UPDATED : அக் 30, 2024 09:59 AM
ADDED : அக் 30, 2024 09:03 AM

வாகன நிறுவனங்கள் தீபாவளியை முன்னிட்டு, வரும் 31ம் தேதி வரை, சலுகைகளை வழங்கி உள்ளன-.
மாருதி சுசூகி நிறுவனம், ஷிப்ட் பிளிட்ஸ் எடிஷன் என்ற காரை அறிமுகப்படுத்தி, 60,143 ரூபாய் மதிப்புள்ள இலவச அம்சங்களை சலுகையாக வழங்கி உள்ளது.
மஹிந்திரா நிறுவனம், தார் காருக்கு, 1.56 லட்சம் ரூபாயும், பொலேரோ நியோ காருக்கு, 1.34 லட்சம் ரூபாயும், எக்-ஸ்.யூ.வி., 700 காருக்கு 3.10 லட்சம் ரூபாயும் சலுகை வழங்கப்பட்டுள்ளது.
டாடா கார்களுக்கு, 2.5 லட்சம் ரூபாய் வரை சலுகை வழங்கப்படுகிறது. ஏத்தர் 450 சீரிஸ் ஸ்கூட்டருக்கு, 55,000 ரூபாயும், டி.வி.எஸ்., ஜூப்பிட்டர் ஸ்கூட்டருக்கு 10,000 ரூபாயும் சலுகைகள் வழங்கப்பட்டுள்ளன.
கார்ப்பரேட் ஊழியர்களுக்காக, ஹோண்டாவின் ஹார்னெட் மற்றும் சி.பி.200.எக்ஸ்., பைக்குகளுக்கு 5,000 ரூபாய் வரை சலுகை வழங்கப்பட்டுள்ளது. கூடுதலாக, பைக் பரிமாற்றம் சலுகை 2,000 ரூபாய் வழங்கப்படுகிறது.

