sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

வாராவாரம்

/

கடையாணி

/

மின்சார கார்கள் 2025

/

மின்சார கார்கள் 2025

மின்சார கார்கள் 2025

மின்சார கார்கள் 2025


UPDATED : ஜன 08, 2025 08:48 AM

ADDED : ஜன 08, 2025 08:32 AM

Google News

UPDATED : ஜன 08, 2025 08:48 AM ADDED : ஜன 08, 2025 08:32 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மின்சார கார்கள், வாகனத்துறையின் எதிர்காலமாக நம்பப்படுகிறது. இந்தியாவின் முன்னணி நிறுவனமான மாருதி முதல் சொகுசு கார் நிறுவனமான பென்ஸ் வரை, நடப்பாண்டில் 15க்கும் அதிகமான மின்சார கார்களை அறிமுகப்படுத்த உள்ளன.

மாருதி சுசூகி இ - விட்டாரா


இது, 'மாருதி சுசூகி' நிறுவனம் அறிமுகப்படுத்தும் முதல் மின்சார கார் ஆகும். 'சுசூகி, டொயோட்டா' ஆகிய இரு நிறுவனங்கள் கூட்டணியில், இந்த கார் உருவாக்கப்பட்டுள்ளது. இது உலக சந்தைக்கான கார் என்பதால், மாருதியின் குஜராத் ஆலையில் உற்பத்தி செய்து, ஜப்பான் மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்கு ஏற்றுமதியும் செய்யப்பட உள்ளது.

இ-விட்டாரா (எதிர்பார்ப்பு - மார்ச்)

பேட்டரி - 49 & 61 கி.வாட் ஹார்.,

ரேஞ்ச் - 550 கி.மீ.,

Image 1366514

ஹூண்டாய் கிரெட்டா இ.வி.,


இந்த கார், வரும் ஜனவரி 17ம் தேதி அறிமுகமாக உள்ளது. வடிவமைப்பு, 'கிரெட்டா' இன்ஜின் காரை போன்று இருந்தாலும், மின்சார கார் என்பதை தனித்துவப்படுத்த புதிய நிறம், பம்பர் டிசைன், உட்புற டிசைன் ஆகியவை மாற்றப்பட்டுள்ளன. எஸ்.யூ.வி., கார்களில், அதிகம் விற்பனையாகும் காராக 'கிரெட்டா' கார் உள்ள நிலையில், 'கிரெட்டா இ.வி.,' கார் இந்த ஆண்டின் அதிகம் எதிர்பார்க்கப்படும் காராக மாறி உள்ளது.

கிரெட்டா இ.வி., (எதிர்பார்ப்பு - ஜனவரி)

பேட்டரி - 42 & 51.4 கி.வாட் ஹார்.,

ரேஞ்ச் - 473 கி.மீ.,

Image 1366515

மஹிந்திரா எக்ஸ்.இ.வி., - 7இ


இது,'எக்ஸ்.யூ.வி., 700' எஸ்.யூ.வி., காரின், மின்சார வகை காராகும். அண்மையில் அறிமுகமான 'எக்ஸ்.இ.வி., 9-இ' காரில் வரும் அதே பேட்டரி, இதர தொழில்நுட்பங்கள் மற்றும் பாதுகாப்பு அம்சங்கள் ஆகியவை இதில் வழங்கப்படுகின்றன. மஹந்திரா மின்சார கார்களில் நவீன எலக்ட்ரானிக்ஸ் உபகரணங்கள் பயன்படுத்தப்படுவதால், இதன் நம்பகத் தன்மை குறித்து பலர் கேள்வி எழுப்புகின்றனர்.

எக்ஸ்.இ.வி., 7இ (எதிர்பார்ப்பு - ஏப்ரல்)

பேட்டரி - 59 & 79 கி.வாட் ஹார்.,

ரேஞ்ச் - 656 கி.மீ.,

Image 1366517


டாடா சியாரா இ.வி.,


இந்த எஸ்.யூ.வி., 2000த்திற்கு பிறகு மீண்டும் அறிமுகமாக உள்ளது. அப்போது, இரண்டு கதவுகள் மட்டுமே இருந்த நிலையில், தற்போது ஐந்து கதவுகளில் வர உள்ளது. முதலில் மின்சார வகையில் வரும் இந்த கார், நடப்பாண்டு இறுதியில், இன்ஜின் வகையில் வர உள்ளது.

சியாரா இ.வி., (எதிர்பார்ப்பு - மே)

பேட்டரி - 60 - 80 கி.வாட் ஹார்.,

ரேஞ்ச் - 500 கி.மீ., (குறைந்தபட்சம்)

Image 1366518


ஹாரியர்


இது, 'ஹாரியர்' இன்ஜின் காரின், மின்சார வகை கார் ஆகும். மின்சார கார் என்பதை தனித்துவப்படுத்த பிரத்யேக டிசைன் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. இது, கர்வ், பஞ்ச், நெக்ஸான் இ.வி., கார்கள் உருவாக்கப்பட்ட, அதே கட்டுமான தளத்தில் தான் கட்டமைக்கப்படுகிறது.

ஹாரியர் இ.வி., (எதிர்பார்ப்பு - மார்ச்)

பேட்டரி - 60 கி.வாட் ஹார்.,

ரேஞ்ச் - 500 கி.மீ., (குறைந்தபட்சம்)

Image 1366519


எம்.ஜி., சைபர்ஸ்டர்


இது, 'எம்.ஜி.,' நிறுவனத்தின், முதல் மின்சார ஸ்போர்ட்ஸ் காராகும். இந்த கார், உள்நாட்டில் இறக்குமதி செய்யப்பட்டு விற்பனை செய்யப்பட உள்ளது. அதுவும், குறிப்பிட்ட விற்பனை மையங்களில் மட்டுமே, விற்பனைக்கு வர உள்ளது.

சைபர்ஸ்டர் (எதிர்பார்ப்பு - ஜனவரி)

பேட்டரி - 77 கி.வாட் ஹார்.,

ரேஞ்ச் - 580 கி.மீ.,

Image 1366520

டொயோட்டா அர்பன் க்ரூஸர் இ.வி.,


இது, 'டொயோட்டா' அடையாளம் கொண்ட 'இ - விட்டாரா' மின்சார கார் ஆகும். டொயோட்டா மின்சார கார் என்பதை தனித்துவப்படுத்த, குறிப்பிடத்தக்க வடிவமைப்பு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. இந்த காரும், மாருதியின் குஜராத் ஆலையில் தான் உற்பத்தி செய்யப்படுகிறது.

டொயோட்டா (எதிர்பார்ப்பு - ஜூலை)

பேட்டரி - 49 & 61 கி.வாட் ஹார்.,

ரேஞ்ச் - 550 கி.மீ.,

Image 1366521


கியா கரன்ஸ் இ.வி.,


கரன்ஸ் இன்ஜின் காரை ஒப்பிடுகையில், இந்த மின்சார காருக்கு, வெளிப்புற மற்றும் உட்புற மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. கிரெட்டா இ.வி., காரில் வரும் அதே பவர்டிரைன் அமைப்பு, இந்த காரிலும் வழங்கப்பட வாய்ப்பு உள்ளது.



கரன்ஸ் இ.வி., (எதிர்பார்ப்பு - ஏப்ரல்)

பேட்டரி - 45 கி.வாட் ஹார்.,

ரேஞ்ச் - 400-500 கி.மீ.,






      Dinamalar
      Follow us