ADDED : ஜூலை 10, 2024 08:31 AM

'லேண்ட் ரோவர்' பிராண்ட், 'டிபென்டர் ஆக்டா' என்ற அசாதாரண செயல்திறன் கொண்ட ஆப்ரோட் எஸ்.யு.வி அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த கார் டிபென்டர் ஆக்டோ மற்றும் ஆக்டா எடிஷன் ஒன் என்ற இரு வகையில் வருகிறது. டிபென்டர் அணிவகுப்பில் இதுவே, சக்தி வாய்ந்த கார் ஆகும்.
அதிகரிக்கப்பட்ட காரின் உயரம், அகலம் மற்றும் சக்கர வளைவுகள், 20 அங்குல அலாய் சக்கரங்கள் ஆகியவை, இது ஆப்ரோட் மான்ஸ்டர் என்பதை சுட்டிக்காட்டுகிறது. இதற்காகவே, காரின் அடிப்புறத்தில் அதீத பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. ஒரு மீட்டர் அளவிற்கு தண்ணீர் இருந்தாலும், எந்த சலனமும் இன்றி எளிதாக கடக்கும்.
எடை குறைந்த சொகுசு பேப்ரிக் சீட்டுகள், இழுவை குறைந்த பகுதிகளில் அதிக ஆக்ஸிலரேஷன் பெற ஆக்டா மோட், நிலப்பரப்பிற்கு ஏற்ப காரின் செயல்திறனை தீர்மானிக்கும் டெரைன் ரெஸ்பான்ஸ் மோட், 400 எம்.எம்., டிஸ்க் பிரேக்குகள் என பல ஆப்ரோடு அம்சங்கள் இந்த காரில் உள்ளன.
விலை - ரூ. 2.65 கோடி முதல் ரூ. 2.85 கோடி

