'டிப்ளாஸ் மேக்ஸ்' ஸ்கூட்டர் 14 லட்சம் கி.மீ., ஓட்டி சோதனை
'டிப்ளாஸ் மேக்ஸ்' ஸ்கூட்டர் 14 லட்சம் கி.மீ., ஓட்டி சோதனை
ADDED : ஜன 15, 2025 01:26 PM

'நியுமரோஸ் மோட்டார்ஸ்' எனும் ஸ்டார்ட் அப் நிறுவனம் 'டிப்ளாஸ் மேக்ஸ்' என்ற புதிய மின்சார ஸ்கூட்டரை காட்சிப்படுத்தி உள்ளது. இந்த ஸ்கூட்டர், பாரத் மொபிலிட்டி வாகன கண்காட்சியில் அறிமுகப்படுத்தப்பட்டு, விலை அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இந்த ஸ்கூட்டர், நம்பகமான, பாதுகாப்பான மற்றும் நிலையானது என்பதை சுட்டிக்காட்ட, இந்நிறுவனம், 13.90 லட்சம் கி.மீ., தூரத்திற்கு சோதனை செய்துள்ளது. குளிர், வெப்பம் அதிகம் உள்ள நிலப்பரப்புகள் முதல், கரடுமுரடான சாலைகள் மற்றும் தண்ணீர் வரை பல சோதனை ஓட்டங்கள் மேற்கொள்ளப்பட்டது
ஒரு சார்ஜில், 140 கி.மீ., தூரம் வரை பயணம் செய்ய முடியும் எனவும்; பேட்டரியை முழு சார்ஜ் செய்ய 3 முதல் 4 மணி நேரம் ஆகும் எனவும் இந்நிறுவனம் தெரிவித்துள்ளது. இதன் டாப் ஸ்பீட், 63 கி.மீ.,ஆக உள்ளது. இரு டிஸ்க் பிரேக்குகள், இரு பேட்டரிகள், எல்.இ.டி., லைட்டுகள், திருட்டு எச்சரிக்கை, நேவிகேஷன் என பல அம்சங்கள் இந்த ஸ்கூட்டரில் வழங்கப்பட்டுள்ளன.