 72.90 லட்சம் ரூபாயாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு போட்டியாக, 'மெர்சிடிஸ் - ஏ.எம்.ஜி., சி - 43' மற்றும் ஆடி எஸ்.5., ஆகிய இரு கார்களும் உள்ளன.