UPDATED : ஜூலை 01, 2026 07:44 AM
ADDED : ஜூலை 01, 2026 07:33 AM

'சிட்ரான்' நிறுவனம், 'ஏர்கிராஸ் கம்பர்ட் எடிஷன்' என்ற சிறப்பு எடிஷன் காரை அறிமுகம் செய்துள்ளது. இந்த காரின் விலை, அடிப்படை மாடலைவிட ரூ. 20,000 அதிகம்.
உட்புற கேபின் பிரீமியம் காரை போல மேம்படுத்தப்பட்டு, பயணிகளுக்கு வசதியான பயணத்தை வழங்க, இந்த எடிஷன் கார் வந்துள்ளது.கூடுதல் அம்சங்களை சேர்க்க, 'யூ பேக், பிளஸ் பேக், மேக்ஸ் பேக்' என மூன்று வகையான பேக்குகள் வழங்கப்படுகின்றன. 'யூ பேக்'கிற்கு 36,600 ரூபாயும், 'பிளஸ் பேக்'கிற்கு, 8,460 ரூபாயும், 'மேக்ஸ் பேக்'கிற்கு 40,000 ரூபாயும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
![]() |
'யூ பேக்'கில், 10 அங்குல டச் ஸ்கிரீன், ஒயர்லெஸ் இணைப்பு வசதிகள், ரிவர்ஸ் பார்க்கிங் கேமரா, குரோம் டோர் ஹேண்டில், பாக் லைட், வீல் கவர் கிடைக்கின்றன. 'பிளஸ் பேக்'கில், ரிவர்ஸ் கேமரா, ஒயர்லெஸ் சார்ஜர், குரோம் டோர் ஹோணடில் உள்ளிட்ட அம்சங்கள் கிடைக்கின்றன. 'மேக்ஸ் பேக்'கில், ஜே.பி.எல்., சவுண்ட் சிஸ்டம், முன்புற, பின்புற டேஷ் கேம், ஓட்டுனர் எச்சரிக்கை உள்ளிட்ட அம்சங்கள் கிடைக்கின்றன. ஏர்கிராஸ் காரில் இயந்திர மாற்றங்கள் எதுவும் இல்லை.

