ADDED : மார் 05, 2025 01:25 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
'எம்.ஜி., மோட்டார்' நிறுவனம், அதன் 'காமெட்' மின்சார காரை, 'பிளாக்ஸ்டார்ம்' என்ற சிறப்பு எடிஷனில் அறிமுகப்படுத்தி உள்ளது. இந்த காரின் விலை, 'எக்ஸ்க்லுாசிவ்' மாடல் காரை விட, 13,000 ரூபாய் அதிகமாக உள்ளது.
காரின் வெளிப்புறத்தில், முழு கருப்பு நிற பெயிண்ட், சிவப்பு நிற அலங்காரங்கள், கருப்பு நிற குரோமால் பொறிக்கப்பட்ட பெயர் அடையாளம் ஆகியவை வழங்கப்பட்டுள்ளன. உட்புறத்தில், கருப்பு நிற கேபின், சிவப்பு தையல் கொண்ட கருப்பு நிற பிரீமியம் லெதர் சீட்டுகள் உள்ளன. மற்றபடி வேறு எந்த மாற்றமும் இல்லை.
இந்த காரின் விலை, 9.81 லட்சம் ரூபாயாக உள்ளது. பேட்டரி வாடகை முறையில், காரின் விலை 7.80 லட்சம் ரூபாய் ஆகும். கூடுதலாக, ஒரு கி.மீ.,க்கு பேட்டரி வாடகை, 2.50 ரூபாய் செலுத்த வேண்டும்.