sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, செப்டம்பர் 06, 2025 ,ஆவணி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

வாராவாரம்

/

கடையாணி

/

இந்திய விவசாயத்திற்கு பிரத்யேக இயந்திரம் உருவாக்கம்

/

இந்திய விவசாயத்திற்கு பிரத்யேக இயந்திரம் உருவாக்கம்

இந்திய விவசாயத்திற்கு பிரத்யேக இயந்திரம் உருவாக்கம்

இந்திய விவசாயத்திற்கு பிரத்யேக இயந்திரம் உருவாக்கம்


ADDED : ஜூன் 25, 2025 09:32 AM

Google News

ADDED : ஜூன் 25, 2025 09:32 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

இந்தியாவின் கட்டுமான இயந்திரங்கள் சந்தையில் உங்கள் பங்கு என்ன?

கடந்த ஆண்டில் 65,000 இயந்திரங்களை உற்பத்தி செய்துள்ளோம். இதில் 14,000 இயந்திரங்கள் வளர்ந்த நாடுகள் உட்பட 130 நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ள நிலை யில், அமெரிக்காவுக்கு மட்டும் 10,000 இயந்திரங்கள், ஏற்றுமதி செய்யப்பட்டன.

நாடு முழுதும், 10,000 ஊழியர்கள் பணியாற்றுகின்றனர்.வடிவமைப்பு மையத்தில், 700 பொறியாளர்கள் உள்ளனர்.உலகளவில் உற்பத்தியாகும் இயந்திரங்களில் 75 சதவீதம், இந்த வடிவமைப்பு மையத்தில் வடிவமைக்கப்பட்டவை.

நாடு முழுவதும் 750 விற்பனை மையங்கள் செயல்பட்டில் உள்ளன. நடப்பாண்டில் இதுவரை, 15,000 'பி.எஸ்., - 5', இயந்திரங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன

இந்திய விவசாயத் துறைக்கு என தனியாக எதுவும் திட்டம் உள்ளதா?

இந்தியாவில் விவசாய நிலங்களின் அளவு சிறிது சிறிதாக இருக்கிறது இதனால், 150 ஹெச்.பி., பவர் கொண்ட ஜே.சி.பி., டிராக்டர்களை இங்கு கொண்டு வர முடியவில்லை. எனவே இந்திய விவசாயத் துறைக்கு ஏற்ப, பிரத்யேக இயந்திரத்தை உருவாக்கி வருகிறோம். நிறுவனத்தின் முதலீடு மற்றும் உள்நாட்டுமயமாக்கல் எந்த அளவில் உள்ளது?

உள்நாட்டில், கடந்த மூன்று ஆண்டுகளில், 1,000 கோடி ரூபாய் முதலீடு செய்யப்பட்டது. நடப்பு நிதியாண்டில், 250 முதல் 300 கோடி ரூபாய் வரை முதலீடு செய்ய உள்ளோம். மொத்த உற்பத்தியில், 75 சதவீதமும், பேக்ஹோ லோடர் உற்பத்தியில், 96 சதவீத உதிரிபாகங்களும் உள்நாட்டு மயமாக்கப்பட்டுள்ளன.

உங்கள் ஹைட்ரஜன் இயந்திரம் எப்போது செயல்பாட்டுக்கு வரும்?

ஆசியாவின் முதல் ஹைட்ரஜன் இன்ஜினை, கடந்த ஆண்டில் அறிமுகப்படுத்தினோம். இந்த தொழில்நுட்பத்தை உருவாக்க, 1,000 கோடி ரூபாய் முதலீடு செய்யப்பட்டது. டீசலுக்கு பதிலாக ஹைட்ரஜனை கொண்டு இயங்கும் இத்தகைய இன்ஜினை, இதற்கான உள்கட்டமைப்பு வளரும் சமயத்தில் செயல்பாட்டுக்கு கொண்டு வர தயாராக இருக்கிறோம். எங்களிடம், மின்சார மினி எக்ஸ்கவேட்டர்கள் உள்ளன.

இந்திய சந்தை, ஜே.சி.பி.,க்கு எவ்வளவு முக்கியம் என கருதுகிறீர்கள்?

இங்கு விற்பனையாகும், இரண்டு இயந்திரங்களில், ஒரு இயந்திரம், ஜே.சி.பி.,யாக உள்ளது. நாடு முழுதும் விற்பனையாகும் நான்கு பேக்ஹோ லோடர்களில், மூன்று எங்கள் இயந்திரம் ஆகும். உள்நாட்டில், ஆறு உற்பத்தி ஆலைகள் உள்ளன. அதில், ஹரியானா மாநிலத்தில் உள்ள பரிதாபாத் ஆலை, உலகின் பெரிய பேக்ஹோ லோடர் உற்பத்தி ஆலை ஆகும்.

இந்திய கட்டுமான இயந்திர சந்தை, உலகளவில் மூன்றாவதாக உள்ளது. 2030க்குள், இரண்டாவது இடத்தை பிடிக்கும்.

தமிழகத்திற்கு எவ்வளவு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது?

பெரும்பாலான இயந்திர அறிமுகங்கள், தென் மாநிலங்களில் தான் செய்யப்படுகிறது. இங்குள்ள மக்கள், தொழில்நுட்பங்களை எளிதாக புரிந்து கொள்கின்றனர். அவர்களின் கருத்து சரியாக இருந்தால், நிச்சயம் எந்த இயந்திரமும், இந்திய அளவில் வெற்றிபெறும். சென்னையில் எங்களின் அலுவலக கிளை உள்ளது.

சென்னை, மதுரை, திருச்சி உள்ளிட்ட நகரங்களில், எங்கள் முகவர்கள், 25 ஆண்டுகளுக்கு மேலாக இயங்கி வருகின்றனர். அண்மையில், ஓசூரில், புதிய விற்பனை மையம் அமைக்கப்பட்டது.ஸ்ரீபெரும்புதுாரில் புதிய விற்பனை மையம் அமைய உள்ளது. தென் மாநிலங்களில் மட்டும், 25 சதவீத விற்பனைகள் செய்யப்படுகின்றன.

இத்துறையில், உங்களின் தனித்துவம் என்ன?

ஜே.சி.பி., இயந்திரங்கள் நாட்டின் எந்த மூலையில் இருந்தாலும், இயந்திர இணைப்பு மையம் வாயிலாக, அதன் செயல்பாடுகளை ஒவ்வொரு நாளும் எங்களால் கண்காணிக்க முடியும். இயந்திர பயன்பாட்டு நேரம், நாள், எரிபொருள் பயன்பாடு, என அனைத்தும் எங்களால் கவனிக்க முடியும். ஏதேனும் கோளாறு ஏற்பட்டால், வாடிக்கையாளர்களை முகவர்களே தொடர்பு கொண்டு, உடனடியாக அது சரி செய்து தரப்படும்.

ஸ்மார்ட் போன் இணைப்பு செயலியின் வாயிலாக, வாடிக்கையாளர்கள் தங்கள் இயந்திர விபரங்களையும் தெரிந்து கொள்ள முடியும்.

* கடந்த 10 ஆண்டு களில், 40 சதவீதம் அளவுக்கு எரிவாயு செலவை குறைத்து உள்ளோம்

* ஜே.சி.பி., இயந்தி ரங்கள் நாட்டின் எந்த மூலையில் இருந்தாலும், அதை எங்களால் கண்காணிக்க முடியும்.

தீபக் ஷெட்டி,ஜே.சி.பி., நிர்வாக இயக்குநர், தலைமை செயல் அதிகாரி






      Dinamalar
      Follow us