ADDED : ஜூலை 16, 2025 08:01 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
'நிஸான்' நிறுவனம், அதன் 'மேக்னைட் சி.என்.ஜி., - எஸ்.யூ.வி.,யை அறிமுகப்படுத்தி உள்ள நிலையில், அதற்கான 'சி.என்.ஜி., கிட்' வழங்கும் இரண்டாம் கட்ட பணியை, ஆறு மாநிலங்களில் துவக்கி உள்ளது. இதில், தமிழகம், ராஜஸ்தான், பீஹார், ஜார்க்கண்ட், மத்திய பிரதேசம், சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்கள் அடங்கும்.
இந்த சி.என்.ஜி., கிட்டை, 1 லிட்டர், என்.ஏ., பெட்ரோல் இன்ஜின் மற்றும் மேனுவல் கியர் பாக்ஸ் கொண்ட மேக்னைட் காருக்கு மட்டுமே பொருத்த முடியும்.
மத்திய அரசால் அங்கீகரிக்கப்பட்ட 'மோட்டோஜென்' என்ற நிறுவனம், சி.என்.ஜி., கிட்டை வழங்குகிறது. மேக்னைட் சி.என்.ஜி., காரின் விலை, 75,000 ரூபாய் அதிகரித்து, 6.89 லட்சம் ரூபாயாக உயர்ந்துள்ளது.

