ADDED : ஜன 22, 2025 08:19 AM

'மாருதி சுசூகி' நிறுவனம், அதன் முதல் மின்சார காரான 'இ - விட்டாரா' எஸ்.யூ.வி., காரை காட்சிப் படுத்தி உள்ளது. இந்த கார், 'டொயோட்டா' நிறுவன கூட்டணியில் உருவாக்கப்பட்ட கட்டமைப்பு தளத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
டிசைன் பொறுத்த வரை, பெட்ரோல் விட்டாரா காருக்கும், இந்த காருக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. இது, புதிய கட்டமைப்பு தளத்தில் உருவாக்கப்பட்டுள்ளது. இதில், 49 மற்றும் 61 கி.வாட்.ஹார்., என இரு பேட்டரிகள் உள்ளன. பேட்டரி வகையை பொறுத்து மோட்டார் பவர் மாறுபடுகிறது. இதன் ரேஞ்ச், 500 கி.மீ.,க்கும் அதிகமாக இருப்பதாக இந்நிறுவனம் கூறுகிறது. இந்த கார், ரியர் வீல் மற்றும் ஆல் வீல் டிரைவ் அமைப்புகளில் வருகிறது.
மொத்தம் 10 நிறங்களில் வரும் இந்த காரில், 18 அங்குல அலாய் சக்கரங்கள், 10.25 அங்குல இன்போடெயின்மென்ட் அமைப்பு, சிங்கிள் ஜோன் ஆட்டோ கிளைமேட் கண்ட்ரோல், முன்புற எலக்ட்ரானிக் மற்றும் வென்ட்டிலேட்டட் சீட்டுகள், பின்புற ரிக்லைன் சீட்டுகள், 7 பாதுகாப்பு பைகள், அடாஸ் லெவல் - 2 பாதுகாப்பு என பல அம்சங்கள் உள்ளன. இந்த கார், டாடா கர்வ் இ.வி., மற்றும் எம்.ஜி., இசட்.எஸ்., இ.வி., ஆகிய கார்களுக்கு போட்டியாக உள்ளது.