ADDED : டிச 25, 2024 08:23 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
'ஹூண்டாய்' நிறுவனம், 'கிரெட்டா இ.வி.,' என்ற புதிய மின்சார காரை அடுத்த மாதம் நடக்க உள்ள பாரத் மொபிலிட்டி எக்ஸ்போ வாகன கண்காட்சியில் அறிமுகப்படுத்த உள்ளது. இந்த கார், கிரெட்டா இன்ஜின் காரை அடிப்படையாக கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது.
இந்த காரின் முன்பதிவு அடுத்த மாதம் துவங்க இருக்கும் நிலையில், வினியோகம் பிப்ரவரி முதல் ஆரம்பமாகிறது. இந்த காருக்கு, மஹிந்திராவின் பி.இ., - 6இ, டாடா கர்வ் இ.வி., எம்.ஜி., இசட்.எஸ்., இ.வி., மாருதியின் இ - விட்டாரா ஆகிய கார்கள் போட்டியாக உள்ளன.

