UPDATED : அக் 30, 2024 09:46 AM
ADDED : அக் 30, 2024 09:11 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
'ஹோண்டா மோட்டார்சைக்கிள்ஸ் அண்டு ஸ்கூட்டர்ஸ்' நிறுவனம், அதன் முதல் 'சி.பி., 300 - எப் பிளக்ஸ் ப்யூயல்' பைக்கை அறிமுகப்படுத்தி உள்ளது. இது, இந்தியாவின் முதல் 300 சி.சி., பிளக்ஸ் ப்யூயல் பைக்காகும். இந்த பைக், 85 சதவீதம் வரை எத்தனால் கலப்பு எரிபொருளில் இயங்கும்.
பெட்ரோல் சி.பி., 300 - எப் பைக்கை ஒப்பிடுகையில், சஸ்பென்ஷன், சேசிஸ், டயர்கள், இன்ஜின், விலை, அம்சங்கள் உள்ளிட்டவற்றில் எந்த மாற்றமும் இல்லை. எரிபொரு ளில் எத்தனால் அளவு 85 சதவீதத்தை கடந்தால், இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டரில் வழங்கப்பட்டுள்ள பிரத்யேக இன்டிகேட்டர் மூலம் தெரிந்துகொள்ளலாம். இந்த பைக் இரு நிறங்களில் கிடைக்கிறது.
ஹோண்டாவின் பிக் விங் விற்பனை மையங்களில் இந்த பைக்கின் முன் பதிவு ஆரம்பமாகி உள்ளது.

