ADDED : நவ 05, 2025 08:01 AM
'மஹிந்திரா' நிறுவனம், 'சாம்சங் இந்தியா' நிறுவனத்துடன் இணைந்து, அந்நிறுவன மின்சார கார் களுக்கு, டிஜிட்டல் சாவி வசதியை அறிமுகம் செய்து உள்ளது. அதாவது, 'சாம்சங் கேலக்ஸி' ஸ்மார்ட்போன் வாயிலாக, காரை திறந்து ஸ்டார்ட் செய்ய முடியும்.
இந்த டிஜிட்டல் சாவியை, 'சாம்சங் வாலட்' என்ற செயலியின் வாயிலாக பயன்படுத்தலாம். இந்த வகை சாவியை, காரை திறந்து மூடுவது, இன்ஜின் ஸ்டார்ட் செய்வது மட்டுமின்றி, நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் பகிர்ந்து கொள்ளவும் முடியும். ஸ்மார்ட்போன் தொலைந்து போனால், செயலியின் வாயிலாக இந்த டிஜிட்டல் சாவியை நீக்கி விடலாம்.
இந்த வசதி, காருக்கு ராணுவ தர பாதுகாப்பு வழங்குவதாக சாம்சங் நிறுவனம் உறுதி அளிக்கிறது. பாதுகாப்பு எண்களை பயன்படுத் தினால் மட்டுமே, ஸ்மார்ட்போனில் உள்ள டிஜிட்டல் சாவியை பயன்படுத்த முடியும். மஹிந்திராவின் குறிப்பிட்ட மின்சார கார்களுக்கு இந்த வசதி விரைவில் அறிமுகப்படுத்தப்படும் என கூறப்பட்டுள்ளது.

